Monday, August 24, 2009

4
தன் குழந்தைக்கு எதோ நேர்ந்து விட்டது போன்ற உணர்வில் சுமித்ராவின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. 'வீட்டிலிருந்து எவ்வளவு நம்பிக்கையோடு அனுப்பியிருப்பாங்க....! இந்த செய்தி கேட்டா எப்படி துடிப்பாங்க..! அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சோ..சாமி...!' என்று சிந்தித்தவாறு பள்ளிக்குள் நுழைந்தாள் சுமித்ரா.
"பாத்தியா... பணத்த எங்கிருந்து எடுத்துக் கொடுத்தா அந்த இளநீர் கடகாரனுக்கு...!" என்றார் ஒருவர்.
இதைக் கேடடதும் சுமித்ராவின் கவனம் பத்மா மீது குவிந்தது. 'எப்படி ஓடி வந்து அந்தக் குழந்தையை அள்ளிக்கிட்டா... நல்ல மனசு..! மனசுல அன்பு உள்ள்ளவங்களுக்குத்தான் மத்தவங்களுக்கு உதவனும்ங்கற எண்ணம் வரும். ஏதோ விதி... அவ 'அந்த' மாதிரி வாழ்க்கை வாழனும்னு எழுதியிருக்கு.' -இப்போது சுமித்ராவின் மனதில் பத்மா உயர்ந்து நின்றாள். குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
குழந்தயை நினைத்து சுமித்ராவின் மனம் கலங்கிக்கொண்டிருந்தது. மாலை கோவிலுக்கு சென்றாள். கடவுளிடம் குழந்தைக்கு ஏதும் நேர்ந்துவிட்க்கூடாது என்று வேண்டிக்கொண்டாள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு புறப்பட்டாள்.

சன்னதித் தெரு திரும்பியதும், 'அந்த வீட்டில்' கூட்டமும் ஒரு போலீஸ் வேனும் நிற்ப்பது தெரிந்தது. தக்ன்னைக் கடந்து சென்றவர்கள் பேச்சு காதில் விழுந்தது.
"அப்பா....! இனிமேலாவது இந்த தெருவுல இருக்கோம்னு தயங்காம சொல்லமுடியும்னு தோனுது.."
"இவங்கள எல்லாம் ஜெயிலுல வெச்சிடனும். அப்பத்தான் சமுதாயம் சுத்தமாகும்..."
சுமித்ராவின் மனம் பதைபதைத்த்து; கண்கள் பத்மாவைத் தேடியது நெருங்கிச் செல்ல மனம் எத்தனித்தது; நாலு பேர் என்ன சொல்லுவார்களோ என்ற அச்சம் தடுத்தது.
'பகவானே...! எல்லாத்தையும் பாத்துகிட்டு தானே இருந்த... மத்தியானம் உதவியைப் புண்ணியம் அவள காப்பாத்துமா.? என்று மனதுக்குள் கடவுளை வேண்டிக்கொண்டாள்.
அச்சமயம் ஒரு கார் பத்மா வீட்டருகில் வந்து நின்றது. காரின் முன் பகுதியில் ஒரு கட்சியின் கோடி பறந்துக்கொண்டிருந்தது.காரிலிருந்து இளநீர் கடைக்காரன் இறங்கினான், தொடர்ந்து ஒரு கரை வெட்டி கட்டிய மனிதர் இறங்கினார்.
இளநீர் கடைக்காரன் பத்மாவைச் சுட்டிக்காட்டி அந்த மனிதரிடம் எதோ பேசினான்.
அந்த மனிதர் தன் இரு கைகளையும் கூப்பி வணங்கியவாறு பத்மாவை நோக்கி விரைந்துச் சென்றார்.
"காப்பாற்றும்...! தன்னோட கலப்பவரை சாவிலிருந்து காப்பாற்றும் அமிழ்தம் போல் செய்த புண்ணியம் தனக்கு உரியவர்களை துன்பத்திலிருந்து நிச்சயம் காப்பாற்றும்...!" என்று உள்மனம் உரக்க சொன்னது சுமித்ராவி காதுகளுக்கு மட்டும் கேட்டது.
முற்றும்..

Sunday, August 23, 2009

3
'சர் ரென்று ஒரு கார், கட்டவிழ்த்துவிட்ட பலுனிலிருந்து வெளிப்படும் காற்றுப் போல விரைந்து சென்றது.
சாலையோரத்தில் ஒரு சிறு பெண் படித்திருந்தாள்; தலை அருகில் இரத்தம் பரவியிருந்தது; சற்று த்ள்ளி ஒரு சைக்கிள் படுத்திருந்தது ; எப்படி நேர்ந்தது என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.
"படுபாவி..!ஓரமா போற குழந்தையை எப்படி இடிச்சுட்டு நிறுத்தாம கூட போறானே ...படுபாவி..!படுபாவி..!"என்று பதறியபடியே ஓடி வந்து பூமாலையை அள்ளுவது போல குழந்தையை பக்குவமாக அள்ளினாள்; மைடியில் வைத்துக் கொண்டாள் ; இரத்தம் கொப்பளிக்கும் இடத்தில் உள்ளங்கை வைத்து அழுத்தினாள் பத்மா.
"அய்யோ...!", என்று பதற்றத்துடன் ஓடி வந்தால் சுமித்ரா. அருகில் சிதறிக் கிடந்த பையையும் செருப்பையையும் எடுத்து வந்து சைக்கிள் அருகே போட்டால்.
அங்கிருந்தவர்கள் சுழ்ந்து கொண்டனர்.

"அய்யோ....! குழந்தையை இப்படி இடிச்சுட்டுப் போயிட்டானே..!"
"அவன விடக்கூடாது... கார் நெம்பர யாராவது நோட்பண்ணீனிங்களா?"
"இந்த மாதிரி ஆளுங்கள போலீஸ்ல பிடிச்சு கொடுக்கனும்.."
என்று கூட்டத்திலிருந்து பல குரல்கள் சம்பவத்தோடு தங்களை தொடர்பு படுத்திக் கொண்டன.

"டீரீங்..!" என்று பள்ளிகூட மணி அடித்ததும், கல் பட்டதும் சிதறிப் பறக்கும் புறாக்கள் போல, கூட்டம் பறந்தது.
"நீ வாம்மா..எல்லாம் பாத்துப்பாங்க..."
"குழந்தைங்க காத்துகிட்டு இருக்கும் வாம்மா..." என்று சுமித்ராவின் குழுவினர் எவ்வளவோ அழைத்தும் அவள் நகரவில்லை; நகர முடியவில்லை. ஏனோ அவள் கண்கள் பனித்திருந்தது.
அழைக்காமலேயே ஒரு ஆட்டோ பத்மா அருகில் வந்து நின்றது, குழந்தையோடு மெல்ல எழுந்து ஆட்டோவுக்குள் அமர்ந்தாள். "ஆண்டி..!ஆண்டி..!" என்று அழுத குழந்தையை சமாதானப்படுத்தி அருகில் அமர்த்திக்கொண்டாள். அங்கு நின்றிருந்த இளநீர் கடைக்காரனிடம் அந்த கார் நம்பரையும் தன தொலைபேசி எண்ணையும் கொடுத்தால் பத்மா.
"உம்..! ஆஸ்பிடலுக்கு போ..!" என்றாள் ஆட்டோக்காரனிடம்.
ஆட்டோ கிளம்பியது.
தொடரும்..

Saturday, August 22, 2009

2
இவர்களின் கவனமும் ஓசை சென்ற திசையில் திரும்பியது. சுமித்ரா உட்பட அனைவரும் முகம் சுளித்தனர்.
"ச்சீ.. இவளெல்லாம் பொம்பளையா.. கொஞ்சமும் வெக்கம் இல்லாம இப்படி நாலு பேர் மத்தியில வராளே.. மானம் கெட்டவ..!"
"இவளால சன்னதித் தெருவுக்கே அவமானம்..இந்த மாதிரி பொம்மனாட்டிங்க உயிரோடவே இருக்கக் கூடாது.."
"அர்த்த ராத்திரியில எத்தன காரு.. எத்தன அட்டோ..ச்சீ..!" என்று சுமித்ரா நின்றிருந்த குழுவிலிருந்து தங்கள் வெறுப்பை வார்த்தைகளால் அள்ளி வீசினார்கள் .
பத்தடி துரத்தில் சாக்கடை இருந்தாலும் அதன் துர்நாற்றம் மனதில் உண்டுபண்ணும் அருவருப்பு உணர்வைப் போல பர்மாவின் இருப்பு அவள் மனதில் அருவருப்பு உணர்வை உண்டாக்கியது; அதை சகிக்க முடியாதவர்களாக முகத்தை சுளித்துக் கொண்டு மணி ஓசைக்காக காத்திருந்தனர்.
சன்னதித் தெருவில் 'அந்தத் தொழில்' செய்யும் இருபது பேர்களில் ஒருத்தி இந்த பத்மா.சற்றுத் தொலைவில் ஒரு குழந்தையை அழைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள்."ஆண்டி இது..இது.." என்று, அவள் அழைத்து வந்த குழந்தை சுடிக்காட்டிய அந்த இளநீர் கடைக்கு சென்றாள். குழந்தைக்கு இளநீர் வாங்கிக்கொடுத்தாள். தன் ரவிக்கைக்குள் இருந்து பணம் எடுத்து கொடுத்தால். மரங்ககள், மேகங்கள், தெரு குப்பைத் தொட்டிகள் போன்ற கண்கள் இல்லாத உயிரினங்கள் மற்றும் பொருட்கள் மீது பார்வையைத் தவழவிட்டாள் பத்மா. ஆனால் பலரின் கண்களும் பத்மாவை மொய்த்தன.
"ஐயோ..! என்ற அலறல் சத்தம் அனைவரையும் தன் திசைக்கு திருப்பியது.
தொடரும்...

Friday, August 21, 2009

அன்பே அமிர்தம்
மித்தியான வேலை. தன் மகளை அழைத்துச்செல்வதற்க்காக பள்ளிக்கூட வாசலில் நின்றிருந்தாள் சுமித்ரா. மணி அடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே வந்து விடுவது வழக்கம். அவள் வசிக்கும் சன்னதி தெருவில் இருக்கும் சில குழந்தைகளும் இதில் படிக்கிறார்கள். அந்த குழந்தைகளை அழைத்து செல்வதற்காக நிற்கும் அம்மாக்கள், பாட்டிக்களோடு பேசிக்கொண்டிருபாள்.
இவர்களோடு பேசுவதில் பல புதிய பதார்த்தங்கள், குழம்பு வகைகள், புஜை முறைகள் எனப் பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டள். அது மட்டுமல்ல அவர்கள் முலம் தெருவில் உள்ளவர்களைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியவரும். " அப்படியா.. அப்படியா.." என்று கேட்பாளே தவிர இவள் யாரைப்பற்றியும் புரளி பேசியது கிடையாது. தெய்வ பக்தி நிறைந்தவள்.
"சுமித்ரா...! நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன்ல.. அப்போ கூடத்துல மாட்டியிருந்த ' கீதா சாரம்' பார்த்தேன்.. அப்பவே சொல்லனும்னு நினைச்சேன், பேச்ச்சு சுவாரியத்துல மறந்துட்டேன்.. எப்போதும் அதை புஜை ரூம்லதான் மாட்டனும். ஏன்னா.. அது போர்கள காட்சி, வீடும் அப்படி ஆயிடும்னு என்னகுத் தெரிஞ்சவங்க சொன்னாங்க.". என்றாள் நான்காவது வீட்டில் இருக்கும் பாட்டி.
"அப்படியா.. இன்னிக்கே மாத்திடுறேன் பாட்டி" என்ற வார்த்தைகள் நேரே மனதிலிருந்து ஒலித்தது. இந்த அன்பு தான் அவளை எல்லோருக்கும் பிடிக்கும்படி செய்திருந்தது.
"ஏய்..! மச்சி ஐட்டம்டா.." என்ற ஆட்டோக்காரர்கள் குழுவிலிருந்து ஒருவன் கத்த...
"ஏய்..! உஸ்ஸ்.. பிச்சு..." என்று பலப்பல ஓசைகள் தொடர்ந்து கிளம்பியது. கை தட்டி ஆரவார்ரம் செய்தனர்.
தொடரும்...

Thursday, August 20, 2009

4

"என்னய்யா ஒண்ணும்மில்ல.. வாய்யா ஸ்டேஷனுக்கு.. " என்று பலிக்கு இழுத்துச் செல்லும் ஆட்டைப்போல அவர்கள் இழக்க, இவன் வர மறுக்க, அவர்கள் அடிக்க, இவன் அலற,விதியின் விளையாட்டைப் பார்த்து வியந்தேன்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள் இங்கே மூன்று நிமிடத்துக்குள் விளைந்துவிட்டதே!

நீச்சல் தெரியாதவன் நீரில் முழ்கி தத்தளிப்பது போல தத்தளித்தான்.வாய் குழறியது. தேகந்தமும் நடுங்கியது, என் இப்படி மிரண்டு போகிறான்?

எல்லோரும் பார்க்கிறார்களே என்ற கூச்சமோ? பலர் முன் அடிபடுகிரோமே என்ற ச்ருமைய? காப்பாற்ற யாரும் இல்லையே என்ற ஏக்கமோ? திருப்பி அடிக்க முடியவில்லையே என்ற இயலாமையா? திருப்பி அடித்தால் கொன்றுவிடுவார்களோ என்ற பயமோ? இங்கேயே இப்படி அடிக்கிறார்களே ஸ்டேஷனுக்கு கொண்டு போய் என்ன செய்வார்களோ என்ற திகிலா?

எரியும் நெருப்பை அணைப்பதற்கு காய்ந்த கட்டைகளை அள்ளிப்போட்டது போல் தான் அவர்கள் அப்பெண்ணிற்கு செய்த உபகாரம். உதவி செய்ததால் அனுகூலத்தை விட பிரதிகூலம் தான் அதிகம்.

இன்று உன் முகத்தில் விழித்தால் தான் எனக்கு இந்த அவமானம் என்று உதைன்ப்பானோ? தெருவில் போறவனெல்லாம் என்னை அடிக்கும் படி செஞ்சிட்டியே என்று இடிப்பானோ? முன் பின் தெரியாதவனெல்லாம் என் சட்டையை பிடுச்சு கேள்வி கேக்கும் படி பண்ணிட்டியே என்று அடிப்பானோ? கையாலாகாதவனால் வேறு என்ன செய்ய முடியும்.

இந்த சம்பவத்தை அவன் மறக்கும் வரை அப்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்க்க மனம் பதைக்கிறது!

"டேய்..! ஸ்டேஷனுக்கு நடடா..!"

"சார்.. அவர விட்டிடுங்க.. ஐயோ..!" என்று விளையாடும் போது தடுக்கி விழுந்து தடுமாறும் குழந்தையை அள்ளி அனைத்துக் கொள்ள ஓடும் தாய் போல் ஓடினாள்.

முற்றும்.

3

திருமணத்திற்கு முன் எப்படியெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தார்களோ? இன்று இங்கு இவன் இப்படி கேவலப்படித்துவதைப் பெற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் கண்ணில் திராவகம் பட்டது போல் இருக்காதா?

சுவாதி நட்சத்திரத்தில் பெய்த மழையின் ஓர் தாரை முத்துச்சிப்பியில் விழுந்து, உத்தமமான முத்தாவதும், மற்றோர் தாரை பாம்பின் வாயில் விழுந்து கொடுமையான விஷமாவதும், மழையின் இஷ்டப்படியா நிகழ்கிறது? மகேசன் விதித்த படி நடக்கிறது.

இப்படி கஷ்டப்படுவதை விட பிறந்த வேட்டுக்கே போய்விடலாமே, ஒரு வேலை காதல் திருமணமோ? வாழ்ந்தாலும் கெட்டாலும் உன்னோடுதான் என்று வந்தவளோ? இந்த வக்கிர புத்திக்காரனோடு வாழ்வது தன தலைவிதியென்று, குளிர்ச்சி வெப்பம் என்றறியாத கற்பாறையை போல் வாழ்கிறாளோ?

பெண்கள் பொறுத்துப் பொறுத்துப் புழுங்கிப்போவது, தன்னைப் பெற்றவர்கள் மனம் வாருந்தக் கூடாது என்பதால் தானோ?

பொது இடத்திலே இப்படி என்றால், நான்கு சுவர்களுக்குள் எத்தனை இம்சை செய்வானோ?

தன்னை விட்டால் வேறு கதி இல்லை என்ற ஆணவமா? திருப்பி அடிக்கமாட்டாள் என்ற தைரியமா? இந்தே கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் என்ற அசட்டையா? பிறரிடம் காட்ட இயலாத கோபத்தை யெல்லாம் இவளிடம் காட்டுக்றானோ இவன் அடித்துப் பழகுவதற்கு இவள் என்ன பஞ்சிங் பேக்கா?

நல்ல குடியில் பிறக்காதவன் என்பதை பண்பு துலக்கியது.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்.. சும்மா பேசிக்கிட்டிருந்தோம்.." என்று இவன் செய்த மைமாலன் பலிக்காமல் போனது.

தொடரும்....

Wednesday, August 19, 2009

2
நான்கு சுவர்ர்களுக்குள் இருக்க வேண்டியதை நான்கு திக்குகளுக்கு மத்தியில் நடத்துகிறானே இவன் படித்தவனா?
தனக்கு நேர்ந்த சிறுமையை ninaithhtu நினைத்து அப்பெண் மனம் எப்படி குன்றியிருக்கும் . இம்சையின் நுகத்தடி அழுத்தி அழுத்தி நைந்த உள்ளம் என்பது முகத்தில் பிரதிபலித்தது !
பொறுமை குணம் இருப்பதால் அரற்றி ஆர்பாட்டம் செய்து அவனை அசிங்கப்படுத்தாமல் அடக்கமாக இருந்தாள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . பொறுமை தானே குடும்பப் பெண்ணின் லட்சணம் . இல்லாளுடைய நற்குண நற் செயல்களுமே இல்லத்துக்கு மங்களம் என்று கூறுவர் .
சிறிதும் முயற்சி செய்யாமல் அமிர்தம் தானே வந்து நம் மடியில் விழுந்து விட்டால் அது அல்பமாய் தான் தோன்றும் . இப்படி தப்பான எண்ணத்தை உண்டு பண்ணுவது மனத்தின் சுபாவம் .
தாமரையின் கிழங்கும் ,தவளையும் ஒரே இடத்தில் இருந்தும் அக்கிழன்கிலிருந்து உண்டாகும் தாமரைப்புவின் பறிமலத்தையும் தேனையும் அந்தத் தவளை அனுபவிக்காமல் சேற்றிலே கிடந்தது உழன்று கொண்டிருப்பது போல அப்பெண்ணின் நற்குணத்தை இவனால் உணர முடியவில்லை !

தொடரும்....

Tuesday, August 18, 2009

பெண் மனம் என்ன மனமோ?

"ஏய்..! ஏய்..! டேய் நில்லுடா ..!" என்று பதற்றத்துடன் ஓடினார்கள்.

" அந்த ஆளு ரொம்ப நேரமா அடிச்சிக்கிட்டு இருக்கான் சார்" - என்றான் வாகனங்களுக்கு டோக்கன் தருபவன்.

ஏன் இந்த பரபரப்பு என்பது அந்தக் காட்சியைக் காணும் வரை விளங்கவில்லை.

நூலகக் கட்டிடத்தின் அருகில் தரையில் ஒரு பெண் மல்லாக்காய் படுத்திருந்தால் சற்றைக்கெல்லாம் எழுந்து அமர்ந்தாள். ஒருவன் அப்பெண்ணை நோக்கி விறுவிறுவென நடந்து வர , இரு கைகளையும் கூப்பி தலை குனிந்து எதோ சொல்லிக் கெஞ்சுகிறாள். வழியோடு போகிற ஒருவர் அவானை தடுத்து நிறுத்தினார்.

கணவன் மனைவி சண்டை . அடிப்பட்டு வலியின் கிறக்கத்தில்தான் அப்பெண் படுத்திருந்தாள் என்பது புரிந்தது. இருவரும் படித்தவர்கள், நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்பதை தோற்றம் வெளிப்படுத்தியது.

இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதை உருவம் காட்டியது . பிரச்சைக்கு காரணம் சந்தேகமாக இருக்குமோ , குடி கெட சந்தேகம் ஒன்று போதுமே .

இரு கை கூப்பி ஏதோ சொல்லிக் கேஞ்சினாலே இதற்க்கு மேல் என்னால் தாங்க முடியாது அடிக்காதே என்றா ? இனி இந்த சித்திரவதையை என்னால் அனுபவிக்க முடியாது என்றா ?

தொடரும் ....

Monday, August 17, 2009

மனம் அங்கிருந்த அறைகளில் ,எந்த அறையில் நாம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்ததால், அவர் பேசியதில் இதைத் தவிர வேறு எதுவும் என் காதில் விழவில்லை"..... இந்த அனுபவத்தை வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு சொல்லி அழைச்சிக்கிட்டு வரசொல்றாரே.. இத வீட்டுல சொன்னா களேபரம் உண்டாகுமே... இதப்போய் எப்படிச் சொல்றது .. " என்று எண்ணிக் கொண்டிருக்கையில்..
" எல்லோரும் அந்த ரூம்ல போய் செக்-அப் பண்ணிக்குங்க..." என்றது ஒரு குரல்.
செக்-அப்-பா எதற்கு ? அய்யோ .. ! என்ன செய்வார்களோ ? என்று மனம் பதைத்து.
அந்த அறையில் நான்கு டாக்டர்கள் மூலைகொருவராய் அமர்ந்திருந்தனர் . அவர்களில் ஒருவரிடம் சென்றேன் .
" கைய நீட்டுங்க ..." என்றார்.
நீட்டினேன். முழங்கைக்கு மேல் பச்சைத் துணியை அழுத்தமாகச் சுற்றி பிரஷேர் பார்த்தார்.
"நார்மல் , கடந்த ஆறு மாதத்தில் மஞ்சக்காமாலை, டைபாய்டுவந்திருந்ததா.."
என்றார் .
"இல்லையே .." என்றேன்.
சரி .. அந்த ரூமுக்குப் போங்க ..." என்றார் .
' அந்த" அறையில் பன்னிரண்டு கட்டில்கள் போட்டிருந்தது. எதில் படுப்பது என்று விழித்தவாறு சென்றேன்.
"ஹலோ !" என்ற பெண் குரல் அழைப்புகேட்டுத் திரும்பினேன் . உதட்டுச் சாயம் பூசி , ஓயயராமாய் நின்றிருந்தாள் . குண்டர் சட்டத்தில் கைதாணவம் போல் ஒருவன் அவளருகில் நின்றிருந்தான் .
" படுத்துக்கப்பா.. " என்றான் அந்த தடியேன்.
எப்படியிருக்குமோ.. என்ன பண்ணுமோ .. என்ற மந்திரத்தை மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது .
என் வலது கையை மெல்ல இழுத்து, பட்டைத் துணியால் , முழங்கைக்கு மேல் இருக்கமாச் சுற்றினான். அந்தப் பெண் அருகில் இருந்த பவுச்சை எடுத்து, தாழ்த்திப் பிடித்துக் கொண்டு அதில் இணைத்திருந்த குழாயை நீட்டி , அதன் முனையில் இருந்த ஊசியை , என் முழங்கையில் புடைந்திருந்த இரத்தக்குழாயில் வலிக்காமல் செருகினாள்.
பள்ளம் கண்ட நீரைப்போல் இரத்தம் விரைந்து சென்று பவுச்சை நிறைக்கத் தொடங்கியது. மனம் பஞ்சு போல லேசானது. இத்தனை நாள் எண்ணியிருந்த ஆசை நிறைவேறியது.
முற்றும் .
அங்கே குழுமியிருந்தவர்களை பார்த்ததும் என்ன இவ்வளவு பேரா? என்று வியப்பாக இருந்தது. மனதுக்குக் கொஞ்சம் பலம் வந்தது போலவும் இருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, ஓர் ஓரமாக சென்று நின்றேன்.
என்னைவிட வயதில் சிறியவர்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்தபோது, இத்தனை வருடங்கள் வீணாக்கியதை எண்ணிவருந்தினேன், இவ்வளவு நேரம் கொண்டிருந்த பயம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன். இத்தனை நாட்கள் வளர்த்த இந்த உடலின் பயனை இன்று அனுபவிக்கப் போவதை நினைத்து மனம் ஆனந்தத்தில் மிதந்தது.
எல்லோரும் அந்த ரூமுக்கு போங்க.. என்று அந்தக் குரல் என் சிந்தனையை கலைத்தது.
ஓர் அறையில் சென்று அமர்ந்தோம். அங்கே சில பெரும் புள்ளிகளும் அமர்ந்திருந்தனர். என்ன இவர்களுமா.. என்று பிரம்மித்தேன், அவர்களில் ஒருவர் எழுந்து பேசத் தொடங்கினார். "... இதனால நோய் எதுவும் வராது, இவங்க ரொம்ப சுகாதார முறையில நடத்தறாங்க நான் பல தடவை செஞ்சியிருக்கேன், என் உடம்புக்கு எந்த கெடுதலும் வரல... நான் நல்லாத்தான் இருக்கேன் . எல்லாம் முடிந்ததும் பழங்களும் குளிர்பானமும் கொடுக்க ஏற்பாடு செஞ்சியிருக்காங்க.. களைப்பு நீங்கி மகிழ்ச்சியா வீட்டுக்கு போகலாம். உங்க அனுபவத்தை உங்க வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சொல்லி, அடுத்த முறை அவங்களையும் கட்டாயம் அழச்ச்கிட்டு வரணும்..
தொடரும்...

Sunday, August 16, 2009

'அந்த' அனுபவம்.

பதினெட்டு வயதைக் கடந்து பல வருடங்கள் கழிந்த பிறகு, இன்று தான் 'அந்த' அனுபவம் பெற வாய்ப்பு கிட்டியது . எத்தனையோ நாட்கள் எண்ணியிருந்த ஆசை, இன்று நிறைவேறப் போகிறது . சிறுவயதில் எப்படியோ என்னுள் விழுந்த பொறி இன்று பெரிய நெருப்பாய் மாறி என் மனத்துள் கனன்று கொண்டிருந்தது . என் உடல் முழுவதும் உஷ்னம் பரவி, ஜிவ்வ் வேன்றுருந்தது .


ஆனால், அந்த இடத்திற்குப் போவதை யாராவது பார்த்து, வீட்ல தெருயபடுத்திவிட்டால் என்ன ஆகுமோ அன்ற பயம் மனதைக் கவ்வுயது. எத்தனை நாட்கள் தான் பயந்து, பயந்து ஆசையை அடக்கி வைப்பது. நம் உயிர் வாழ வரையறுக்கப்பட்ட நாட்க்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியாது;  அடுதத  விநாடி நிகழப்போவது என்ன என்பதும் தெரியாது.  இப்படி வாழ்க்கை நிலையில்லாமல் இருக்க , சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம் ஆசைகளை நாம் ஏன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.


நான் நான்கு முறை செய்திருக்கிறேன்;  நான் முன்று செய்திருக்கிறேன், என்று நண்பர்கள், மார்தட்டிக் பெருமிதப்படும் போது, நான் இந்த இருபத்தியெட்டு வயதுவரை ஒரு முறை கூட செய்யவில்லையே என்று எண்ணும்  போது வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்து என்ன சாதித்தேன்..? சாவதற்குள் இதையாவது செய்து விடுவோம் என்ற தீர்மானத்துடன் ‘அந்த’ கட்டிடத்துக்குள் நுழைந்தேன்.


அங்கே குழுமியிருந்தவர்களை பார்த்ததும் ஆ..! என்ன இவ்வளவு பேரா என்று வியப்பாக இருந்தது. மனதுக்கு கொஞ்சம் பலம் வந்தது போலவும் இருந்தது. சைக்கிளை ஓரமாக நிருத்த்திவிடு, தயங்கி தயங்கி, ஓர் ஓரமாக சென்று நின்றேன்.


என்னைவிட வயதில் சிறியவர்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்த போது, இத்தனை வருடங்கள் வீணாக்கியதை எண்ணி வருந்தினேன். இவ்வளவு நேரம் கொண்டிருந்த பயம் அர்த்தமற்றது என்பதையும் உணர்ந்தேன்.  இத்தனை நாட்கள் வளர்ந்த இந்த உடலின் பயனை இன்று அனுபவிக்கப் போவதைக் நினைத்து மனம் ஆனந்தத்தில் மிதந்தது.


"எல்லோரும் அந்த ரூமுக்கு போங்க.."  என்ற அந்தக் குரல் என் சிந்தனையை கலைத்தது.


ஓர் அறையில் சென்று அமர்ந்தோம், அங்கெ சில பெரும் புள்ளிகளும் அமர்ந்திருந்தனர். என்ன இவர்களுமா..! என்று  பிரம்மித்தேன். அவர்களில் ஒருவர் எழுந்து பேசத் தொடங்கினார்..


"...   இதனால் நோய் எதுவும் வாராது, இவங்க ரொம்ப சுகாதார முறையில் நடத்திராங்க.... நான் பல தடவை செஞ்சிருக்கேன்...  என் உடம்புக்கு எந்த கெடுதலும் வரல ... நான் நல்லான் இருக்கேன்; எல்லாம் முடிஞ்சதும்  பழைங்களும்  குளிர் பானமும்  கொடுப்பதற்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க,  களைப்பு நீங்கி மகிழ்ச்சியா வீட்டுக்குப் போகலாம். உங்க அனுபவத்த உங்க வீட்டுக்கு,  அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கும்  தெரிந்தவங்களுக்கும்  சொல்லி,  அடுத்த முறை அவங்களையும்  கட்டாயம்  அழச்சிக்கிட்டு  வரணும்... "


மனம் அங்கிருந்தத அறைகளில் எந்த அறையில் நாம் செல்ல வேண்டுமஎன்கிற எண்ணத்திலேயே இருந்ததால்,  அவர் பேச்சில்,  இவற்றைத் தவிர  வேறு எதுவும் என் காதில் விழவில்லை.


இந்த அனுபவத்த  வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட  சொல்லி அழைச்சிகிட்டு வரச் சொல்ராரே. இத வீடுல சொன்ன களேபரம் உண்டாகுமே இதப்போய்  எப்படிச் சொல்றது என்று எண்ணிக் கொண்டிருக்கையில்...


"எல்லலரும் அந்த ரூம்ல போய்  செக்-அப பண்ணிக்குங்க..." என்றது ஒரு குரல்.


"செக்-அப் எதற்கு...  அய்யயோ..! என்ன செய்வாங்களோ.." என்று  மனம் பதைப்பதைத்தது.


அந்த அறையில் நான்கு டாக்டர்கள், மூலைக்கொருவராய் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவரிடம்  சென்றேன்
"கைய நீட்டுங்க..." என்றார்.


முழ்ங்கைக்கு மேல், பச்சை நிறத் துணியை அழுத்தமாக சுற்றி ப்ரேஷர் பார்த்தார்


"நார்மல்...கடந்த அறு மாததில் மஞ்சல் காமாலை, டைப்பாயிட் வந்திருக்கிறதா..?" என்றார்


"இல்லையே..." என்றேன்.


"சரி, அந்த  ரூமுக்குப் போங்க..." என்றார்.


அந்த அறையில் பன்னிரண்டு கட்டில்கள் போட்டிருந்தது. எதில் படுப்பது என்று விழித்தவாறு சென்றேன்.


"ஹலோ.." என்ற பெண் குரல் அழைப்புக் கட்டுத திரும்பினேன்.
உதட்டுச் சாயம் பூசி ஒய்யாரமாய் நின்றிருந்தாள்.  குண்டர் சட்டத்தில் கைதானவன் போல் ஒருவன், அவளருகில் நின்றிருந்தான்.


"படுத்துக்கப்பா.." என்றான் அந்த தடியன்.


"எப்படியிருக்குமோ... என்ன பண்ணுமோ..."என்ற மந்திரத்தை மனம்  ஜபித்துக் கொண்டே இருந்தது.


என் வலது கையை மெல்ல இழுத்து, பட்டைத் துணியால், முழங்கைக்கு மேல் இறுக்கமாக சுற்றினான்.  அந்தப பெண்,  அருகில் இருந்த  'பவுச்'சை எடுத்து தாழ்த்திப் பிடித்துக் கொண்டு, அதிலிருந்த  குழாயை  நீட்டி, அதன் முனையில் இருந்த ஊசியை என் முழங்கையில் புடைந்திருந்த ரத்தக் குழாயில் வலிக்காமல் செருகினாள்.


பள்ளம் கண்ட நீரைப்போல் ரத்தம் விரைந்து சென்று 'பவுச்'சை நிறைக்கத் தொடங்கியது. மனம் பஞ்சு போல் லேசானது. இத்தனை நாட்கள் எண்ணியிருந்த ஆசை நிறைவேறியது.