Wednesday, March 31, 2010

பங்குச்சந்தை இன்று
நிபிட்டி இன்று இறக்கத்தோடு முடிவடைந்தது. சுமார் 60 புள்ளிகளுக்குள் தான் வர்த்தகம் நடைபெற்றது. அந்நிய முதலிட்டார்கள் 433 .52 கோடிகள் பங்குகள் வாங்கினார்கள். ஆனால் உள்நாட்டு முதலிட்டாளர்கள் 356 .58 கோடிகள் விற்றனர். நிபிட்டி 5293 களுக்கு மேல் செல்ல முடியாமல் திணறியது. இரண்டு நாள்களாக நிபிட்டி 5300 அளவில் பெரிய அழுத்தத்தை சந்தித்து வருகிறது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வங்கிக்கொண்டிருப்பதால் நான் நிபிட்டி இன்னமும் உயரும் என்றே நம்புகிறேன். 5220 புள்ளியில் வலுவான சப்போர்ட் உள்ளது. இன்று நிபிட்டி 5245 புள்ளியை உடைத்து அதற்கு மேல் முடிவடைந்தது. நேற்றே நிபிட்டி நல்ல உயர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தேன் என் கணிப்பு தவராயிபோனது.
பங்குச்சந்தை நாளை நிலவரம்

அன்னிய முதலிட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வாங்குவதால் நான் நிபிட்டி நல்ல உயர்ச்சியை அடையும் என்றே கருதுகிறேன். நாளை பணவீக்க நிலவரம் வெளிவரும் அது வர்த்தகத்தை நிர்ணயிக்கும். நாளை தான் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் அதனால் வர்த்தகத்தில் ஒரு திருப்பத்தை சந்திக்ககலாம் என நினைக்கிறேன். நாளைய வர்த்தகத்திற்கு 5220 புள்ளி மிக முக்கியம். இதை உடைத்து நிபிட்டி கிழ் இறங்கினால் நிபிட்டி பலகீனம் அடைகிறது என்றுதான் கொள்ளவேண்டும், வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நாளை என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்போம்.
நன்றி!

Tuesday, March 30, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்றும் நிபிட்டி 5330 அளவுக்கு மேல் முன்னேற முடியாமல் திணறியது. வர்த்தகமும் சுமாராகவே இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்றும் 579 கோடிக்கு பங்குகள் வாங்கினர். நேற்று வரை விற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு முதலிட்டாளர்கள் இன்று 100 கோடிக்கு பங்குகள் வாங்கினர். இன்று நிபிட்டி சற்று சரிவை சந்தித்த போதிலும் இன்னமும் அது 50 மற்றும் 20 EMA விற்கு மேல் தான் முடிவடைந்திருக்கிறது. இன்னமுன் அந்நிய முதலிட்டாளர்கள் கொள்முதல் செய்துக்கொண்டிருப்பதாலும் மேலும் இதுவரை விற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு முதலிட்டாளர்கள் இன்று கொள்முதல் செய்திருப்பதாலும் நான் இன்னமும் நிபிட்டி புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர் பார்க்கிறேன். இத்தனை நாள்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் இன்று ஒரு சிறு பகுதியை விற்று லாபம் எடுத்திருப்பார்கள் அதனால் இறங்கியிருக்கலாம்.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்

அந்நிய முதலிட்டாளர்கள் கொள்முதல் செய்துகொண்டிருப்பதால் நாளை நிபிட்டி உயரும் என்றே நம்புகிறேன். நாளை நிப்ட்டிக்கு 5245 மற்றும் 5220 முக்கிய தடுப்பும் 5288 மற்றும் 5301 முக்கிய இடர் ஆகும்.
நிபிட்டி 50 மற்றும் 20 EMA க்கு மேல் முடிந்திருப்பதால் நாளை நிபிட்டி உயரும் என்றே எதிர்பார்க்கிறேன்.
நன்றி!

Monday, March 29, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி 5300 அளவில் முடிவடைந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் சுமார் 1062 கோடிக்கு பங்குகள் வாங்கியிருந்தார்கள். இது பங்குசந்தைக்கு சாதகமான ஒன்று. வாரத்தின் முதல் நாளே அந்நிய முதலிட்டாளர்கள் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியிருப்பது, இந்த வாரம் பங்குச்சந்தை நல்ல ஏற்றம் பெரும் என்பதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இன்று நிபிட்டி வர்த்தக அளவு சுமாராகவே இருந்தது.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்

நாளை நிபிட்டி 5330 க்கு மேல் வர்த்தகமானால் நிச்சயம் ஏறுமுகமாக இருக்கும். நாளை பங்குசந்தைக்கு பாதகமான செய்தி ஏதும் இல்லைஎன்றால் ஒரு பெரிய ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். அந்நிய முதலிட்டாளர்கள் பெரும் தொகைக்கு வாங்கியிருப்பதால் நான் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கிறேன். நாளை நிபிட்டி 5383 5427 வரை செல்லும் என்பது என் கணிப்பு.
நன்றி!
வித்தியாசமான அனுபவம்.
சாலையில் ரத்தம் தோய்ந்திருந்தது! . அருகில் ஒரு இரு சக்கர வாகனம் படுத்திருந்தது; சற்றுத் தள்ளி வண்டியின் சைலேன்செர் முறுக்கிய நிலையில் இருந்தது; பத்தடி தூரத்தில் இன்னொரு இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருந்தது! சாலையின் வலப்புறம் ஒரு தொலைபேசி பூத் நொறுங்கி இருந்தது; நிறைய செருப்புக்கள் சிதறிக் கிடந்தன; பதறிப்போனேன்! என் வண்டியின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றேன். எதோ கலவரம் நடந்திருக்க வேண்டும். அந்த இடம் வெறிச்சோடியிருந்தது. சாலையின் இடப்புறம் சிறு கும்பல் எதையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. வாகனத்தில் சென்றுகொண்டே கவனித்தேன்,"அய்யோ!" ஒருவர் ரத்தவெள்ளத்தில் படுத்துக்கிடந்தார். கலவரத்தில் வேட்டுப்பட்டவரோ? அடப் பாவமே! இத்தனபேறு சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறார்களே, ஒருத்தர் கூட உதவலையே! என்று என் மனம் பதைபதைத்தது. அப்போது
"கட்! பேக்-அப்!" என்று ஒருவர் குரல் கொடுத்தார். சட்றேன்று அந்த சிறு கும்பல் சாலையில் இருந்த வாகனம், செறுப்பு ஆகியவற்றை அகட்ற துவங்கியது. ரத்தவெள்ளத்தில் இருந்தவர் எழுந்து நடந்தார்.
"அடச் ச்சே!" என்று வாகனத்தை வேகமாக செலுத்தினேன்.

Sunday, March 28, 2010

மாங்கோ டீ
மாங்கோ டீ உடலுக்கு புத்துணர்வு தரும். மாயையும் துளசியிளையும் மருத்துவ குணம் கொண்டவை.நீண்டநாள் நோய் வாய் பட்டவர்கள் இதை அருந்தி வந்தால் விரைவில் உடல் சக்தி பெரும். கலையில் மாங்கோ டீ குடித்துவிட்டு நாளை துவங்கினால் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முட்டியும்.
செயிமுறை விளக்கம்
தேவையான பொருட்கள்:
மா இலை - மாந்தளிர் 3 அல்லது 4
துளசி இலை - 3 அல்லது 4
கிரீன் டீ போடி - தேவையான அளவு
இனிப்பு - தேன் அல்லது பனை வெள்ளம் அல்லது சர்க்கரை தேவையான அளவு
தேவையான அள்ளவு நீரை அடுப்பில் வைத்து மாந்தளிரை வேகவைக்கவும், மாங்காய் வாடை வந்ததும் துளசி இலையை சேர்க்கவும், பிறகு கிரீன் டீயை சேர்க்கவும் சிறிது நேரம் கழித்து இறக்கவும். இனிப்பு சேர்த்து பருகவும்.

Saturday, March 27, 2010

யோசிக்க வைத்தவை
ஸ்ரீ ராகவேந்தர் கோயிளில்லிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தேன், அப்போது எங்கோ பார்த்த முகம் ஒன்று என் எதிரே வந்துகொண்டிருந்தது. நினைவுபடுத்திக்கொண்டு அருகில் சென்று நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டேன். அவர் என் தாய் வழி உறவு. அந்த இடத்தில் நான் அவரை எதிர்பார்க்கவேயில்லை. தூங்கி எழுந்ததும் நாம் இன்று இன்னாரை இங்கு சிந்திப்போம் என்று கணிக்கும் ஆற்றல் நமக்கு இல்லை என்பது என் எண்ணம். ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் திட்டப்படி தான் நிகழ்கிறது என்பது என் ஆழமான நம்பிக்கை. எவ்வளவோ உறவினர்கள் இருக்கிறார்கள் நான் ஏன் குறிப்பாக இவரை பார்க்கவேண்டும். இப்படித்தான் சுமார் ஒரு வருடம் முன்பு என் பாட்டி உடல் நலம் குன்றியிருந்தார் அவரை பார்க்கச் சென்றிருந்தேன் அன்றும் இதே உறவினரை பார்த்தேன் அப்போதும் இப்படித்தான் யோசித்தேன். எதற்காக கடவுள் இவரை சந்திக்க வைத்தார் என்று எனக்கு புரியவில்லை! ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், அது அடுத்த எதிர்பாராத சந்திப்பில்லோ அல்லது அதற்குப் பிறகோ நிச்சயம் தெரியவரும். இப்படி எவ்வளவோ எதிபாராத நிகழ்வுகளை அன்றாடம் நம் வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் எதோ ஒரு சிலவற்றை மனம் ஊன்றி கவனிக்கறது, அறிவில் பதிக்கிறது, காரணம் புரியும்போது கடவுளின் கருணையை உணர்கிறது.