Sunday, April 11, 2010

'ஞானி' களின் பார்வையில் முட்டை
முட்டையைப் பார்த்ததும்,
"அவித்துச் சாப்பிடலாமா, பொறித்துச் சாப்பிடலாமா..." என்று சிந்திப்பார், புலன் இச்சைகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும்
அஞ்ஞானி.
"சூரியனை, கிரகங்கள் இந்த வடிவில் தானே சுற்றி வருகின்றன..." என்று சிந்திப்பார், எந்த உண்மைக்கும் நிறுபனம் கேட்கும் விஞ்ஞானி.
"முட்டை ஓடு தனியே கிடப்ப, பருவம் வந்ததும் பறவை பறந்து போவது போலத் தான் இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு..." என்று சிந்திப்பார், பிறவிச் சுழற்ச்சியிளிருந்து விடுபட்ட ஞானி.

பங்குச்சந்தை அடுத்த வாரம்
நிபிட்டி கடந்த ஒன்பது வாரங்களாக, ஒவ்வொரு வாரத்தின் முடிந்த அளவை விட அதிகமாகவே முடிந்து வருகிறது. சென்ற வாரம் நிபிட்டி இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அடைந்தது மட்டுமல்லாமல், கடந்த முன்று வாரங்களாக மேல் நோக்கி செல்ல இயலாமல் தடுத்த இடர் புள்ளிகளையும் உடைத்து, உயர்ந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. எனக்கு தெரிந்த வரை அடுத்த வாரம் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள் இரண்டு. ஒன்று பணம் சார்ந்த கொள்கை மற்றும் இன்போசிசின் காலாண்டு முடிவுகள். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்த வார பங்குசந்தையை வழி நடுத்தும். நிபிட்டி முக்கிய இடர் புள்ளிகளை எல்லாம் உடைத்து நன்றாக மேலே உயர்ந்து முடிந்திருப்பதாலும் அந்நிய முதலிட்டாளர்கள் தொடர்ச்சியாக பங்குகளை வாங்கிய வண்ணம் இருப்பதாலும், பங்குசந்தைக்கு வேறு எந்த பாதகமான செய்தி ஏதும் இல்லாதபட்சத்தில் , அடுத்த வாரம் நிபிட்டி புதிய உச்ச அளவுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கலாம். விலை வரை படத்தில் நிபிட்டி மேல் நோக்கிச் செல்லக்கூடிய அனுகுலமான அமைப்பே உருவாக்கி உள்ளது. அடுத்த வாரம், நிபிட்டி வர்த்தகத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளி அளவுகள் இவை: நிபிட்டி மேல் நோக்கி செல்வதற்கு தடையாய் இருக்கும் முக்கிய இடர் புள்ளி அளவுகள் 5355 மற்றும் 5383 . மேலும், கீழ் நோக்கி செல்லாதிருப்பதர்க்கு பாதுகாப்பாக இருக்கும் பாதுகாப்பு புள்ளி அளவுகள் 5301 மற்றும் 5288 களாகும். என் அறிவுக்கு எட்டிய வரை அடுத்த வாரம் பங்குசந்தையின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய புள்ளி அளவாக 5383 புள்ளி அளவு இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நிபிட்டி வர்த்தகமாகும் அளவு
மேல் நோக்கிச் சென்றால் 5301 - 5620
கீழ் நோக்கிச் சென்றால் 5300 - 5180
வருகைக்கு நன்றி!

No comments:

Post a Comment