Monday, June 6, 2011

எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை..!

எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை.
நிறைவு, குணங்களோடு தொடர்புடையது,
அனுபவிக்க வேண்டிய பொருட்களின் எண்ணிக்கைகளோடு அல்ல.
குறை, சூழ்நிலைகளோடு தொடர்புடையது..
குணங்களின் சங்கமம் சுழ்நிலை.
நம் குறைகள் மேலோங்கும் சூழ்நிலைகள்,
அமைவதும், அமையாதிருப்பதும், கடவுளின் கருணையால்.
நம் முயற்சியால் அல்ல..!
ஒரு நிகழ்ச்சிக்குக் கிளம்புவோம்;
ஏதோ விதத்தில்,
முயற்சித்தும், தவிர்க்க இயலாத தாமதம் உண்டாகும்;
காலம் தாழ்த்தி அடைவோம்;
அங்கே, சற்று முன்பு, நம் குறை காணும் மனிதர்கள் அகன்றது தெரியவரும்.
கடவுள் அருள் பெற்ற தருணமிது..!
விரும்பாத சுழ்நிலையில் சிக்கிக்கொள்வதும்,
விரும்பிய சுழ்நிலையை அமைத்துக் கொள்வதும்,
ஓர் அளவிற்கு மேல், நம் முயற்சிக்கு அப்பாற்பட்டவை.
எதிர்பாராமல் கோயிலுக்குச் செல்லும்படி அமையும்,
அந்நாளும், அந்நேரமும், அத்தெய்வத்துக்கு உகந்ததாக இருக்கும்.
இது முயற்சியா..? கடவுளின் கருணையா..?
யாவும் காரண காரிய அடிப்படையில் இயங்குகின்றன.
எதிபாராத நிகழ்வுகளின் காரண காரிய விதிகள்,
நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை;
அது ஆண்டவன் கணக்கு..!.
பழக்கங்கள் நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கின்றன;
பழகத்தால் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சூழ்நிலைகளை எதிர்கொள்வதும் பழக்கங்களின் துணையால்.
மற்றவர் மதிப்பிட்டில் நிறைவு தேடும் பழக்கம்,
கடவுளின் கருணையில் நிறைவு தேடும் பழக்கமாக மாறினால்,
இருப்பதில் திருப்தி குணம் நிறைந்துவிடும்.
இறைவன் மடியில் நாம்..!
எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை..!