Sunday, December 8, 2019

"AMAZON"னில் மின்னூல் வெளியீடு


வணக்கம்,
தாங்கள் என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி..!!!. மகிழ்ச்சி..!!!
தங்களின் விமர்சனங்கள் எனக்கு மகிழ்சியும்,  ஊக்கமும் அளித்தன; அதற்கு அன்புகலந்த நன்றி..!!!

சில கவிதைகளை தொகுத்து, "subastories  கவிதை தொகுப்பு" என்ற தலைப்பில், மின்னூலாக (ebook) ,  AMAZON இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.AMAZON இணையதளத்திற்கு சென்று subhastories அல்லது  sudhakar santhanam என்று type செய்தால் காணலாம்.

என்றும் தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்,
சுதாகர்.

https://www.amazon.in/SubhaStories-Tamil-Sudhakar-Santhanam-ebook/dp/B07KXXFKVV/ref=sr_1_1?ie=UTF8&qid=1545624976&sr=8-1&keywords=subhastories

Monday, January 14, 2019

அன்புள்ள வாசகர்களுக்கு வணக்கம்,

"இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்..!!!"

நன்றி..!!!

Tuesday, January 8, 2019

நட்பு

காலைவெயில் போல்சிலர் கால்சுடும்வெ யில்சிலர்     
மாலைவெயில் போல்சிலர் மக்கள்  குணம்பல;
வேளை   யறிந்தால் வெயிலும் துணையன்றோ  
ஆளை யறிந்தால் அனைவரும் நட்பன்றோ
நாளை இனிதாக்கும் நட்பு  

Monday, December 31, 2018

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் ஆர்வம் உள்ளவர்கள் , முதலில், பங்குச் சந்தைக்கு தேவையான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும், பொருட்களை பயன்படுத்த அல்லது அனுபவிக்க மட்டும் , வாங்குபவர்களுக்கு , பங்குச் சந்தையை புரிந்து கொள்வது சற்று கடினம். பங்குச் சந்தை என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்வதற்கு முன், அவரவர் வாழ்க்கை முறையையும் , அதனால் வளர்த்துக் கொண்ட மனிலையையும் சற்று சிந்திக்க வேண்டும்.

ஆடை வாங்க நினைக்கிறோம். நாம் என்ன யோசிப்போம். இந்த ஆடையை இந்த விலைக்கு வாங்கலாமா. எததனை மாதங்கள் அணியலாம், என்று பயன் கருதி வாங்குவோம். இது தான் நுகர்வோர் மனநிலை.! அந்த ஆடையை அணிவதில் அலுப்பு ஏற்படும் போது அல்லது அதை இனி அணிய இயலாது என்ற நிலை ஏற்படும் போது, கிழிசல் ஏதும் இல்லையென்றால், வசதி யில்லாதவர்களுக்கு கொடுப்போம். கிழிசல் இருந்தால்,சமயலறைக்கோ வாகனம் துடைக்கவோ பயன்படுத்துவோம்.

பணம் கொடுத்துப் பொருள் வாங்கி பயன்படுத்த மட்டும் பழகியவர்களுக்கு அதை விற்று மீண்டும் பணமாக்கும் எண்ணம் பெரும்பாலும் வருவதில்லை. காரணம் நுகர்வோர் மனநிலை. இருப்பினும், சில பொருட்கள், கைபேசி, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிகள், குளிர் சாதனப் பெட்டிகள், பஞ்சு மெத்தை இருக்கைகள், வீடு, வீட்டு நிலங்கள், போன்ற சிலவற்றை நாம் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். இவற்றை பயன்படுத்துவதில் அல்லது அனுபவிப்பதில் அலுப்போ, புதிதாக வாங்க வேண்டும் என்ற விருப்பமோ உண்டாகும் போது, இவற்றை நாம் யர்ருக்காவது தானம் கொடுத்துவிட்டு புதிய பொருள் வாங்குவதில்லை; மூலையிலும் போடுவதில்லை, மாறாக, வந்த விலைக்கு விற்று மீண்டும் பணமாக மாற்றுகிறோம்.. இப்போது நாம், தெரிந்தோ தெரியாமலோ வியாபாரியாக மாறுகிறோம். இதுதான் வியாபாரி மனநிலை!

பங்குச் சந்தைக்கு தேவை, இந்த வியாபாரி மனநிலை தான். ஆனால், இந்த வியாபாரி மனநிலை அதிக நேரம் நீடிப்பதில்லை. காரணம், வாழ்நாளில் பெரும்பகுதி, பொருட்களை பயன்படுத்துவதிலும், அனுபவிப்பதிலும் கழித்தது தான். விற்று வந்த பணத்தோடு தேவையான பணம் சேர்த்து விரும்பிய பொருளை வாங்கி, பயன்படுத்த அல்லது அனுபவிக்கத் துவங்கிவிடுகிறோம்.மீண்டும் நுகர்வோர் மனநிலைக்கு மாறுகிறோம், தொடர்கிறோம்.

நமக்குள் ஒளிந்திருக்கும் வியாபாரியை மெல்ல மெல்ல வெளிக் கொண்டுவரப் பழகவேண்டும் .ஒரு வியாபாரியாக சிந்திக்கும் போது தான் பங்குச் சந்தையை புரிந்து கொள்ள முடியும். வாழ்க்கையில் பெரும்பான்மையான நேரம் நுகர்வோர் மனநிலையில் வாழ்பவர்களுக்கு, பங்குச் சந்தை என்பது குழப்பமாகத் தான் இருக்கும்.காரணம் பழக்க முறை. மனம் பழக்கத்திற்கு அடிமையானது, பங்குச் சந்தைக்கு தேவையான வியாபாரி மனநிலையை வளர்க்க பழக வேண்டும். வியாபார மனநிலையை வளர்ப்பது எப்படி; வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டே வருமானத்தைப் பெருக்கிக் கொல்வத்து எப்படி.தொடரும்.....

Thursday, December 13, 2018

கண்ணாடி மானிடர்கள்தன்முன்னால் வைத்தவற்றைத்  தன்னிலே காட்டிடும்  
கண்ணாடி போலவே   கண்ணாடி உள்ளமுள்ள
மானிடர்கள், நன்றாக வாழ்ந்தவர் இன்றைக்கு
மேனி இளைத்திருந்தால், மெச்சிமதிக் காதே; 
வறியவர்க்குத்  தக்க வரவேற்பே  நல்கும் 
எரியாதே நெஞ்சேநீ ஏதும் நிறுத்தாத
கண்ணாடி ஆகிவிடு கண்ணே! கடவுளே
துன்பத்தில் சாய்ந்திடும் தூண்!


Monday, December 3, 2018

முயற்சி

ஒன்று நினைத்து, உருட்டப்  பகடையை 
எண்ணிய படியே என்றும் விழாத 
தாயமாய், வாழ்விலும்  சற்றும் எண்ணா 
மாயங்  கள்பல வந்த வண்ணம் 
உள்ளதே ;  உள்ள  உளைச்சல் இல்லா 
உள்ளம் பெறவே, ஒருவழி உள்ளது.  
எதுவோ  நடக்குது,  எதற்கா கவோதான்  
அதுநடக் குதுமனம் அக்கணம்  நினைத்திடப்  
பழக்கம் செய்க; பலதடை வரட்டுமே  
விழவிடா துமனதை விடாது முயல்கவே 


Friday, November 23, 2018

பழக்கம்பள்ளிச் செல்லும் பாலர் புரிதல்
வல்ல மைதான் வளரா ததாலே 
சொல்லி வைத்தனர்  சிறார்க்குப் பள்ளியில்
பல்தான் விழுந்தால் பள்ளம் தோண்டிப்
புதைத்திடு மீண்டும் புதுப்பல் முளைக்கவே
கதைதான் எதைதான் காக்கப் புனைந்தது
விழுங்கி விட்டால் விளையாட் டாய்பின்
எழும்தீ  மைகள் எண்ணிச்   சொன்னது
முழுதும் அறிந்த முன்னோர் மனிதர்
பழுதற வாழவே  பழக்கம் பலவே
செய்தனர் பழகியே சிறப்பாய் வாழ்வோம்
மெய்மை அறிவு விளையும் வரையே