Saturday, April 16, 2016

விடா முயற்சி

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை

ஊக்கத்துடன் முயற்சி செய்,
ஊதியம் உண்டு உழைப்புக்கு;
ஊரும் எறும்பாய் வாழ்;
ஊசி முனையும் மைதானம்,
ஊசி காதும் ஆகாயம்,
உறுதி யுள்ளம் உடையோர்க்கே..!

உள்ளச் சோர்வு உதறு
உள்ளம் தளரும் நேரம்
உறுதுணை பகவன் பாதம்
உனக்கும் ஒருநாள் விடியும்.
ஊரே உன்பெயர் சொல்லும்
உலகம் முழுதும் கேட்கும்


Thursday, April 14, 2016

துரோகம்


வர்ணம் பூசிய வாழ்க்கையடா;
யாரை நம்பிப் பழகிடடா..!
சர்க்கரை பூசிய வார்த்தைகளால்,
சாதிக்க எண்ணும் மனிதரடா..!
பார்வையில் யாரும் பால்போலே,
பாசம் கொள்வது பாசாங்கடா..!
துர்மனம் ஏந்திய துட்டன்கோடி,
கடவுள் உன்துணை கவலைவிடடா..!

துரோகி துடிக்கவே துயர் செய்யத் துணிந்தேன்; துயர் செய்த
துரோகி யழிக்கவே வெறி கொண்டு திரிந்தேன்; வலி கொண்ட
விரோதி யொழிக்கவே துணை யின்றி தவித்தேன்; மனம் வெம்ப
விரோதி முடிக்கவே இறை பற்றி யழுதேன்; இனி வெற்றியே..!
-சுதாகர்


Wednesday, April 13, 2016

மழலை


எந்தன் செவ் விதழ் ரோசாவே
எந்தன் வாழ்வின் நோக்கமே
உந்தன் வினைகள் தீர்க்கவே
எந்தன் வீட்டில் பிறந்தாயே
எந்தன் வரமாய் வந்தாயே..!

பஞ்ச பூதம் பிசைந்து,
பகவான் படைத்தப் பிராசாதமே!
குலந் தழைக்க, குல
தெய்வம் தந்த விழுதே..!

முளைக்கையில் மணக்கும் துளசியே,
குளிரில் உதரும் உடல்போல்,
கைகால் அதிர்வில் தெய்வநடனமே..!

ஈறின் சிரிப்பில் ஈரம்
சுரக்கும் கல் நெஞ்சிலே,
விரல் பட்டதும் சினுங்கும்
தொட்டாச் சினுங்கியே.

முயல் போல் மூச்சும்;
குட்டி வாய் திறந்து
கொட்டாவியும்; இதழ் பிதுங்கி
அழுவதும்; உறங்கும் போது
சினுங்களும், சிறு சிறு
மொனங்களும்; இசைப் பாடம்
சொல்லாத ராகங்களே; நீ
விழித் திருக்கும் நேரமெல்லாம்
தேவ லோக நாடகமே..!

உற்று உற்று பார்த்தாலும்
கருவறை விட்ட கன்றதும்,
மனக் கண்ணில் நிற்காத
திருப்பதி பெருமாள் போல்,
கசக்கிக் கசக்கிப் பிழிந்தாலும்
மூளையை, நீ பிறந்த
முதல் நாள் முகம்
ஞாபகம் வர வில்லையே..!
கடவுள் உனை கவசமாய் காகுமே..!


Friday, April 8, 2016

தடைகள் தாண்டி தடம் பதித்திடு..!

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

தடைகள் தாண்டி தடம் பதித்திடு;
இடர்கள் தாவி இடம் பிடித்திடு;
கெடுப்பவ ரெண்ணம் கெட வுயர்ந்திடு;
இறை துணை யுண்டுத் துணிந்திடு..!
இனி இலக்கு நோக்கிப் புறப்படு,,!
கொடுப்பார் காப்பார் படைத்த்வர் உனனையே..!

எடுத்த காரியம் வெற்றி அடைய
கடக்க வேண்டும் மூன்று ப்டியை
ஏளனம் எதிர்ப்பு ஏற்றுக் கொள்ளல்
உரைத்தது சுவாமி விவேகா னந்தர்
தீரர் அருள்மொழி மனதில் நிறுத்து
தளரா மனதுடன் முயற்சி முடுக்கு
தடைக்கல் யாவும் தவிடா கிடுமே..!

நினைத்த காரியம் முடித்திட பக்தியில்
எடுத்த முயற்சி தடை பட
வைத்த மனிதனோ, சகுனமோ, சூழலோ
தடுத்த கடவுளே! வரப்போகும் இழப்பையே.

விளை வில்லாத செய லில்லை
பலன னில்லாத் பாடி லில்லை
இறைபோ லிங்கொரு துணை யில்லை
பக்தியோடு முயன்ற காரியம் வெற்றியே..!
-சுதாகர்


Thursday, April 7, 2016

வறுமை கொடுமை..!

புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.


என்னடா இது கொடுமை..!
கொடிதடா இவ் வறுமை..!
தடை படா உணவை
கொடப் பாஅ கடவுளே..!

குருத்தும் வறுமையில், பழுத்ததும் வறுமையில்;
கருணைக்கு பஞ்சமா? உணவுக்கு பஞ்சமா?
அவரவர் பார்வையில் பசிநோய் பட்டால்
அவரவர் இயன்றளவு அக்கறை கொண்டால்
அவளச் சமுதாய அளவு குறையுமே..!

பள்ளி செல்லும் பருவம்;
பிள்ளை கவனம் பசி;
பசிக்கு உணவு கொடுக்கும்,
திருடனும் கடவு ளாவானே..!

சுற்றி கொடுமைகள்; எல்லாம் எதனாலே?
வற்றிய வயிறு, நரம்பாத தனாலே;
‘நமக்கென்ன..’ வென்று வலகு வதாலே,
நிக்ழும் கொடுமைகள் நம்மை விடாதே..!

முன்வினைப் பயனாலே பசிநோய் தாக்க,
உணவு மருந்திட்டு பசிநோய் விரட்ட,
நம்மால் இயன்றதை ‘சட்’டெனச் செய்ய,
நல்லவர் படைக்குள் அடைக்கலம் கொடுப்போம்;
திருடர் படைக்குள் இழுக்கும் முன்னரே..!
-சுதாகர்


Wednesday, April 6, 2016

மரம் வளர்ப்போம்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

வருடச் சுற்றின் விடியல் வசந்தம்
புதுத் துவக்கமும் வசந்தம்;
புதிய புரிதலும் வசந்தம்;
மனத் திருத் தமும் வசந்தமே..!

மண்ணின் கனிம வளம் எடுத்து...
மனித குலம் உண்ண .
மணம் பழம் தந்த ,
மரம் தனை வெட்டத்,
திரியும் மதி கெட்ட,
மனித மனம் தனில்...
வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

இலை மலர் பறிக்க
மறைச்சொ லுண்டு ரைக்க;
மரக் கன்றுகள் நட்டப்,
பின்மரம் தனை வெட்ட,
மனம் தனில் சட்ட,
விதி யொன்று நினைக்க,
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!
மனித மனம் தனில்
வசந்த காலம் வருமோ..!

மனித உடல் வள்ர்க்க,
மரம் தன்னை கொடுக்க,
மரம் குணம் நினைக்க,
மனித மனம் தனில்,
வசந்த காலம் வ்ரு மே..!
-சுதாகர்


Tuesday, April 5, 2016

உழவன் என் தோழன்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

நீயே என் உயிர்த் தோழன்..!
நீ நான் பழக வில்லை;
ஓர் நாள் உண வில்லை;
உயர் குணம் எழ வில்லை;
உன் நெல் வியிறு செல்ல,
என் குணம் நேர் செல்ல,
உதவி செய்த வகை யிலே,
நீ என் உயிர்த் தோழனே..!

ஏறு வில்லாலே பயிறு அம்பாலே
பஞ்ச சூரனை
போரில் அழிக்கவே..,
தினம் வயலில்
பாடு படும்
வீரனே! நீ
மனித குலம் காக்கும் தோழனே..!
நீ உலகிற்க்கே வுயிர்த் தோழனே..!
-சுதாகர்


Monday, April 4, 2016

சோதனைகள் பல கடந்து


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

சோதனைகள் பல கடந்து
உயிர் பிழைக்க இயலுமோ
குல தெய்வம் காக்க..!
குரு தெய்வம் காக்கவே..!

எந் நேரம் மரணம்
எனைத் தழுவ நேரும்
என் அறிவால் ஆவது
இனி யொன்று மில்லை
நான் வணங்கும் தெய்வம்
நன்மையைத தான் செய்யும்..!
நிச்சயம் ஏதோ நிகழும்
என் உயிர் பிழைக்கும்..!
மனம் கலங்கி யிருக்க,

கதி யற்று முழிக்க,
இக் கட்டுப் போக்க ,
விதி மாற்றி வைக்க,
கோள் கட்டி யாளும்,
படி அளக்கும் தெய்வம்,
பதம் சரணா கதி..!
-சுதாகர்


Sunday, April 3, 2016

இனி இது தான் எதிர்காலமோ..!


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

இனி இது தான் எதிர்காலமோ..!
பறவையும் விலங்கும்
படத்தில் வாழ
பாலை வனத்தில்
நாம் வாழ
காடழித்து பெற்ற பலன் இதுவே..!

பூமித் தாயின் நுரையிரல் காடு..!
புற்று நோய்க்
கிருமிகள் போல்
நாம் அரித்துக்
கொண்டிருக் கிறோம்.
அன்னைக்கு வைத்தியம் பார்ப்பது யாரே..?.