உள்ளது நாற்பது - மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான்.
இன்று நாம் “மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான்” அருளிய “உள்ளது நாற்பது” நூல் பற்றி காண்போம்.
கடந்த கால கசப்பான நிகழ்வுகள், மனசோர்வை உண்டாக்குகின்றன; எதிர்காலம் குறித்த பயம், கவலையை உண்டாக்குகின்றது. இன்பம் என்பது ஓர் எண்ணம்; துன்பம் என்பது ஓர் எண்ணம். எண்ணங்களை மாற்றி வேண்டியதை அடையலாம். எண்ணங்கள் உண்டாகும் இடம் மனம். எண்ணங்களை புரிந்து கொண்டு அவற்றை கையாள உள்ளது நாற்பது நூல் பேருதவி புரிகின்றது.
மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான் அறிவுறுத்துவதும் கருத்துக்கள் இரண்டு. ஒன்று நான் யார் என்ற ஆராய்சசி, மற்றோன்று இறைவனிடம் சரணாகதி அல்லது அடைக்கலம் அடைவது. உள்ளது நாற்பது நூல் இவற்றை விளங்க வைப்பதாக உள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரோடு உரையாடிய அறிஞர்கள் அந்த உரையாடல்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். உள்ளது நாற்பது நூலை படிக்கும் போது உண்டாகும் ஐயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள அந்நூல்கள் உதவியாக இருக்கும்.
மனதில் உண்டாகும் எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, ஆனால் அவற்றை கவனிப்பதும் கவனிக்காமல் தவிர்ப்பதும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு மனவலிமை தேவை; அம்மன வலிமையை தியானத்தின் மூலம் பெறலாம். சரணாகதி அல்லது அடைக்கலம் என்பது இறைவனிடம் நம் பொறுப்புக்களை ஒப்படைத்து விட்டு இறைவன் கவனித்துக் கொள்வார் என்று நம்புவது.
மெய்ப்பொருள் கண்ட செம்மல் ரமணப் பெருமான் வாழும் காலத்தில் ஓர் அறிஞர் உள்ளது நாற்பது நூலை படித்துவிட்டு பின்வருமாறு கேட்டார்
"ஐயா தாங்கள் அருளிய உள்ளது நாற்பது நூலை படித்தேன், எனக்கு புரியவில்லை". அதற்கு பெருமான் "மீண்டும் மீண்டும் படியுங்கள் அந்த சொற்கள் எல்லாம் உங்களுக்கு புரிந்துவிடும்" என்றார்.
நாமும் உள்ளது நாற்பது நூலை படித்து பயன் பெறுவோம்.
நன்றி வணக்கம்..!
“மெய்கண்ட ஞான சபை”
தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள்-அம்பத்தூர்.
இதன் காரணமாக மிகச்சிறந்த சித்த புருஷராக திரு கன்னியப்ப சுவாமிகள் மாறினார்.
திரு ஞானபிரகாசம்: 98408 12939
ஒவ்வொறு அசைவிலும் மூச்சை எவ்வாறு இணைப்பது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவாக உடல் விரிவடையும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; உடலை சுருக்கும் போது மூச்சை வெளியே விட வேண்டும். ஒரு சில ஆசனங்களுக்கு இது மாறுபடலாம், உங்கள் குருவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மூச்சை கூடுமான வரை மெதுவாகவும் ஆழமாகவும் இழுத்து விட முயலுங்கள். தொடக்கத்தில் கடுமையாக இருக்கும், பழகப் பழக எளிதாகிவிடும்.
யோக ஆசனம் பழகும் நிலைகள்.
யோக ஆசனங்களை மூன்று நிலைகளில் பழகலாம். படுத்த நிலை அல்லது கிடந்த நிலை; அமர்ந்த நிலை; நின்ற நிலை. ஒவ்வொரு நிலையிலும் பலன் வேறுபடும். முழுமையான பலன் நின்ற நிலையிலும், அதைவிட குறைவான பலன் அமர்ந்த நிலையிலும், அதைவிட குறைவான பலன் படுத்த அல்லது கிடந்த நிலையிலும் கிடைக்கும்.
உடல், மனம், எல்லா நாளும் ஒரே தன்மையில் இருப்பதில்லை. நாளுக்கு நாள் வேறுபடுகிறது. ஒரு நாள் மனம் ஊக்கத்துடனும், உடல் சுறுசுறுப்புடனும் இருக்கும். அப்படிபட்ட நாளில் நின்ற நிலையில் ஆசனங்களை பழக வேண்டும். சோர்வு தெரியாது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது நின்ற நிலை ஆசனங்கள் பழகுவது மிக மிக நல்லது. உயர் நிலை ஆசனங்கள் பழகும் போது, உடல் நன்றாக வளைந்து கொடுக்கும், எளிமையாக இருக்கும்.
சில நாள் மனம் சிறிது தளர்வாக இருக்கும். உடலிலும் சுறுசுறுப்பு சிறிது குறைந்திருக்கும். அப்படி பட்ட நாட்களில் அமர்ந்த நிலையில் ஆசன்ங்கள் பழக வேண்டும். சில நாள் மனம் மிகவும் தளர்வாக இருக்கும், உடலும் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும், அப்படிபட்ட நாட்களில் படுத்த அல்லது கிடந்த நிலையில் ஆசன்ங்கள் பழக வேண்டும்.
எந்த நிலையிலும் நீங்கள், யோக ஆசனங்கள் பழகிட வகுத்த கால அட்டவனையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உடலும் மனமும் ஒத்துழைக்காத போது அறிவின் துணை கொண்டு செயல் படுங்கள். உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்றார் போல் ஆசனங்களை பழங்குங்கள்.
ஒவ்வொறு முறையும் உடலை நான்கு வகையில், அதாவது, முன்னால் வளையும் ஆசனம், பின்னால் வளையும் ஆசனம், பக்கவாட்டில் வளையும் ஆசனம் ம்ற்றும் உடலை முறுக்கும் ஆசனம், இடம் பெற வேண்டும். வாரத்துக்கு ஒரு நாளோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, மூன்று நாட்களுக்கு ஓரு முறையோ, அன்றாடமோ யோக ஆசனம் பழகும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.
பவன முக்தாசனம் – 2 ஆம் நிலை
பவன முக்தாசன் முதல் நிலையோடு கூடுதலாக சில அசைவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். முதுகு தரையில் நன்றாக படியும் படி படுத்துக்கொள்ளுங்கள். வலது காலை மடக்கி, இடது முட்டி அருகில் வலது பாதத்தை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு கைவிரல்களை கோர்த்து, வலது முட்டியை பிடித்துக் கொள்ளுங்கள். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள். மூச்சை மெதுவாக வெளியே விட்டுக்கொண்டே, வலது கால் முட்டியை வயிற்றை நோக்கி இழுங்கள். மூச்சு முழுவதும் வெளியேறும் வரை இழுங்கள். மூச்சு முழுவதும் வெளியேறிய நிலையில், உங்கள் வலது கால் தொடை, உங்கள் வயிற்றை அழுத்திக் கொண்டிருக்கும்.
அதே நிலையில், மீண்டும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள. மூச்சை உள்ளே இழுத்து முடித்ததும், மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டு, தரையிலிருந்து தலையை துக்குங்கள்; எவ்வளவு முடியுமோ அவவளவு உயரம் துக்குங்கள். ஒரு நிலைக்கு, மேல் தரையிலிருந்து முதுகும் தானாக தூக்கும். மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே முகத்தை கால் முட்டியை நோக்கி கொண்டுவாறுங்கள். மூட்டியை, மூக்கால் தொட முயலுங்கள். தொடக்கத்தில் இயலாது, கழுத்து பகுதியில் மெல்ல வலிக்கும்; பழகப் பழக சரியாகிவிடும். இவற்றை யெல்லாம் மூச்சை வெளியே விட்டவாறு செய்ய வேண்டும்.
மூச்சு முழுவதும் வெளியேறியதும், மீண்டும் மூச்சை மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டே முதலில் முதுகை தரையில் படுக்க வைக்க வேண்டும்; பிறகு தலையை தரையில் படுக்க வைக்க வேண்டும். மூச்சு முழுவதும் வெளியேறிதும், கோர்த்த கைகளை தளர்த்தி, வலது காலை விடுவிக்கவும்; கைகளையும் கால்களையும் தரையில் கிடத்தவும். இது ஒரு சுற்று; இவ்வாறு மொத்தம் மூன்று சுற்றுகள் வலது காலில் செய்ய வேண்டும், அதே போல் இடது காலிலும் செய்ய வேண்டும்.
பிறகு,இரண்டு காலக்ளையும் ஒரே நேரத்தில் மடக்கி செய்ய வேண்டும்.. இரண்டு கைகளையும் கோர்த்துக் கொள்ளுங்கள்; இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் மடக்கிக் கொள்ளுங்கள்; கோர்த்த கைகளுக்குள் இரண்டு கால் முட்டிகளையும் கொண்டுவரவும்; மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக்கொள்ளவும். பின்பு மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டே, இரு கைகளையும் மடக்கி, இரண்டு முட்டிகளையும் மெதுவாக வயிற்றை நோக்கி இழுக்கவும். மூச்சு முழுவதும் வெளியேறிய நிலையில், உங்கள் இரு கால் தொடைகளும், உங்கள் வயிற்றை அழுத்திக் கொண்டிருக்கும்; அதே நிலையில், மீண்டும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளுங்கள.
மூச்சை மெல்ல வெளியே விட்டுக்கொண்டு, தரையிலிருந்து தலையை தூக்குங்கள்; எவ்வளவு முடியுமோ அவவளவு உயரம் தூக்குங்கள். ஒரு நிலைக்கு, மேல் தரையிலிருந்து முதுகும் தானாக தூக்கும். மூச்சை வெளியேவிட்டுக் கொண்டே உங்கள் முகத்தை இரு கால் முட்டிகளை நோக்கி கொண்டு செல்ல முயலுங்கள். மூக்கை இரு கால் முட்டிகளுக்கு இடையில் கொண்டு செல்ல முயலுங்கள். தொடக்கத்தில் இயலாது, கழுதது பகுதியில் மெல்ல வலிக்கும்; பழகப் பழக சரியாகிவிடும். இவற்றை யெல்லாம் மூச்சை வெளியே விட்டவாறு செய்ய வேண்டும்.
மூச்சை முழுவதும் வெளியே விட்டதும். மீண்டும் மூச்சை மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டே முதலில் முதுகை தரையில் படுக்க வைக்க வேண்டும்; பிறகு தலையை தரையில் படுக்க வைக்க வேண்டும். பின்பு மூச்சை வெளியே விட்டுக்கொண்டே, கோர்த்த கைகளை தளர்த்தி, இரு கால் முட்டிகளையும் விடுவிக்கவும்; கைகளையும் கால்களையும் தரையில் கிடத்தவும். இது ஒரு சுற்று; இவ்வாறு மொத்தம் மூன்று சுற்றுகள் செய்ய வேண்டும், இது தான் முழுமையான பவன முக்த ஆசனம்.
படுத்த நிலையில் கண்களை மூடி உடலை கவனிக்கவும். மூச்சு ஓட்டத்தை கவனியுங்கள்; எண்ண ஓட்டத்தை கவனியுங்கள்; இதய துடிப்பை கவனியுங்கள்; வயிறு ஏறி இறங்குவதை கவனியுங்கள்; உடலில் எந்த இடத்தில் அழுத்தம் இருக்கிறது என்று கவனியுங்கள்; பவன முக்க ஆசனம் செய்யதை நினைத்துப் பாருங்கள்; எந்த நிலையில் மூச்சு திணறல் எற்பட்டது, உடலில் நடுக்கம் எற்பட்டது, என்றெல்லாம் நினைத்துப் பாருங்கள். இரண்டு, மூன்று நிமிடம் கழித்து வேறு ஆசனம் செய்ய துவங்குகள்.
===================================================
யோகா பழகும் முறை:
நேற்று( 10-2-2019 ), சென்னை அம்பத்தூரில் உள்ள ஞானமூத்தி நகரில், தவத்திரு வள்ளல் கன்னியப்ப சுவாமிகள் அவர்களின்25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் 59வது ஆண்டு விழா, சிறப்பாக இனிதே நடந்து முடிந்தது.
புரிதல்
தலையால் தரையில் சற்று நேரம் நின்றேன்
தலைகீழாய் கண்டேன் சகலமுமே புதிய புரிதல்
No comments:
Post a Comment