செய்திகள்



புரட்சி தமிழர் கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார்🔥அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்…💐💐🎉🎉 #EPSTamilNadu🔥




















நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது

பிப்ரவரி 9,2020, ஞாயிற்றுக்கிழமை, அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த  திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள், காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்படட வேளாண் மண்டலமாக சேலத்தில் அறிவித்தார். 
இதுவே நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு கைவிட  மூல காரணமாக விளங்கியது.

அதன் படி தஞ்சாவூர், திருவாவூர், நாகபட்டிமனம் மாவட்டங்கள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அடங்கும். 

#AIADMK #EdappdiPlanisamy



மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த தினம் இன்று (24/2/2023, வெள்ளிக்கிழமை) வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 





































புரட்சி தலைவர் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் 35 
ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி 24-12-22 அன்று சிறப்பாக கொண்டாடப் பட்டது.




புரட்சி தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் (5-12-2022)





















விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!!


https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/pirattiyur-school-headmistress-bags-national-award/article35983567.ece பிரட்டியூர் பஞ்சாயத் போர்டு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை கே . ஆஷாவுக்கு தேசிய விருது. ஆசிரியர் தினமான செப்டெம்பர் 5 ஆம் தேதி ஆஷா தேவிக்கு தேசிய விருது வழங்கப்படும்.



இவர், 2010
ல் 71 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் இருந்த பள்ளியை 800 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்கள் உள்ள பள்ளியாக மாற்றியுள்ளார். கடந்த 2 ஆண்டில் 526 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
கே.ஆஷா தேவி கூறுகையில்: ஒரே ஒரு ஸ்மார்ட் போன் உள்ள குடும்பங்களுக்கு , நாங்கள் ஞாயிற்று கிழமையிலும் வகுப்பு நடத்துவோம். கூடுதலாக 16 ஆசிரியர்களை நேயமிக்க உள்ளோம். 8 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்விக்கு வேறு இடம் செல்லும் நிலையுள்ளதால் இப்பள்ளி வளாகத்துக்குளேயே உயர் நிலை பள்ளி அமைக்கவும் முயன்று கொண்டிருக்கிறோம். மாணவர்களின் நலனுக்காக மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம் விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். இந்த அங்கீகாரத்தை கொண்டு என் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பையும், கல்வி தரத்தையும் உயர்த்துவேன். MP, MLAக்கள், மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசு ஆங்கிலத்துலேயே பதில் எழுத வேண்டும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு https://twitter.com/Don_Updatez/status/1428236973412478980?s=20 மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர் அவர்களை சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.



சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்... பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானைக் குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி தொழுதலை பூஜையாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி மாணவனை சிஷ்யனாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி முறைகளை ஆச்சாரமாக்கி பத்தாம் நாளை தசமியாக்கி திருவிழாவை உற்சவமாக்கி பருவமடைதலை ருதுவாக்கி உறக்கத்தை நித்திரையாக்கி திருமணத்தை விவாகமாக்கி பயணத்தை யாத்திரையாக்கி செருப்பை பாதரட்ஷையாக்கி படையலை நைவய்தியமாக்கி பள்ளிகளை வித்யாலயமாக்கி பிள்ளைப்பேறை பிரசவமாக்கி வணக்கத்தை நமஸ்காரமாக்கி அன்பளிப்பை தட்சணையாக்கி ஒன்பதாம் நாளை நவமியாக்கி அறிவியலை விஞ்ஞானமாக்கி படிப்பித்தலை அப்பியாசமாக்கி கருவறையை கர்ப்பகிரகமாக்கி வேளாண்மையை விவசாயமாக்கி குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன. அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களை பயன்படுத்த உறுதியேற்போம். * தாய்மொழி, தமிழ்மொழியைப்பேணுவோம்... "இன்று உலக செவிலியர்கள் தினம்"

நவீன பேணுகையின் நிறுவனர் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் மே 12 ஆகும்.










மகாத்மா காந்தியடிகளின் 74வது நினைவு தினம் 30 ஜனவரி.

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி , முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரையில் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. அன்னாரின் நினைவிடத்தில் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
தமிழ் திரைப்பட நடிகர் திரு விவேக் அவர்கள், நேற்று(26/1/21) அன்று தமிழக முதல்வரை நேரில் பார்த்து மனு அளித்தார். தவத்திரு தமிழ்த் துறவி, அருட்பா தந்த பகவான் திரு வள்ளலார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 33 ஆண்டுகள் திருவற்றியூரில் உள்ள வடிவுடையம்மனை நடந்து சென்று வணங்கியுள்ளார். அவர் நடந்து சென்ற பாதையை வள்ளாலார் நெடுஞ்சாலை என்று பெயர் மாற்றம் செய்ய, கோரிக்கை மனுவை, தமிழ் திரைப்பட நடிகர் திரு விவேக் அவர்கள் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அளித்தார்.
பாமாக வரும் 29ஆம் தேதி போராட்டம். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு பாமாகவினர் 6வது கட்ட போராட்டமாக வரும் 29ஆம் தேதி கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக தரு டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.தமிழ் திரைப்பட நடிகர் திரு விவேக் அவர்கள், நேற்று(26/1/21) அன்று தமிழக முதல்வரை நேரில் பார்த்து மனு அளித்தார். தவத்திரு தமிழ்த் துறவி, அருட்பா தந்த பகவான் திரு வள்ளலார் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 33 ஆண்டுகள் திருவற்றியூரில் உள்ள வடிவுடையம்மனை நடந்து சென்று வணங்கியுள்ளார். அவர் நடந்து சென்ற பாதையை வள்ளாலார் நெடுஞ்சாலை என்று பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை மனுவை தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் அளித்தார். சசிக்கலா இன்று (27/1/21) விடுதலை ஆகிறார். 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை இன்றோடு முடிவடைகிறது. இன்று அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகிறார். இவர் முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி ஆவார். அமுமுக தலைவர் திரு டிடிவி தினகைன் அவர்களின் சகோதிரி ஆவார். சில நாட்களுக்கு முன்பு, சிறையில் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார்.
மெரினா கடற்கரையில் இன்று ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா..!!!
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இன்று சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட
வேதா இல்ல விவகாரத்தை, அவசரமாக விசாரிக்க கோரியதை மறுத்ததுள்ளது.
இன்று (27/1/21), காலை 11.00 மணியளவில், மறைந்த முன்னாள் முதல்வர் திரு செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்பட உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

விவசாயிகள் மீதான அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. - திருமாவளவன் விசிக.
டெல்லி வன்முறையின்போது டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் மரணம். டெல்லி செங்கோட்டையை, முற்றுகையிட்டனர்
டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் விவசாயிகள். ட்ரக்டர் பேரணி மூலம் செங்கோட்டையை முற்றுகையிட்டனர் விவசாயிகள். தஞ்சாவூரில் விவசாயிகள் ட்ரக்டர் பேரணி. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூரில் விவசாயிகள் ட்ரக்டர் பேரணி நடத்தினர்.

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்.

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற விவசாயிகள் போராட்டம்... விவசாயிகள் போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு..!!! டெல்லியில் விவசாயிகள் நடத்தும் ட்ரக்டர் போரட்டத்தில் காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டு வீச்சு. நண்பகல் 12.00 மணிக்கு மேல் பேரணி நடத்த அனுமதி... விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தபடி குடியரசு தினத்தன்று(26/1/21), வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நிகழ்த்த உள்ளனர். "அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..!!!"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெரியாரின் துணிச்சல் மற்றும் மன தைரியம் எனக்கு உள்ளது!” - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 46 நாட்களாகப் போராடும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்; உரிய தீர்வு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் போராட்டத்தில் குதிக்கும்: கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை
‘தமிழைக் காக்க போராடிய’ மொழிப்போர் தியாகிகள் தினம்!

தமிழ் மொழியை காக்க, உயிர் நீத்த தியாகிகளின் மொழிப்போர் தினம் இன்று.
(25/1/21)



தமிழர்களை இந்தியாவின் பிரஜைகளாக நினைக்கவில்லை.: - மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு அஇஅதிமுக தொண்டர்கள் அனைவரும் புரட்சி தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லம் மற்றும் நினைவிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்போம்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதக் காலம் அவகாசம் நீட்டிப்பு.

- தமிழக அரசு உத்தரவு

வாக்காளர் பட்டியல் ஹிந்தியில் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி. திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியில் ஹிந்தியில் இருந்தது. ஆத்த்தூர் நிலக்கோட்டை வாக்காளர் பெயர்கள் பட்டியல் ஹிந்தியில் அச்சிடப்பட்டு இருப்பதால் மக்கள் அதிர்ச்சி.  

நன்றாக சமைக்கப்பட்ட கோழிக்கறியின் மூலம் பறவைக்காய்ச்சல் பரவாது. - மத்திய அரசு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக ஜனவரி 18ஆம் தேதி வரை நீடித்தது.இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில மார்கழி மாத குளிர் நிலவவில்லை.  கடந்த 19ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை விலகியதால் தற்போது பல மாவட்டங்களில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. 

---------------------------------------------------------------------------------------------------------------------------
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் தனிப்பட்ட காரியங்களான பட்டா, முதியோர் ஓய்வு ஊதியம் போன்றவற்றை 100 நாள்களுக்குள் தீர்த்துவிடுவோம். - ஸ்டாலின் திமுக தலைவர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

பேரறிஞ்கர் அண்ணா அவர்களின் நினைவு தினம், பிரப்பிரவரி 3ஆம் தேதி 2021.


-------------------------------------------------------------------------------------------------------------------------------
திமுக ஆட்சிக்கு வந்து நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது. - முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.


--------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று மதிமுக வினர் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம்.

இன்று, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், காலை 11 மணியளவில் மதிமுக வினர், 4 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினாரால் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டி ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். இதில் மதிமுக தலைவர் திரு வைக்கோ கலந்துகொள்கிறார். 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
https://timesofindia.indiatimes.com/india/bsf-detects-second-underground-tunnel-at-international-border-in-jammu-and-kashmir/articleshow/80420810.cms?utm_source=twitter.com&utm_medium=social&utm_campaign=TOIIndiaNews

ஜம்மு கஷ்மிரில் 2வது சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.

எல்லை பாதுகாப்புப் படையினறால் ஜம்மு காஷ்மீர், கத்துவா மாவட்டத்தில், 2வது சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 30 அடி ஆழம், 150 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டது இந்த சுரங்கப்பாதை. கடந்த ஜுன் 2020ல் இதே இடத்தில் வெடிகுண்டு கொண்டு சென்ற ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. கடந்த 13 ஜனவரில் இந்த சுற்றுவடடாரத்தில் 150 அடி நீளம் கொண்ட சுரங்கப்பாதை பாபியான் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------
https://mybs.in/2ZbM7rG                                                                                              

எத்தனை முறை பிஜேபி தலைவர்கள் தமிழகம் வந்தாலும், தமிழகத்தில் தாமரை மலராது. 23 லட்சம் இளஞ்களுக்கு தமிழ் நாட்டில் வேலை இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு இன்னும் அளிக்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொரோனா காலத்தில் அதிமுக நிறைய ஊழல்கள் செய்துள்ளது. - திமுக எம்.பி.கனிமொழி தேர்தல் பரப்புரையில்.

-------------------------------------------------------------------------------------------------
ராகுல் காந்தி தமிழகம் வருகை.

ராகுல் காந்தி 3 நாள் தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார்.
காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி, கோவையில் இன்று பரப்புரை துவங்குகிறார். கோவையில் காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆய்வு படிப்பு (Ph.D) முடித்தால் மட்டுமே உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அரசாணையை திரும்பப் பெற வேண்டும். - வைக்கோ கண்டனம் மதிமுக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தினம்" 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்த தினம் இன்று 23/1/21. இந்திய அரசாங்கம் அவரின் பிறந்த தினத்தை "பராக்கரம் திவாஸ்" தினமாக அறிவித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயர்களை வீரத்தோடு எதிர்த்து போராடினார்; நம் நாட்டு இளைஞ்ர்கள் மனதில், அவரைப் போன்றே நாட்டுப் பற்றோடும், மனத்துணிவோடு, நாட்டுக்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிப்பதற்காக, அவரின் பிறந்த தினத்தை "பராக்கரம் திவாஸ்" என்று கொண்டாட இந்தியா முடிவு செய்துள்ளது. இரயில்வே அமைச்சகமும் ஹாவ்ரா-கொல்கா இரயிலின் பெயரை "நேத்தாஜி எஃஸ்ப்ரெஸ்" என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை: சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் நிரந்தர புத்தக காட்சியை.... 
 தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் கன்னிமாராவில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் போயஸ் கார்டன் “வேதா நினைவு இல்லம்” ஜன.28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு. - தமிழக அரசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக ஒரு வாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கீழடியில் 7ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடக்கம்; அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிப்பு! - தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தகவல்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை: கொளத்தூர்,சென்னை தொகுதியில் ரூ.21 லட்சத்தில் ரேஷன் கடை புதிதாக கட்டப்பட வுள்ளது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குடியரசு தின  நிகழ்ச்சிகளை காண பொதுமக்கள் நேரில் வரவேண்டாம். - தமிழக அரசு அறிவிப்பு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திமுக 200 தொகிதிகளுக்கு மேல் வெற்றி பெறும். கோவில்பட்டியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் திமுக கனிமொழி கூறினார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (22/1/21) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சட்டமன்ற தேர்தல் கூட்டணி, ஜெயலலிதா நினைவிடம் திறப்பு , சசிகலா விடுதலை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.



********************************************************************************************************************************** திருச்சி: திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு அளித்த விவசாயிகள். கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அறுவடைக்குத் தயாராக இருந்த தானியப் பயிற்கள் அழுகிப்போகின. அதற்காக இழப்பீடு வழங்கும் நல்லெண்ணத்தை தமிழக முதல்வருக்கு அளிக்க வேண்டும் என்று புரட்சித் தலைவரிடம் வேண்டி, கோரிக்கை மனுவை அளித்தனர். தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் இன்று திருச்சியில் மாவட்ட நீதி மன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிடம் விவகசாயிகள் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் உடம்பு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்று.



*****************************************************************************************************************************

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தை ஜன.27ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடியார் அவர்கள்
Seedling


*********************************************************************

அஇஅதிமுக கட்சி மக்களுக்கு ஒரு நற்செய்தி வழங்குகிறது....!!!

சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை மாண்புமிகு அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு அவர்கள் தொடங்கி வைத்தார்...

தமிழகத்தில் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயத்தை, ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், கூட்டுறவு பண்ணை பசுமைக்காய்கறி கடைகள் மூலம் கிலோ ரூ.45 எனும் குறைந்த விலையில், இன்று முதல் தமிழகமெங்கும் விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

****************************************************************

*தேசிய அளவிலான மாபெரும் 🎨ஓவியப்போட்டி*


மழலையர், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினருக்குமான இணையதளம் வாயிலாக நடைபெறும் தேசிய அளவிலான மாபெரும் ஓவியப்போட்டி


*சான்றிதழ்கள் + நினைவுப்பரிசுகள் + விருதுகள்*


*பங்குபெறுவதற்கு கடைசி நாள் : 25‍, அக்டோபர், 2020*


*பங்குபெறுவோருக்கான பயன்கள்:*

🏆பங்குபெறும் அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ்

🏆மாநில அளவிலான பரிசுகள்

🏆தேசிய அளவிலான பரிசுகள்


போட்டியில் சேர்வதற்கும், மேலும் விபரங்களை அறியவும் : *www.indianartfestivals.in*


சந்தேகங்களுக்கு, அழைக்கவும் : *9489480920 / 9489490920*


இன்றே சேர்ந்து திறமையை வெளிப்படுத்துங்கள்! பரிசுகளை வெல்லுங்கள்!


*தங்களுக்கு தெரிந்த திறமைசாலிகளுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் ஊக்கப்படுத்துங்கள்*

**********************************************************************

அஇஅதிமுக இன்று 49ஆவது துவக்க விழா...!!!

அமரர் திரு எம்.ஜி.ஆர்.  அவர்கள் எந்த நோக்கத்திற்காக கட்சி துவங்கினாரோ, அது நிறைவேற தொண்டர்களாகிய பாடுபடுவோம்..!!!

வாழ்க..!!!  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்..!!!

***********************************************************************************

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். 


அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..!!!

********************************************************

"அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுக்கலை நுணுக்கங்கள்"


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியாக,  'அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுக்கலை நுணுக்கங்கள்' என்ற தலைப்பில் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களின் உரை நாளை காலை 815 மணிக்கு சென்னை வானொலியின் முதல் அலைவரிசை - மத்திய அலை 720 கிலோ ஹெர்ட்ஸில் ஒலிபரப்பாகிறது. 

இந்நிகழ்ச்சியை, உங்கள் ஆண்ட்ராய்டு கைபேசியில், Google Storeலிருந்து NewsonAIR என்னும் செயலியை தரவிறக்கம் செய்து, AIR Chennai PC என்ற இணைப்பைச் சுட்டினால் , வானொலியில் ஒலிபரப்பாகும்போதே கேட்கலாம்.


***************************************

"அறிஞர் அண்ணாவின்    112வது பிறந்த நாள்"..!!!


"உயிருக்கு தமிழ் உணவுக்கு ஆங்கிலம்" - இது அறிஞர் அண்ணாவின் கருத்து.


பேரறிஞர் அண்ணாவின் வழியில் பயனிப்போம்...

தமிழ் மொழியை போற்றுவோம்..!!!

நன்றி..!!!



******************************************************************************************

🙏🙏

**திருமுறைகளே

தமிழனின் 

வாழ்முறைகள்*

🙏🙏


அந்த தூய வழிமுறைகளை அறிந்து புரிந்து தெரிந்து தெளிந்து

தெளிவடைந்து

நம் இல்லத்தில் எந்நாளும்

எந்த விதமான நற்காரியங்கள் நடத்தினாலும்


இல்லந்தோறும் திருமுறைகளை ஓதுவோம்...


மன அமைதி பெறுவோம்


வாழ்வில் உயர் நிலை அடைவோம்....



🌿 *நமது திருமுறைகள்* 🌿


🙏 *பன்னிரு திருமுறைகளை அருளிய 27 ஆசிரியர்மார்களின் திருப்பெயர்கள்* 🙏


🙇‍♂️ *பன்னிரு திருமுறைகளை நமக்கு தந்த அருளாளர்களின் திருப்பெயர்களை நம்முடைய வாயினால் சொல்வது கோடான கோடி புண்ணியம் ஆகும்.*


🙇‍♂️ *இந்த நாள் ஞானிகளின் பெயர்களை நாம் ஒரு முறை சொன்னாலே வாழ்வில் செய்த அத்தனை பாவங்களையும் போக்கி குருவருளும் திருவருளும் நமக்கு பெற்றுத்தரும்.*

 

🔆 *இந்த இருப்பத்தேழு  ஆசிரியர்கள் தான் சிவபரம் பொருளை நேராக கண்டு அவருடைய அருளாலே இந்த திருமுறை பாடல்களை அருளிச் செய்தார்கள்.*


🔆இரண்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு

வரை தமிழகத்தைத் தோத்திரப் பாடல்களால் மூழ்க செய்தவர்கள் இருபத்தேழு திருமுறை ஆசிரியர்கள். இவர்கள்

அருட்பாடல்களை பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்துள்ளார்கள்.


🔆 *இருப்தேழு திருமுறை ஆசிரியர்கள் பன்னிரு திருமுறைகளும்:*


*1. திருஞானசம்பந்தர்* - முதல் மூன்று திருமுறைகள்.


*2. திருநாவுக்கரசர்*-

 நான்கு, ஐந்து, ஆறாந்திருமுறைகள்.


*3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்* - ஏழாந்திருமுறை


*4..மாணிக்கவாசகர்* - திருவாசகம்- எட்டாம் திருமுறை


*5. திருமாளிகை த்தேவர்,*

*சேந்தனார்,* 

*கருவூர்த் தேவர்,* 

*பூந்துருத்தி நம்பிகாடநம்பி,* 

*கண்டராதித்தர்,*

*வேணாட்டடிகள்,*

*திருவாலியமுதனார்,*

*புருடோத்தம நம்பி*

*சேதிராயர்* - 

 ஆகிய ஒன்பது அருளாளர்கள் அருளியது- திருவிசைப்பா, திருப்பல்லாண்டு --ஒன்பதாம் திருமுறை.


*6.திருமூல நாயனார்*-

திருமந்திரம் - பத்தாம் திருமுறை.


*7.திரு ஆலவாயுடையார்,*

*காரைக்காலம்மையார்,*

*சேரமான் பெருமான்,*

*ஐயடிகள் காடவர் கோன்,*

*பட்டினத்துப் பிள்ளையார்,*

*நக்கீர தேவ நாயனார்,*

 *கல்லாட தேவ நாயனார்,* 

*கபிலதேவ நாயனார்,*

 *பரண தேவ நாயனார்,*

 *இளம்பெருமான் அடிகள்,* 

*அதிராவடிகள்,*

*நம்பியாண்டார் நம்பி,* -

ஆகிய பன்னிருவர் அருளியது பதினோராம் திருமுறை.


*8. சேக்கிழார் பெருமான்* -

 பெரியபுராணம்- பன்னிரண்டாம் திருமுறை.


🔆 *"தேவாரம்"* எனும் சொல் இறைவன் மீது அன்பு (தேவாரம் - தே = தேவன், இறைவன்; வாரம்=அன்பு) உண்டாகும் படிச்

செய்வது என்றும்; (தே+ஆரம் = தே=இறைவன்; ஆரம்=மாலை)

இறைவனுக்கு

என்றும் வாடாத

பாமாலையாக

சூட்டப்பட்டவை என்றும் இரு பொருள் படும்.


🔆எனவே *''திருமுறை'"* எனும் சொல், நிலையான முத்திச் செல்வத்தினை உலகமக்கள் எளிதில் பெறுதற்கு உதவும் நூல்

எனப் பொருள்படும்.


🔆ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியாய் விளங்கும் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மேலே கூறிய இருபத்தேழு அருளாளர்கள் ஆவார்கள்.


        திருச்சிற்றம்பலம்

*******************************************

அதிமுகவில் உறுப்பினர் ஆவது கானல்நீர்..!!!

     ஏறத்தாழ  ஓர் ஆண்டாக அதிமுகவில் உறுப்பினர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உறுப்பினர் ஆவதற்கான விதிகள் சற்று சிக்கலாக உள்ளது.

தலைமை கழகத்தோடு தொடர்பு கொண்டு பேசினேன். உறுப்பினர் விண்ணப்பத்தில், 25 நபர்களின் பெயர் மற்றும் முகவரி எழுதி தாருங்கள், அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்குவோம்; தனித்தனியாக உறுப்பினர் அட்டை வழங்குவதில்லை என்றார்.

கடந்த திங்கள் அம்பத்தூர் கழக அலுவலகத்தில் என் முகவரி  மற்றும் தொலைபேசி எண், கொடுத்திருக்கிறேன். இன்னும் எந்த தகவலும் வரவில்லை..!!!
எப்போது உறுப்பினர் அட்டை கிடைக்கும் என்று தெரியவில்லை..!!!

அதிமுகவில் இணைந்து செயல்பட மிகுந்த விருப்பம் உள்ளது. இந்த விதி முறை தடையாக உள்ளது. 

அதிமுகவின் தலைமை,உறுப்பினர் ஆகும் முறையை, எளிமைப்படுத்த வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன்..!!!

இந்த முறையே நீடித்தால், அதிமுகவில் உறுப்பினர் ஆவது கானல் நீரே..!!!

நன்றி..!!!






****************************************************************

"இனிய வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!!"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



*************************************************************************

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரிணை கொண்டு சென்றுள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் பி.கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்தது: இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை.
கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். சிறந்த நீர் மேலாண்மை: குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம்ஏரிக்கு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.
நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமடத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:6 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.
பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சாரா, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் நமக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கு இக்கால்வாய் சான்றாக அமைந்துள்ளது.

**** ***************†*************************************
புதிய கல்வி கொள்கை--என் பார்வையில்..
_____________________________________________
வணக்கம்..!!!

 புதிய கல்வி கொள்கை பற்றி, ஊடகங்களில் வாயிலாக நான் புரிந்து கொண்டது இவை....

தாய் மொழி கல்வி மற்று விரும்பிய பாடம் படிப்பது வரவேற்க தக்கது...

பொது தேர்வு, வேவ்வேறு குடும்ப பின்னணி கொண்ட   நம் சூழ்நிலைக்கு பொருந்தாது என்பது என் எண்ணம்.....

30 மாணவர்களுக்கு குறைவான அரசு பள்ளிகளை மூடுவதை தவிர்த்து வேறு தீர்வு இருக்க வேண்டும்...

நன்றி..!!!


*************************************************



*****************************⚜

 *"வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.*

⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*

⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.* 

⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*

⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*

⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*

⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*

⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*

⚜ *கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.*

⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*

⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*

⚜ *ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.*>√

⚜ *வாழ்க தமிழ்!*✍
          💪⛩️👍


******************************************************

*கஷாயம் வாரம்*
___________________________________________

*# திங்கட்கிழமை:*
வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

*#செவ்வாய்க்கிழமை:*
கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

*# புதன்கிழமை:*
தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

*# வியாழக்கிழமை:*
சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

*# வெள்ளிக்கிழமை:*
வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

*# சனிக்கிழமை:*
முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

*# ஞாயிற்றுக்கிழமை:*
சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.

இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

**************************************************************************
நாளை  காலை  9.43 முதல்   11.08 மணி வரை  கிரகங்களின்  ஆதிக்கம்  ஒரே நேர்கோட்டில் சஞ்சரிக்கும். தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் மிதுனம் . இந்த  ராசிகளுக்கிடையில்  சஞ்சாரம்  நடைபெறும். ராகு கேதுக்கிடையில்  இந்த  சஞ்சாரம் நடைபெறும். இந்நேரத்தில்  யாரும்  வெளியில்  செல்வதை தவிர்ப்பது நல்லது. 1000 வருடங்களுக்கு  ஒரு முறை  நடை பெறும்  இந்நிகழ்வு  இறைவனுக்கும்  அசுரர்களுக்கும் நடைபெறும்  யுத்தம். இன்னும்  5நாட்களுக்கு  குரு  ஆட்சியில் இருப்பதால்  ஓம் நமசிவாய  எனும் நாமத்தை  சொல்லவும்
 நாளை சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்கிறது எனவே யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எந்த ஒரு பொருட்களையும் வீட்டின் வெளியே வைக்காதீர்கள் வெளியில் பயணம் மேற்கொண்டால் உடல் நலத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே அனைவரும் வீட்டினுள் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் நாளை 10 மணி முதல் 12 மணி வரை அதிகமான கிருமிகள் பூமியை நோக்கி பயணம் மேற்கொள்ளும் எனவே நாம் அனைவரும் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும் நாளை சூரியனையோ சந்திரனையோ பார்க்க வேண்டாம் அதுமட்டுமின்றி கிரகங்களின் நிலை சரியாக இல்லை பல தொல்லைகள் ஏற்படும் எனவே அனைவரும் எச்சரிக்கையுடன் இருங்கள்
#############################

சைவ சித்தாந்த நூல்கள் வேண்டுமா?

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

1  அகநூல்
2  அருள் ஒளி-2008
3  இலக்கண விதிமூலங்களும் விதிகளும்
4  இலக்கியக் கட்டுரைகள்
5  காசீ காண்டம்
6  சனாதன சைவ விளக்கம்
7  சமயம்
8  சமயாசாரியர் சந்தானாசாரியர் சரித்திர சங்கிரகம்
9  சர்வஞானோத்ர ஆகம ஞானபாத வசனம்
10  சித்தாந்தச் செழும் புதையல்கள்
11  சிவ ஞான போதம்
12  சிவ ஞான விளக்கம்
13  சிவகாமசேகரம் பிரதிட்டா விதி
14  சிவஞான சித்தித் திறவுகோல்
15  சிவபூசாவிதி
16  சிவபூசை விளக்கம்
17  சிவானந்த விஜயம் (மணிவிழாச் சிறப்பு மலர்)
18  சிவாலய-சில்பங்கள்-முதலியன
19  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-2
20  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-3
21  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-4
22  சிவாலயங்கள்-இந்தியவிலும்-அப்பாலும்-5
23  சுத்த போசன பாக சாத்திரம்
24  சுப்பிரமணிய ஆலய நித்தியபூசா விதி
25  சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
26  சைவ சமயம்
27  சைவ சித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள்
28  சைவ சித்தாந்த கை நூல்
29  சைவ சித்தாந்த ஞான விளையாட்டு
30  சைவ சித்தாந்த மெய்ப் பொருளியல்
31  சைவ சித்தாந்தமும், விஞ்ஞான உலகமும்
32  சைவ சித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிகங்களும்
33  சைவ சித்தாந்தம் மறு பார்வை
34  சைவ சிராத்த விதி
35  சைவ தூஷண பரிகாரம்
36  சைவ நற்சிந்தனை (சி. செல்லத்துரை)
37  சைவ நற்சிந்தனை
38  சைவ நெறி-ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம் 11
39  சைவ நெறி-தரம் 11
40  சைவ மகத்துவம்
41  சைவ வாழ்வியற் சிந்தனைகள்
42  சைவ வினா விடை
43  சைவ வேதாந்த சித்தாந்த ஆராய்ச்சி
44  சைவசித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி
45  சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல் மேதையின் சுவடுகள்
46  சைவசித்தாந்தச் சம்புடம்
47  சைவத் தோத்திர மஞ்சரி
48  சைவநெறி- தரம் 8
49  சைவநெறி-தரம் 10
50  சைவநெறி-தரம் 6
51  சைவபூஷண சந்திரிகை
52  சைவபோதம் இரண்டாம் புத்தகம்
53  சைவபோதம் முதற்புத்தகம்
54  சைவப் பிரகாசிகை முதற் புத்தகம்
55  சைவப்பிரகாசிகை 5
56  சைவம் வளர்த்த சான்றோர்கள்
57  தத்துவ ஞான சிந்தனையும்
58  நடராஜ வடிவம்
59  நன்னூற் காண்டிகை உரையும் நாவலர் பெருமானும்
60  பாரத இதிகாசத்தில் வரும் பாத்திரங்களின் குணவியல்பு
61  புவனேசுவரி மகத்துவம்
62  மதங்க சூளாமணி
63  முத்திராலட்சணம்
64  முப்பொருள் விளக்கம்
65  மூர்த்தியலங்கார விதி
66  யாழ் நூல்
67  விநாயக பரத்துவம்
68  வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும்
69  வேதாகம நிரூபணம்2
70  வேதாகம நிரூபணம்
71  வைதிகசந்தியாவந்தனவிதி
72  வைரவப் பிரதிட்டா விதி


https://archive.org/details/SaivaSiddhantaTamilEBooks இந்த நூல்களையெல்லாம், படிக்கிறோமோ...இல்லையோ....
இவ்வளவு நூல்கள் இருக்கின்றன
###############################

*தமிழ் பேசப் பழகுங்கள்*

*குட் என்று சொல்லாதீர்*
*“நன்று / நல்லது” என்று சொல்லுங்கள்.*

*வெரிகுட் என்று சொல்லாதீர்*
*“நனி நன்று” என்று சொல்லுங்கள்*. 

*பியூட்டிபுல் என்று சொல்லாதீர்*
*“அழகு” என்று சொல்லுங்கள்.* 

*வொண்டர்புல், மார்வெலஸ் என்று சொல்லாதீர்*. 
*“அழகிதழகிது” என்று சொல்லுங்கள்.* 

*குட்மார்னிங் என்று சொல்லாதீர்*
*“நற்காலை வணக்கம்” என்று சொல்லுங்கள்.*

*குட்டே என்று சொல்லாதீர்*
*“நன்னாள்” என்று சொல்லுங்கள்.*

*குட்நைட் என்று சொல்லாதீர்*
*“நல்லிரவு” என்று சொல்லுங்கள்.*

*சப்போஸ் என்று சொல்லாதீர்* 
*“ஒருக்கால் / ஒருவேளை” என்று சொல்லுங்கள்.*

*ஹலோ என்று சொல்லாதீர்*
*“வணக்கம்” என்று சொல்லுங்கள்.* 

*மம்மி டாடி என்று சொல்லாதீர்* 
*“அம்மா அப்பா” என்று சொல்லுங்கள்.*

*கரெக்ட் என்று சொல்லாதீர்* 
*“மிகச் சரி” என்று சொல்லுங்கள்.* 

*ஒன் டூ த்ரீ என்று சொல்லாதீர்* 
*“ஒன்று இரண்டு மூன்று” என்று சொல்லுங்கள்.*

*லேட்டாயிடுச்சு என்று சொல்லாதீர்* 
*“காலந்தாழ்ந்திடுச்சு’ என்று சொல்லுங்கள்*. 

*சிம்பிள் என்று சொல்லாதீர்* 
*“எளிது / எளியது” என்று சொல்லுங்கள்.*

*மில்க் என்று சொல்லாதீர்* 
*“பால்” என்று* *சொல்லுங்கள்.*  

*நம்மையே அறியாமல் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைப் பேச்சில் பயன்படுத்தத் தொடங்குங்கள். உங்களிடமிருந்து தோன்றும் சிறு திருத்தத்தால் நம் மொழி மாசு குறையும்.* 

*புவியை நெகிழியிலிருந்து காத்தாக வேண்டிய பெரும்பொறுப்பைப் போன்று தமிழை ஆங்கிலக் கலப்பிலிருந்து காக்க வேண்டிய  அரும்பொறுப்பும் நம்மைச் சேர்ந்தது.*

*இன்றே தொடங்குங்கள். இதைப்போல் இன்னுமுள்ள நூறு நூறு சொற்களைக் கண்டறிந்து களைந்து தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துங்கள்.*
############################
புதிய அறிவிப்புகள்

1.திமுக தலைவர் திரு.ஸ்டாலினை நான் இனி பொருட்படுத்தப் போவது இல்லை,அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை!

ஆலோசனை சொல்ல எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா??

- மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu  அவர்கள் பதிலடி

2.ஊடரங்கால் தெருவோரங்களில் உள்ள  ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என 112 பேரை நெல்லை மாநகராட்சி நிர்வாகமும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் சேர்ந்து மீட்டுள்ளனர். 

3.முதியோர்களை குளிக்க வைத்து உடைமாற்றி சுத்தமாக இருக்க வைப்பதோடு, இவர்களுக்கு மூன்று வேளைகளிலும் உணவு அளிக்கப்படுகிறது.

4.மருத்துவர்களும் செவிலியர்களும் அவர்களில் ஒருவராக பார்த்துக்கொண்டார்கள்! 

         - கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் நெகிழ்ச்சி!

5.தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

இதுவரை தமிழகத்தில் 1,372 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

365 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்!
    - மாண்புமிகு அமைச்சர் @Vijayabaskarofl அவர்கள்
       
#CoronaUpdate #Corona #TNGovt

6.மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்ட விலையில்தான் ரேபிட் சோதனைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன!

தமிழகம் சார்பில் மொத்தம் 5 இலட்சம் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

- தமிழக அரசு விளக்கம்

1969-ல் மேகலா பிக்சர்சுக்காக "எங்கள் தங்கம்" படத்தை புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவி அம்மாவும் சம்பளமின்றி நடித்திருக்காவிட்டால் இன்று திரு. தயாநிதிமாறனின் நிலை என்னவாகியிருக்கும் என்பது அவருக்கே தெரியும்.

அவர் மக்களை பார்த்து பிச்சைக்காரர்கள் என்கிறார்!
#பிச்சைக்காரன்_தயாநிதி
######################

###################################
உதவி செய்பவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான கதவுகள் எப்போதுமே திறந்துதான் இருக்கின்றன,

தன்னார்வலர்கள்

https://stopcorona.xenovex.com/dashboard

http://landadmin.tn.gov.in/covid19/index.php

என்ற இணைப்புகளின் வழியே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்!

@CMOTamilNadu @OfficeOfOPS @RamaAIADMK
###############################
விவசாயிகள் தங்களது நெல்லினை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு 

📞- 044-26426773 

என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்!

      - மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள்
#####################################

புதிய அறிவிப்புகள்

1.தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதே தவிர ரத்து செய்யப்படவில்லை!

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்! 
                        - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

2.கொரோனா நோய் தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புர்ணவு ஏற்படுத்தும் வகையில், 

சென்னை சைதாப்பேட்டை காவல் சரகம் சார்பில் நந்தனம் அருகே சாலையில் வரையப்பட்டுள்ள பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.

3. தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

இதுவரை தமிழகத்தில் 1,173 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்!

 - சுகாதாரத்துறைச் செயலர் @DrBeelaIAS அவர்கள்

4.தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்கும் வகையில் பேரிடர் மேலாண்மை சட்டம்-2005 மற்றும் குற்றவியல் சட்டம் 144-ன்படி 30.4.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

இச் சட்டங்களின் படி தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடரும்! -மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilNadu  அவர்கள்.

5.தமிழகத்தில் விளைபொருட்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களின் நகர்வுக்கு தடை இல்லை.

விவசாயிகள் அரசின் 138 குளிர்பதன கிடங்குகளிலும் தங்கள் பொருட்களை ஏப்ரல் 30 வரை இலவசமாக வைக்கலாம்!

உழவர்கள் சமூக இடைவெளியுடன் செயல்படவேண்டும்!
-வேளாண்துறை செயலர் திரு.ககன் தீப்சிங்பேடி அவர்கள்

6.கழக ஒருங்கிணைப்பாளர் @OfficeOfOPS மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் @CMOTamilNadu ஆகியோரின் "தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி"
##################################


############################



#############################
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை ரூ.1000 மற்றும் இலவசப்பொருட்கள் வழங்கப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.1000/−  மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் 
சர்க்கரை இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  கூட்டம் சேர்க்காமல், குடும்ப அட்டைதார்களுக்கு முன்பே சீட்டு வழங்கி, காவலர் உதவியுடன் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பொருட்களை பெற்றுக்கொள்வது எளிதாக இருக்கிறது.

=================================================================
பெரிய செய்தி!  கரோனா வைரஸ் தடுப்பூசி தயார்.  ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது.  அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு வணக்கம்.
 ரோச் மருத்துவ நிறுவனம் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசியை வெளியிடுவதாக டிரம்ப் அறிவித்தார், அதிலிருந்து மில்லியன் கணக்கான மருந்துகள் தயாராக உள்ளன !!! FG

##################################

தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 144 ஊரன்டங்கு உத்தரவு 

CM  பிரஸ் சந்திப்பு சிறப்பம்சங்கள்.

1. தமிழகம் முழுவதும் ஊரன்டங்கு

2. குடும்பத்திற்குள் 4 உறுப்பினர்களுக்கு மேல் ஒன்று கூட  கூடாது.

3. ஒரு வீட்டுக்கு ஒரு குடும்ப உறுப்பினர் அன்றாட தேவைகளை வாங்க வெளியேற அனுமதிக்கப்படுவார்.

4. தினசரி கூலி உழைப்புக்கு (வெள்ளை ரேஷன் கார்டு) 1 மாதம் தேவையான அரிசி, ஒரு நபருக்கு 12 கிலோ இலவசமாக வழங்கப்படும். நியாயமான விலைக் கடைகள் மூலம்.

5. அரிசியுடன் ரூ .1500, ஒரு குடும்பத்திற்கு ரொக்கம் வழங்கப்படும்.

6. அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து அரசுத் துறைகளும் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்.

7. அனைத்து கல்வித் துறைகள், பள்ளிகள் 31 ஆம் தேதி வரை மூடப்படும்.

8. கட்டிடம் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், உழைக்கும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழில்துறை தொழிலாளர்களுக்கு இந்த நாட்களின்  சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

9. அங்கன்வாடி மையங்கள் மூடப்படும், ஆனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வீட்டிலேயே ஊட்டச்சத்து வழங்கப்படும்.

10. விரைவில் எதிர்பார்க்கும் கர்ப்பிணிப் பெண்கள் அம்மா Odi மூலம் சரியான மருத்துவ உதவியுடன் நீட்டிக்கப்படுவார்கள்.

11. மருத்துவமனைகளில் அவசர சேவைகள் மட்டுமே கிடைக்கும்.

12. அனைத்து வகையான பொது மற்றும் தனியார் போக்குவரத்து 100% மூடப்படும். பேருந்துகள், ரயில்கள், கார்கள், வண்டிகள், இரு சக்கர வண்டிகள்.

13. அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும் மூடப்படும். அத்தியாவசிய சேவை பொருட்கள் தவிர.

14. வீட்டில் தங்கியிருங்கள் பாதுகாப்பாக இருங்கள்.

15. தொற்றுநோய்கள் 1897 சட்டத்தை காவல் துறையினர் கண்டிப்பாக பின்பற்றுவார்கள். மேலும் மீறுபவர்களை குற்றச் செயல்களின் கீழ் கைது செய்வார்கள்.


################################

கீழடிக்கு அருகில் மனித எலும்புகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
கொன்தகை என்னுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்டுள்ளது, எனவே இந்த இடம் கீழடியின்  சுடுகாடாக இருக்கலாம் என கருதுகின்றனர்.








*இன்று* 
*திருவாசகம்*
*சிவபுராணம்* வகுப்பு*
*09.O3.2020  திங்கட்கிழமை மாலை 6.00* மணியளவில்
ஆசிரியர்: *சிவ*.
*இரா.இரமேஷ்குமார்* அவர்கள்.
*இடம்: புழல் திருமூலநாதர் திருக்கோயிலில்*
 நடைபெறும்.
அனைவரும் வருக....
அருள் நலம் பெறுக...







[25/02, 3:30 AM] முனைவர் பு. பாலாஜி: பகிர்வு:   பகிர்வோம்.. கலந்துகொள்ள ஊக்கப்படுத்துவோம். 
------------------------------------------------------------------

என் கல்லூரி நண்பர் சங்க இலக்கிய பாடல்களை பொது மக்கள்,இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் தனது கொன்றை அறக்கட்டளை மற்றும் குமுதம் வார இதழுடன் சேர்ந்து நடத்தும் மாபெரும் சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி !!!

1. முதல் பரிசு - 3 லட்சம்
2. இரண்டாம் பரிசு - 2 லட்சம்
3. மூன்றாம் பரிசு - 1 லட்சம்

மேலும் 15 சிறுகதைகளுக்கு ரூ. 10,000 பரிசுகள் !!!

விபரங்கள் - https://konrai.org/kumudam/

அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொள்ளுங்கள்!!!

நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்... இச் செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி !!!

- ரவிச்சந்திரன் சோமு

 முனைவர் பு. பாலாஜி: 

1. கதைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் இருபத்தி ஐந்து   சங்க இலக்கியப் பாடல்களில் இருந்து ஒரு பாடலின்   செய்தியை மையக் கருத்தாகக் கொண்டு சமகால வாழ்வைச் சித்தரிக்கும் கதைகளாக இருக்க வேண்டும். சங்கப்பாடல்களை www.konrai.org/kumudam  என்ற இணையதளத்தில்  அறிந்து கொள்ளலாம்.
2. சிறுகதையோடு அது எந்தச் சங்க இலக்கியப் பாடலை மையக் கருத்தாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடப்பட வேண்டும். பாடலின் எண்ணைக் குறிப்பிடவும்.
3. சங்க இலக்கியப்பாடலின் விளக்கவுரையாக இருக்கக் கூடாது. புனையப்பட்ட சிறுகதையாக இருக்க வேண்டும்
4. ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
5. கதைகளுடன்  ‘ கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே.அவை தழுவலோ, மொழி பெயர்ப்போ பிறிதொன்றின் நகலோ அல்ல’ என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும். கதைகள் பிறரது எழுத்தை நகலெடுத்தோ, களவாடியோ, தழுவியோ எழுதப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
6. கதைகள் யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் . கதைகள் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்  முகவரி kumudamkonrai@gmail.com

7. சிறுகதை ஆசிரியரின் பெயர், முகவரி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். அயல் நாட்டிலிருந்து பங்கேற்போர் தங்கள் முகவரியை ஆங்கிலத்தில் எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

8. பங்கேற்கும் படைப்பாளிகள் அவர்கள் அனுப்பும் படைப்பின் நகல் ஒன்றை தங்கள் வசம் வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் தேர்ந்தெடுக்கப்படாத கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது.

9. கதைகள் 1000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்

10. தேவை ஏற்படின் பிரசுரமாகும் கதைகளைத் திருத்தவோ, சுருக்கவோ குமுதம் ஆசிரியர் குழுவிற்கு உரிமை உண்டு

11. எல்லா விஷயங்களிலும் குமுதம் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

12. கதைகள் வந்து சேர வேண்டிய கடைசித்தேதி:  மார்ச் 31, 2020.


13. கதைகளைத் தபால் மூலமும் அனுப்பலாம். குமுதம்-கொன்றை, சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டி, தபால் பெட்டி எண்  – 2592, சென்னை – 31  என்ற முகவரிக்கு அனுப்பலாம்.   இயன்ற வரை மின்னஞ்சலில் அனுப்பினால் உதவியாக இருக்கும்.


24/02/2020 புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.


24/02/2020 புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள், அம்பத்தூர் பாடி அருகே சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பாடி சிவன் கோயில் அருகில் அண்ணதான நிகழ்வும் உள்ளது. பாடியை சுற்றி பல இடங்களில் புரட்ச்சித் தலைவி திரு ஜெ.ஜெயலலிதா அம்மையாரின் திரு உருவப் படத்தை வைத்து உணவும் வழங்கப்படுகிறது. 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள், பாடி அருகில்  சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment