Saturday, April 17, 2010

பங்குச்சந்தை இந்த வாரம் [12 / 04 /10 - 16 /04 /10 ]
இந்த வாரம் நிப்டியால் 5300 புள்ளி அளவைத் தாண்டி மேலே நிலைக்க இயலவில்லை. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருந்த போதிலும் சந்தை இந்த வாரம் முழுவதும் கீழ் இறங்கு முகமாகவே இருந்தது. இந்த போக்கு, வர்த்தகர்கள் லாபத்தை எடுப்பதற்காகவே காத்திருந்தது போல் தென்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் வாரம் முழுவதும் பங்குகள் வாங்குபவர்களாக இருந்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதி நிபிட்டி 5275 என்ற முக்கியமான புள்ளி அளவை உடைத்து மேல் நோக்கி முடிந்திருந்தது. ஆனால் 8 வர்த்தக தினங்கள் கூட அந்த அளவுக்கு மேல் நிற்க முடியாமல் நேற்று 5275 க்கு கீழ் தான் முடிவடைந்தது. இந்த 5275 என்ற புள்ளி அளவு ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து நிபிட்டி மேல் நோக்கிச் செல்வதற்கு மிகப் பெரிய தடையாக இருந்தது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிபிட்டி விலை வரை படத்தைப் பொறுத்த வரை உறுதியற்ற தன்மையே தென்படுகிறது. என் அறிவுக்கு எட்டியவரை, அந்நிய முதலீட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வாங்கிக்க் கொண்டிருப்பதால், இந்த வாரத்தைத் பொறுத்த வரை, நிபிட்டி கீழ் இறங்கத் ஆரம்பித்துள்ளது என்று சொல்வதை விட வர்த்தகர்கள் லாபத்தை எடுத்த வாரம் என்றே சொல்லலாம்.
வருகைக்கு நன்றி!

No comments:

Post a Comment