Wednesday, April 28, 2010

காக்கைகள் நல்லவை

காக்கைகள் நல்லவை.

மத்தியான வேலை. வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன் கொண்டிருந்தேன். எதேச்சையாக அன்னாந்துப் பார்த்தேன். சற்றுத் தொலைவில்  அந்த மின்சாரக் கம்பி மீது உட்கார்ந்திருந்த காகம்  என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அது மிகுந்த கோபத்தோடு முறைத்துப் பார்ப்பது போல் எனக்கு தோன்றியது. இதை எங்கேயோ பார்த்திருக்கோமே' என்று சிந்தித்துக் கொண்டு சென்றேன். ஒரு வேலை அன்று அம்மாவாசை சோறு சாப்பிட வந்த காக்கைகளில் இதுவும் ஒன்றாக இருக்குமோ. ஆம் நினைவுக்கு வந்து விட்டது. இது, அந்த  கைப்பிடிச் சுவரில் வைத்திருந்த சாதத்தை அஞ்சி அஞ்சி சாப்பிட வந்த போது, குழந்தை பயப்படுவாளோ என்று நான் தான் அதை விரட்டிவிட்டேன். ஆனாலும், அது ஒரு வாய் அள்ளிக்கொண்டு தான் போனது. தோற்றத்தில் பெரும்பாலான காக்கைகள் ஒன்று போல இருந்தாலும், இது என்னைப் பார்த்த விதத்தை வைத்து நான் விரட்டி அடித்த காகம்  இது தான் என்ற முடிவுக்கு வந்தேன். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் என்னை அப்படி பார்க்கிறதோ என்று ஒரு அச்சம் உண்டானது. நான் நினைத்தது சரிதான். கா...கா... என்று கரைந்தது.. எங்கிருந்தோ நான்கைந்து காக்கைகள் பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தன. மீண்டும் கா...கா... என்று கரைந்தது. அதற்க்கு பதில் சொல்வது போல் மற்றக் காக்கைகளும் கரைந்தன. அதில் ஒன்றிரண்டு காக்கைகள் தலையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி ஆட்டி என்னை ஒரு மாதிரி பார்த்தன.  அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் என்னை கொட்டுவதற்கு தயார் ஆவது போல் தோன்றியது.  'திக்' கென்று இருந்தது.

அன்று நான் விரட்டி அடித்ததை அவர்களிடம்  சொல்லி,   என்னைப் பழிவாங்க சதித்திட்டம் திட்டுகிறதா? ஐயோ! கூட்டமாக கொட்ட வந்தால் நான் என்ன செய்வேன்...! ஒதுங்குவதற்கு ஏற்ற இடம் கூட இல்லையே..! பகவானே இந்த ஆபத்திலிருந்து என்னை காப்பாற்று. எத்தனையோ முறை இவர்கள்  என் மீது எச்சம் போட்டிருக்கிறார்கள்,  திரும்பி ஒரு வார்த்தை திட்டி இருப்பேனா...! சில முறை இறக்கையால் தலையில் அடித்துவிட்டுப் போவார்கள்; அப்போதெல்லாம் நல்ல சகுனமா கேட்ட சகுனமா என்று யோசிப்பேனே தவிர திருப்பி அடிக்கனும் என்று யோசிச்சதில்லை.   எதற்க்காக இதை எல்லாம் யோசிக்கிறேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

அந்த கம்பத்தை நெருங்க நெருங்க படபடப்பு அதிகமானது. கண்களை சுருக்கிக் கொண்டேன்; தலையை முடிந்த வரை உடம்புக்குள் இழுத்தேன்; காதுகள் தோள்பட்டையை தொட்டன; மேலும் உள்ளுக்கு இழுக்க முயன்றேன்; முடியவில்லை. என்னையறியாமல் உடல் விறைப்பானது.  பயம் வந்தால் அருகில் இருக்கும் எதையாவது இறுக்கமாக பிடித்துக் கொண்டு கணங்களை முடிக்க கொள்ளவோம் அல்லவா அது போலத் தான் வாகனத்தைப் பிடித்துக் கொண்டிருந்தேன். வாகனம் தானே ஓடிக் கொண்டிருந்தது. கம்பத்திற்கு மிக அருகில் வாகனம் சென்றது; என் முழு பயத்தையும் ஒன்று திரட்டி ஒரே முச்சில் வாகனத்தின் வேகத்தை கூட்டினேன் விர் ரென்று சீறிப் பாய்ந்து கம்பத்தை கடந்து சென்றேன். அச்சமயம் அந்த காக்காய் கூடத்தில் இருந்து ஒரு காகம்  பட் டென்று பறப்பது போல் தோன்றியது, என்னை கொட்டத் தான் வருகிறது என்று நினைத்தேன் குப் பென்று வேர்த்தது. கடவுள் புண்ணியம் நான் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை இது அந்த காகம் இல்லையோ..! இல்லை அந்த சம்பவத்தையே மறந்திருக்குமோ…! ஒரு வீடா  இரண்டு வீடா  ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு.   நல்ல சுரம் அடித்து விட்டது போல் உணர்ந்தேன்.  ஸூஉ... அப்பாடா... முச்சை நன்றாக இழுத்து விட்டேன். ச்சே..!போயும் போயும் காக்கையைப் பார்த்தா பயப்படுவது. என் உயரம் என்ன காக்கையின் உயரம் என்ன? என் எடை என்ன காக்கையின் எடை என்ன? என் அறிவு என்ன காக்கையின் அறிவு... ஆம் அறிவு…, இவ்வளவு  நேரம் எங்கே  போயிருந்தது இந்த அறிவு’.  என்னை நானே திட்டிக் கொண்டேன்.  

மனித குலத்தில், இந்த காக்கையைப் போல என்ன விரட்டினாலும் தன காரியத்தை சாதித்துக் கொள்ளும் சில மனிதர்களும் இருக்கிறார்கள்; ஆனால் காக்கை இனத்தில் சமயம் பார்த்து வஞ்சம் தீர்க்கும்  காக்கைகள் இல்லை. அந்த வகையில் காக்கைகள் நல்லவை. 

 


Sunday, April 18, 2010

பங்குச்சந்தை அடுத்த வாரம் [ 19 /04 /10 - 23 /04 /10 ]
இன்னமும் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகள் வாங்கிய வண்ணம் இருப்பது பங்குசந்தைக்கு நல்ல செய்தியாகும். அவர்கள் பங்குகள் விற்கத் துவங்காத வரையில் நிபிட்டி கீழ் இறங்குவதற்கு வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். அடுத்த வார வர்த்தகத்தைப் பொறுத்த வரையில் 5275 புள்ளி அளவு நிபிட்டி மேல் நோக்கி செல்வதற்கோ கீழ் இறந்குவதர்க்கோ ஒரு நுழைவாயிலைப் போல் செயல்படும் என்று நினைக்கிறேன். நிபிட்டி, இந்த 5275 புள்ளி அளவுக்கு மேல் நிலைத்து நிற்குமானால் அப்போது சந்தை மேல் நோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன என்று சொல்லலாம். நிபிட்டி விலை வரை படத்தில், ஓர் உறுதியற்ற தன்மையே உருவாகிஉள்ளது. என்னுடைய கணிப்பில் நிப்டியின் திசையை நிர்ணயிக்க விலை வரை படத்தில் இன்னமும் சில மாதிரிகள் தேவைப்படுகிறது. என் அறிவுக்கு எட்டிய வரை நிபிட்டி அடுத்த வாரம் ஒரு குறுகிய அளவுக்குலேயே வர்த்தகமாகும் என்று கருதுகிறேன்; மேல் நோக்கியே வர்த்தகமாகும் என்று நினைக்கிறேன். மீண்டும் 5275 என்ற புள்ளி அளவு அடுத்த வார வர்த்தகத்திற்கு கவனிக்க வேண்டிய புள்ளி அளவாகும். அடுத்த வாரம் பங்குசந்தையில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்.
நிப்டியின் வர்த்தகமாகும் அளவு
மேல் நோக்கிச் சென்றால் 5275 - 5427
கீழ் நோக்கிச் சென்றால் 5275 - 5140
வருகைக்கு நன்றி!

Saturday, April 17, 2010

பங்குச்சந்தை இந்த வாரம் [12 / 04 /10 - 16 /04 /10 ]
இந்த வாரம் நிப்டியால் 5300 புள்ளி அளவைத் தாண்டி மேலே நிலைக்க இயலவில்லை. நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருந்த போதிலும் சந்தை இந்த வாரம் முழுவதும் கீழ் இறங்கு முகமாகவே இருந்தது. இந்த போக்கு, வர்த்தகர்கள் லாபத்தை எடுப்பதற்காகவே காத்திருந்தது போல் தென்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்கள் வாரம் முழுவதும் பங்குகள் வாங்குபவர்களாக இருந்தனர். ஏப்ரல் 1 ஆம் தேதி நிபிட்டி 5275 என்ற முக்கியமான புள்ளி அளவை உடைத்து மேல் நோக்கி முடிந்திருந்தது. ஆனால் 8 வர்த்தக தினங்கள் கூட அந்த அளவுக்கு மேல் நிற்க முடியாமல் நேற்று 5275 க்கு கீழ் தான் முடிவடைந்தது. இந்த 5275 என்ற புள்ளி அளவு ஜனவரி 6 ஆம் தேதியிலிருந்து நிபிட்டி மேல் நோக்கிச் செல்வதற்கு மிகப் பெரிய தடையாக இருந்தது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிபிட்டி விலை வரை படத்தைப் பொறுத்த வரை உறுதியற்ற தன்மையே தென்படுகிறது. என் அறிவுக்கு எட்டியவரை, அந்நிய முதலீட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வாங்கிக்க் கொண்டிருப்பதால், இந்த வாரத்தைத் பொறுத்த வரை, நிபிட்டி கீழ் இறங்கத் ஆரம்பித்துள்ளது என்று சொல்வதை விட வர்த்தகர்கள் லாபத்தை எடுத்த வாரம் என்றே சொல்லலாம்.
வருகைக்கு நன்றி!

Friday, April 16, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி குறுகிய அளவுக்குலேயே வர்த்தகமானது. மேலும் கீழ் இறங்கி முடிவடைந்தது. இன்று முழுவதும் நிபிட்டி 5200 - 5100 என்ற எல்லைக்குலேயே வர்த்தகமானது. நிபிட்டி, முன்று முறை 5275 என்ற அளவை கடந்து செல்ல முயன்றது. ஆனால் கடக்க முடியாமல் தடுமாறி, மிக முக்கிய பாதுகாப்புப் புள்ளியான 5245 என்ற புள்ளி அளவுக்கு சற்று அதிகமாக முடிவடைந்தது. நிப்டியில் வர்த்தக அளவு மிகவும் குறைவாகவே இருந்தது. நிபிட்டி 50 தில் விலை உயர்ந்த பங்குகளின் அளவை விட விலை குறைந்த பங்குகளின் அளவு அதிகமாகவே இருந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் 243 .3 கோடிக்குப் பங்குகள் வாங்கி இருந்தனர். உள்நாட்டு முதலீட்டாளர்கள் 188 .91 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர்.
வருகைக்கு நன்றி!

Thursday, April 15, 2010

நேற்றுக் கொட்டுக்கப்பட்ட இலவச ஆலோசனைகள்
நேற்று கொடுத்த ஆலோசனைகள் எல்லாம் சந்தை முடியும் போது தான், நான் விற்கச் சொல்லி கொடுத்த அளவையே அடைந்தன. அதனால் இலக்கை எட்டவில்லை!
பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி மேல் நோக்கிய இடைவெளியோடு துவங்கியது; மேலும் அந்த இடைவெளியை இன்றே நிறைக்கவும் செய்தது. 7 நாட்களாக சிறந்த பாதுகாப்பு புள்ளியாக விளங்கிய 5301 உடைத்து, அதற்குக் கீழ் முடிவடைந்தது. நிப்டியில் வர்த்தக அளவு நன்றாக இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்றும் நிப்டியில் பங்குகள் வாங்கி இருந்தனர். அவர்கள் 99 .7 கோடிக்கு பங்குகள் வாகினார்கள்.உள்நாட்டு முதலிட்டாளர்கள் 76 .87 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர். நிபிட்டி 50 தில் விலை ஏறிய பங்குகள் 17 ஆகவும் விலை இறங்கிய பங்குகள் 33 ஆகவும் இருந்தது. இன்று நிப்டியில் 5327 நல்ல பாதுகாப்புப் புள்ளியாக செயல்பட்டது ஆனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் அதனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்
அந்நிய முதலிட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வாங்கிய வண்ணம் இருப்பதால் என்னால் நிபிட்டி கீழ் இறங்கும் என்று சொல்ல முடியவில்லை. மேலும் நாளை தான் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளாக இருப்பதால் எப்படி பங்குச்சந்தை செயல்படுகிறது என்று பர்ர்க்க வேண்டும். நாளைய வர்த்தகத்திற்கு 5274 புள்ளி அளவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். என்னுடைய கணிப்பில் இந்த 5274 புள்ளி அளவு, நிபிட்டி, மேல் நோக்கி செல்வதற்கோ கீழ் நோக்கி செல்வதற்கோ ஒரு நுழை வாயில் போல இருக்கும் என்று நினைக்கிறேன்
. நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நாளைய நிபிட்டி அளவு
5301 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5327 , இலக்கு 2 - 5355 நஷ்டத் தடுப்பு - 5288
5284 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5268 இலக்கு 2 - 5245 நஷ்டத் தடுப்பு - 5301
வருக்கைக்கு நன்றி!

Wednesday, April 14, 2010

பங்குச்சந்தை நாளைய நிலவரம்
நாளைய வர்த்தகத்தைப் பொறுத்த வரை 5301 புள்ளி அளவு கவனிக்கப் படவேண்டிய அளவாகும்.அந்நிய முதலிட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலிட்டாளர்கள் பங்குகள் வாங்கி இருப்பது சந்தைக்கு நல்ல செய்தியாகும். 5355 மற்றும் 5383 புள்ளி அளவுகளை நிபிட்டி கடந்து சென்றால் தான் மேல் நோக்கி செல்வதற்கு வாயிப்புக்கள் உள்ளது. என்னுடைய கணிப்பில் நாளைய வர்த்தகத்திற்ருக்கு 5327 புள்ளி அளவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாளைய வர்த்தகப் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
நிபிட்டி அளவு
5327 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5355 , இலக்கு 2 - 5383 இலக்கு 3 - 5427 நஷ்டத் தட்டுப்பு - 5314
5303 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5268 இலக்கு 2 - 5220 நஷ்டத் தடுப்பு - 5314 .


நாளைக்கான இலவச ஆலோசனை [ 15 - 04 -10 ]
VALECHAENG
விலை வரை படத்தைப் பொறுத்த வரை, இந்த பங்கு நாளை கீழ் இறங்கும் என்றே எதிர் பார்க்கிறேன். என் அறிவுக்கு எட்டிய வரை இந்த பங்கை 200 க்கு கீழ் விற்கலாம் இலக்கு 175 . நஷ்டத் தடுப்பு 203 .
200 க்கு கீழ் விற்க இலக்கு 175 நஷ்டத் தடுப்பு 203

PFOCUS
விலை வரை படத்தை பொறுத்தவரை இந்தப் பங்கு நாளை விலை குறையும் என்று கருதுகிறேன். இந்தப் பங்கை 325 க்கு கீழ் விற்க நஷ்டத் தடுப்பு 330 இலக்கு 308 .
325 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 308 நஷ்டத் தட்டுப்பு - 330 .
AEGISCHEM
விலை வரை படத்தை பொறுத்தவரை இந்தப் பங்கு நாளை விலை குறையும் என்று கருதுகிறேன். இந்தப் பங்கை 295 க்கு கீழ் விற்க நஷ்டத் தடுப்பு 300 இலக்கு 277 .
295 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 277 நஷ்டத் தடுப்பு - 300 .
வருகைக்கு நன்றி!

Tuesday, April 13, 2010

நேற்று கொடுக்கப் பட்ட ஆலோசனை
VALECHAENG

இந்தப் பங்கு இலக்கை எட்ட வில்லை, நஷ்டத் தடுப்பை உடைத்தது. தவறியது!
பங்குச்சந்தை இன்றைய நிலவரம்

இன்றும் நிபிட்டி குறுகிய அளவுக்குலேயே வர்த்தகம் ஆனது. நிப்டியில் வர்த்தகமான பங்குகளின் வர்த்தக அளவு குறைவாகவே இருந்தது. நிப்டிக்கு 5301 புள்ளி அளவு மிக நல்ல பாதுகாப்பாக இருந்தது. அதே போல் 5355 அளவு நல்ல இடர் புள்ளி அளவாக இருந்தது. நிபிட்டி இன்று மிக முக்கியமான புள்ளி அளவான 5327 க்கு சற்றுக் கீழே முடிவடைந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்று 128 .52 கோடிக்கு பங்குகள் வாங்கி இருந்தனர். உள்நாட்டு முதளிட்டாலர்களும் இன்று பங்குகள் வாங்கியிருந்தனர். அவர்கள் 252 .87 கோடிக்கு பங்குகள் வாங்கி இருந்தனர். நிபிட்டி 50 யில் விலை ஏறிய பங்குகளை விட விலை குறைந்த பங்குகள் அதிகமாக இருந்தன.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்
நாளைய வர்த்தகத்தைப் பொறுத்த வரை 5301 புள்ளி அளவு கவனிக்கப் படவேண்டிய அளவாகும்.அந்நிய முதலிட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலிட்டாளர்கள் பங்குகள் வாங்கி இருப்பது சந்தைக்கு நல்ல செய்தியாகும். 5355 மற்றும் 5383 புள்ளி அளவுகளை நிபிட்டி கடந்து சென்றால் தான் மேல் நோக்கி செல்வதற்கு வாயிப்புக்கள் உள்ளது. என்னுடைய கணிப்பில் நாளைய வர்த்தகத்திற்ருக்கு 5327 புள்ளி அளவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாளைய வர்த்தகப் போக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
நிபிட்டி அளவு

5327 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5355 , இலக்கு 2 - 5383 இலக்கு 3 - 5427 நஷ்டத் தட்டுப்பு - 5314
5303 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5268 இலக்கு 2 - 5220 நஷ்டத் தடுப்பு - 5314 .
இலவச ஆலோசனை
VALECHAENG
விலை வரை படத்தைப் பொறுத்த வரை, இந்த பங்கு நாளை கீழ் இறங்கும் என்றே எதிர் பார்க்கிறேன். என் அறிவுக்கு எட்டிய வரை இந்த பங்கை 200 க்கு கீழ் விற்கலாம் இலக்கு 175 . நஷ்டத் தடுப்பு 203 .
200 க்கு கீழ் விற்க இலக்கு 175 நஷ்டத் தடுப்பு 203
வருகைக்கு நன்றி!

Monday, April 12, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
நிபிட்டி இன்று குறுகிய அளவுக்குலேயே வர்த்தகம் ஆனது. துவக்கப் புள்ளியை விட குறைவாகவே முடிவடைந்தது. இன்று, நிப்டிக்கு 5327 புள்ளி ஆளவு நல்ல பாதுகாப்பு அளவாக இருந்தது; 5355 புள்ளி அளவு மேல் நோக்கிச் செல்வதற்கு பலமான தடையாக இருந்தது. நிப்டியில் வர்த்தகமான பங்குகளின் அளவு மிகக் குறைவாக இருந்தது. அந்நிய முதலீட்டாளர்கள் இன்று மிகவும் குறைந்த அளவிலேயே பங்குகள் வாங்கி இருந்தனர். அவர்கள் வாங்கிய பங்கின் அளவு 14 .41 கோடி மட்டுமே! இதை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு முதலீட்டாளர்கள் 192 . 64 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர்.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்
நாளைய வர்த்தகத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவை கவனிக்க வேண்டும். அந்நிய முதலீட்டாளர்கள் மிகக் குறைவாக பங்குகள் வாங்கி இருப்பதால், நிப்டியில் பங்குகள் வாங்குவதற்கு முன் 5355 மற்றும் 5375 அளவுகளை கவனித்து செயல்படவேண்டும். 5340 அளவு நாளைய வர்த்தகத்திற்கு மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை நிபிட்டி, இந்த 5340 புள்ளி அளவுக்கு கீழ் வர்த்தகமானாலோ அல்லது அதற்க்கு மேல் முன்னேற முடியாமல் தடுமாறினாலோ, பொறுமையாக காத்திருந்து, நிபிட்டி எந்த திசையில் செல்கிறதோ அந்த திசையில் வர்த்தகம் செய்வது நல்லது. நிப்டியின் மிக முக்கியமான பாதுகாப்புப் புள்ளி 5301 ஆகும்.
நாளைய நிபிட்டி அளவு
5355 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5383 , இலக்கு 2 - 5427 நஷ்டத் தடுப்பு - 5336
5327 க்கு கீழ் விற்கவும் இலக்கு 1 - 5290 , இலக்கு 2 - 5268 நஷ்டத் தடுப்பு - 5340

இலவச ஆலோசனை
VALECHAENG
இந்த பங்கின் விலை வரை படத்தில் பலகீனமான அமைப்பு உருவாக்கி உள்ளாது. எனவே இந்த பங்கை 184 புள்ளி அளவுக்குக் கீழ் விற்கலாம். இலக்கு 175 . நஷ்டத் தடுப்பு 188 .
184 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 175 நஷ்டத் தடுப்பு - 188
வருகைக்கு நன்றி!

Sunday, April 11, 2010

முட்டை

'ஞானி' களின் பார்வையில் முட்டை
முட்டையைப் பார்த்ததும்,
"அவித்துச் சாப்பிடலாமா, பொறித்துச் சாப்பிடலாமா..." என்று சிந்திப்பார், புலன் இச்சைகளுக்கு அடிமைப்பட்டு கிடக்கும்
அஞ்ஞானி.
"சூரியனை, கிரகங்கள் இந்த வடிவில் தானே சுற்றி வருகின்றன..." என்று சிந்திப்பார், எந்த உண்மைக்கும் நிறுபனம் கேட்கும் விஞ்ஞானி.
"முட்டை ஓடு தனியே கிடப்ப, பருவம் வந்ததும் பறவை பறந்து போவது போலத் தான் இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு..." என்று சிந்திப்பார், பிறவிச் சுழற்ச்சியிளிருந்து விடுபட்ட ஞானி.

பங்குச்சந்தை அடுத்த வாரம்
நிபிட்டி கடந்த ஒன்பது வாரங்களாக, ஒவ்வொரு வாரத்தின் முடிந்த அளவை விட அதிகமாகவே முடிந்து வருகிறது. சென்ற வாரம் நிபிட்டி இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அடைந்தது மட்டுமல்லாமல், கடந்த முன்று வாரங்களாக மேல் நோக்கி செல்ல இயலாமல் தடுத்த இடர் புள்ளிகளையும் உடைத்து, உயர்ந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. எனக்கு தெரிந்த வரை அடுத்த வாரம் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வுகள் இரண்டு. ஒன்று பணம் சார்ந்த கொள்கை மற்றும் இன்போசிசின் காலாண்டு முடிவுகள். இந்த இரண்டு நிகழ்வுகளும் அடுத்த வார பங்குசந்தையை வழி நடுத்தும். நிபிட்டி முக்கிய இடர் புள்ளிகளை எல்லாம் உடைத்து நன்றாக மேலே உயர்ந்து முடிந்திருப்பதாலும் அந்நிய முதலிட்டாளர்கள் தொடர்ச்சியாக பங்குகளை வாங்கிய வண்ணம் இருப்பதாலும், பங்குசந்தைக்கு வேறு எந்த பாதகமான செய்தி ஏதும் இல்லாதபட்சத்தில் , அடுத்த வாரம் நிபிட்டி புதிய உச்ச அளவுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கலாம். விலை வரை படத்தில் நிபிட்டி மேல் நோக்கிச் செல்லக்கூடிய அனுகுலமான அமைப்பே உருவாக்கி உள்ளது. அடுத்த வாரம், நிபிட்டி வர்த்தகத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய புள்ளி அளவுகள் இவை: நிபிட்டி மேல் நோக்கி செல்வதற்கு தடையாய் இருக்கும் முக்கிய இடர் புள்ளி அளவுகள் 5355 மற்றும் 5383 . மேலும், கீழ் நோக்கி செல்லாதிருப்பதர்க்கு பாதுகாப்பாக இருக்கும் பாதுகாப்பு புள்ளி அளவுகள் 5301 மற்றும் 5288 களாகும். என் அறிவுக்கு எட்டிய வரை அடுத்த வாரம் பங்குசந்தையின் திசையை நிர்ணயிக்கும் முக்கிய புள்ளி அளவாக 5383 புள்ளி அளவு இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த வாரம் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நிபிட்டி வர்த்தகமாகும் அளவு
மேல் நோக்கிச் சென்றால் 5301 - 5620
கீழ் நோக்கிச் சென்றால் 5300 - 5180
வருகைக்கு நன்றி!

Saturday, April 10, 2010

பங்குச்சந்தை இந்த வாரம் [ 05/04/10 – 09/04/10 ]
நிபிட்டி, சென்ற வாரத்தின் முடிந்த புள்ளி அளவை விட இந்த வாரம் அதிகமான புள்ளி அளவில் முடிவடைந்தது. இந்த வாரம் முழுவதும் நிபிட்டி 5300 - 5400 என்ற புள்ளி அளவுகளுக்குலேயே வர்த்தகம் ஆனது. இந்த வாரம் நிப்டியின் ஆரம்பப் புள்ளி அளவும், குறைந்த புள்ளி அளவும், ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வாரம் முழுவதும் நிபிட்டி,சென்ற வாரத்தின் வர்த்தக அளவான 5235 - 5330 அளவுக்குள், ஒரு நாள் கூட வர்த்தகம் ஆகாமல், இந்த வாரத்தின் வர்த்தக ஆளவான 5300 - 5400 அளவுக்குலேயே வர்த்தகம் ஆனது குறிப்பிடடத்தக்கது. வியாழக் கிழமை நிபிட்டி சற்று சரிந்த போதும் 5301 புள்ளி அளவுக்கு மேல் தான் முடிந்திருந்தது, எனவே 5301 அளவில் நல்ல பாதுகாப்பு இருக்கிறது என்று கருதலாம். என்னுடைய கணிப்பில் நிபிட்டி வரும் வாரங்களில் புதிய உச்ச அளவுகளை எட்டும் என்று நினைக்கிறேன். என் அறிவுக்கு எட்டிய வரை நிபிட்டி இந்த வாரம், சென்ற வாரத்தின் வர்த்தக அளவை விட உயர்ந்து புதிய வர்த்தக அளவில் வர்த்தகமானது மட்டுமல்ல, இந்த புதிய வர்த்தக அளவிலிருந்து கீழ் இறங்காமல் வாரம் முழுவதும் அதே அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
வருகைக்கு நன்றி!

Friday, April 9, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி நல்ல முன்னேற்றத்துடன் முடிவடைந்தது. மேலும் முக்கிய இடர் புள்ளியான 5355 அளவைத் தாண்டி முடிந்திருந்தது. இன்று மத்தியம் வரை, அதாவது நாளின் முதல் பகுதி வரை நிப்டிக்கு 5336 புள்ளி அளவு நல்ல பாதுகாப்பு புள்ளியாக இருந்தது. நாளின் இரண்டாவது பகுதி முழுவதும் 5355 புள்ளி அளவு நல்ல பாதுகாப்பு புள்ளியாக இருந்தது. மேலும் 5375 புள்ளி அளவு வலுவான இடர் புள்ளி அளவாக இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் 233 .09 கோடிக்கு பங்குகள் வாங்கி இருந்தனர். உள்நாட்டு முதலிட்டாளர்கள் 66 .46 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர். நிபிட்டி 50 தில் உள்ள பங்குகளில், 33 பங்குகளின் விலை உயர்ந்தும் 16 பங்குகளின் விலை குறைந்தும் 1 பங்கின் விலை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் முடிந்திருந்தது.
வருகைக்கு நன்றி!

Thursday, April 8, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிந்தது. மிக முக்கியமான பாதுகாப்புப் புள்ளிகளான 5355 மற்றும் 5327 ஆகிய புள்ளிகளை உடைத்து கீழிறங்கி முடிந்தது. மேலும் இந்த வாரத்தின் குறைந்த புள்ளியான 5291 அளவை தொட்டு சற்று முன்னேறி முடிந்தது. வர்த்தகத்தின் அளவு சுமாராக இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பங்குகள் வாங்கி இருந்தனர். அவர்கள் 62 .2 கோடிக்கு மட்டுமே வங்கி இருந்தனர். உள்நாட்டு முதலிட்டாளர்கள் 93 .62 கோடிக்கு பங்குகள் விற்று இருந்தனர்.
பங்குசந்தையின் நாளைய நிலவரம்

அந்நிய முதலிட்டாளர்கள் குறைந்த அளவு பங்குகள் வங்கி இருப்பதனால் நாளை நிபிட்டி குறுகிய அளவுக்குள்ளேயே வர்த்தகமாகும் என்று நினைக்கிறேன். நாளைய வர்த்தகத்திற்கு 5327 மற்றும் 5355 புள்ளிகள் இடர் புள்ளிகளாகவும், 5288 புள்ளி பாதுகாப்பு புள்ளியாகவும் இருக்கும். நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நிப்டியின் அளவு
5327 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5355 , இலக்கு 2 - 5375 , நஷ்டத் தடுப்பு -5301
5288 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5268 இலக்கு 2 -5245 , நஷ்டத் தடுப்பு 5301
வருகைக்கு நன்றி!

Wednesday, April 7, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்றும் நிபிட்டி குறுகிய அளவுக்குலேயே வர்த்தகம் ஆனது. துவக்கப் புள்ளியியை விட சில புள்ளிகள் உயர்ந்து முடிந்தது. நிபிட்டி இன்று, இன்றைக்கான பாதுகாப்புப் புள்ளி அளவான 5355 தையும், இடர் புள்ளிய அளவான 5383 ரையும் உடைத்தது. ஆனால் இடர் புள்ளியான 5383 க்கு மேல் அதிக நேரம் நீடிக்க முடியவில்லை. அதே போல் பாதுகாப்புப் புள்ளியான 5355 க்கு கீழ் அதிக நேரம் நீடிக்க இயலவில்லை. காலை ஒரு மணி நேர வர்த்தகத்தில் நிபிட்டி விலை வரை படத்தில், தலை மற்றும் தோள்கள், மாதிரி [ head & shoulders pattern ] உருவாகி இருந்தது. 5375 புள்ளியை அதன் நெக் லைன் ஆக கொண்டிருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, தொப்பி வடிவ, மாதிரி [rounding top pattern ] உருவானது. இந்த இரண்டுமே சந்தையின் கீழ் இறங்கும் நிலையை சுட்டிக் காட்டும் மாதிரிகள் ஆகும்.
பங்குசந்தையில் விலை அதிகரித்த பங்குகளும் விலை குறைந்த பங்குகளும் ஏறத்தாழ சமமாகவே இருந்தன. அதாவது நிபிட்டி 50 யில் 26 பங்குகள் விலை உயர்ந்தும் ,24 பங்குகள் விலை குறைந்து காணப்பட்டது. இன்று பங்குசந்தையில், நேற்றை விட வர்த்தக அளவு சற்று கூடி இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் 338 .78 கோடிக்கு பங்குகள் வாங்கியிருந்தனர். உள்நாட்டு முதலிட்டாளர்கள் இன்று திரும்பவும் விற்பனையாளர்களாக மாறி இருந்தனர். 23 .43 கோடிக்கு பங்குகள் விற்றனர். நிபிட்டி விலை வரை படத்தில் எந்த திசையில் சந்தை செல்லும் என்று கன்னிக்க முடியாத ஓர் உறுதியற்ற குறியீடு உருவாக்கி யுள்ள்ளது.

பங்குசந்தையின் நாளைய நிலவரம்

நாளைய வர்த்தகத்திற்கு 5375 புள்ளியில் கவனம் தேவை. ஏனென்றால் இந்த 5375 புள்ளி அளவு இன்று மதியம் வரை, அதாவது நாளின் முதல் பாதி, நல்ல பாதுகாப்பாக செயல்பட்டது. பின்பு உடைக்கப்பட்டது.பிறகு நாளின் இரண்டாவாது பாதியில் நல்ல இடராகவும் செயல்பட்டது. கடந்த வாரம் முழுவதும் நிபிட்டி 5200 - 5300 என்ற அளவுக்குள்ளேயே வர்த்தகம் நடைப் பெற்றுக்கொண்டிருந்தது. இந்த வாரத்தின் ஆரம்பம் முதல்.5300 - 5400 என்ற அளவுக்குள்ளே வர்த்தகம் நடைப் பெற்றுவருகிறது. இதிலிருந்து நிபிட்டி 5200 - 5300 என்ற வர்த்தக அளவிலிருந்து 5300 - 5400 அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது தெரிகிறது. சந்தைக்கு ஒரு வலுவான நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ இல்லாததால் நிபிட்டி மேல் நோக்கி உயரவோ கீழ் நோக்கி இறங்கவோ முடியாமல் தடுமாறுகிறது. பங்குசந்தைக்கு ஏதாவது ஒரு சாதகமான அல்லது பாதகமான செய்திகள் வருமானால், அந்த செய்திக்கு ஏற்ப, நிபிட்டி 5600 புள்ளி அளவுக்கு உயரவோ அல்லது 5100 அளவுக்கு இறங்கவோ வாயிப்புகள் வலுவாக உள்ளது.
என்னுடைய பார்வையில், இன்று நிப்டியில் நடைப் பெற்ற வர்த்தக முறை, மற்றும் ந்பிட்டி 50 யில் விலை உயர்ந்த பங்குகளின் அளவு மற்றும் விலை குறைந்த பங்குகளின் அளவை வைத்துப் பார்க்கும் போது, நாளை நிபிட்டி 5383 அளவுக்கு மேல் உயர்ந்து, அந்த அளவுலே நிண்ட நேரம் நீடித்து நின்று வர்த்தகமானால் மட்டுமே, நிபிட்டி மேல் நோக்கி செல்லும் என்ற முடிவுக்கு வரலாம். நாளையும் நான் நிபிட்டி குறுகிய அளவுக்குலேயே வர்த்தகமாகும் என்று எதிர் பார்க்கிறேன்.
நிப்டியின் அளவு
5383 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5427 , இலக்கு 2 - 5463 , இலக்கு 3 - 5483 நஷ்டத் தடுப்பு - 5368
5355 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5301 , இலக்கு 2 - 5280 , இலக்கு 3 - 5245 , நஷ்டத் தடுப்பு - 5368 .
வருகைக்கு நன்றி!

Tuesday, April 6, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று முழுவது நிபிட்டி, உயர்ந்த போதும், கீழ் இறங்கிய போதும், உடனடியாக 5368 அளவை அடைந்துவிட்டது. 5383 அளவை கடக்க மிகவும் தடுமாறியது; அதே போல் 5355 அளவையும் அது உடைத்து கீழ் இறங்கவும் இல்லை; 5355 நல்ல தடுப்பாகவும் இருந்தது. முந்தய ஆறு வர்த்தக தினங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இன்று வர்த்தகத்தின் அளவு உயர்ந்திருந்தது. ஆனால் நிபிட்டி மிகச் சிறிய சரிவோடு தான் முடிந்தது. இது நல்ல விஷயம் அல்ல. ஒரு வேலை வர்த்தகர்கள் பங்குகளை விற்று லாபம் எடுத்திருக்கலாம்! விலை வரைப் படத்தில் உயர்வை தடுக்கின்ற அறிகுறி தென்படுகிறது. இருந்த போதிலும் நிபிட்டி இன்னமும் 20 மற்றும் 50 EMA விற்கு மேல் தான் உள்ளது. அந்நிய முதலிட்டாளர்கள் மற்றும் உள்நாட்டு முதலிட்டாளர்கள் இருவருமே மிகக் குறைந்த அளவிலேயே பங்குகள் வாங்கியிருந்தனர். இது பங்குசந்தைக்கு பாதகமான அம்சம். அந்நிய முதலிட்டாளர்கள் 261 .7 கோடியும், உள்நாட்டு முதலிட்டாளர்கள் 81 கோடியும் வாங்கியிருந்தனர்.இதற்கு முன் அவர்கள் வாங்கிய பங்குகளின் அளவி விட இது குறைந்த அளவே! இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


பங்குச்சந்தை நாளைய நிலவரம்
அந்நிய முதலிட்டாளர்களின் பங்குகள் வாங்கிய அளவு குறைந்திருப்பதால், என் கணிப்பில், நிபிட்டி ஒவ்வொரு உயர்விலும் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டும்.நாளைய வர்த்தகத்திற்கு 5383 மற்றும் 5355 அளவுகளை கவனிக்க வேண்டும். என் அறிவுக்கு எட்டிய வரை, பணம் சார்ந்த கொள்கை மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர இருப்பதால், நாளை நிப்டியில் வர்த்தகம் குறுகிய அளவுக்குள் தான் நடைபெறும் என்று எதிர்பார்கிறேன். நான் கேள்விப்பட்டவரை, ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே நிபிட்டி உயரும் போது மிகுந்த கவனத்தோடு வர்த்தகம் செய்வது நன்று.
நிப்டியின் அளவு
5383 க்கு மேல் வாங்கவும் இலக்கு 1 - 5427 , இலக்கு 2 - 5463 , இலக்கு 3 - 5483 நஷ்டத் தடுப்பு - 5368
5355 க்கு கீழ் விற்க இலக்கு 1 - 5301 , இலக்கு 2 - 5280 , இலக்கு 3 - 5245 , நஷ்டத் தடுப்பு - 5368 .
வருகைக்கு நன்றி!

Monday, April 5, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்று நிபிட்டி நல்ல உயர்ச்சியை சந்தித்தது. இந்த ஆண்டின் புதிய உச்சத்தை அடைந்தது. நிபிட்டி 50 தில் 46 பங்குகள் உயர்ந்தும் 6 பங்குகள் மட்டுமே குறைந்தும் இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்று 766 .07 கோட்டிக்கு பங்குகள் வாங்கி இருந்தார்கள். உள்நாட்டு முதலிட்டாளர்கள் 403 .33 கோடிக்கு பங்குகள் வாங்கியிருந்தார்கள். இவை பங்குகுசந்தைக்கு சாதகமானவை. ஆனால் வர்த்தகம் அளவு சுமாராகவே இருந்ததது. விலை வரைபடத்தில், இது வரை கடக்க முடியாத அளவாக இருந்த 5327 அளவை தகர்த்துவிட்டு நல்ல உயர்ச்சியை சந்தித்தது நிபிட்டி.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்
விலை வரை படத்தில் நிபிட்டி மேல் நோக்கி உயர்வதற்கான அறிகுயே தென்படுடிறது. இருப்பினும் நிபிட்டி இன்று புத்தி உச்சத்தை சந்தித்திருப்பதால், வர்த்தகர்கள் நிபிட்டி உயரும் போது பங்குகளை விற்று லாபம் எடுக்கக் கூடிய வாயிப்பு உள்ளது. எனவே நிபிட்டி உயரும் போது கவனம் தேவை. 5280 அளவில் நிப்டிக்கு நல்ல பாதுகாப்பு உள்ளது. இன்று நிபிட்டி 2 மணி வரை 5330 அளவுகளில் நன்றாக வர்த்தகம் ஆனது அதன் பிறகே உயர்ந்தது. 5583 அளவுகளில் நிபிட்டி மேலும் உயர முடியாமல் தடுமாறியது. எனவே நாளைய வர்த்தகத்திற்கு இந்த 5383 மற்றும் 5330 அளவுகளில் கவனம் தேவை. நாளை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
நிபிட்டி அளவுகள்
5383 மேல் வாங்கவும். இலக்கு 1 - 5427 இலக்கு 2 - 5463

இலக்கு 3 - 5483 நஷ்டத் தடுப்பு 5368
5350 கீழ் விற்க. இலக்கு 1 - 5327 இலக்கு 2 - 5301

நஷ்டத் தடுப்பு - 5368 .
நன்றி!

Sunday, April 4, 2010

மகான்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்.
பகவான் திரு ரமணரின் ஆசிரமத்திற்குள் சில திருடர்கள் புகுந்தனர்; பகவான் திரு ரமணரை தாக்கிவிட்டுச் சென்றனர். மறுநாள் காவலர் அந்த திருடர்களை பிடித்து வந்து பகவான் முன் நிறுத்தினார்.
" இவர்களில், உங்களை அடித்தது யார்? “என்று காவலர் கேட்டார்.
" நான் யாரை அடித்தேனோ, அவனே என்னை அடித்தான் " என பகவான் அருளினர்.
இதற்கு என்ன பொருள்? தன் வினை தான் தன்னைச் சுடும் என்பதா? அப்படியானால் பகவான் யாரையும் தாக்கக் கூடிய சுபாவம் உள்ளவரா! அல்லவே, முன்பு ஒரு சமயம், பகவான் தியானத்தில் இருக்கின்ற போது, அவர் வயதில் உள்ள சில முரட்டுச் சிறுவர்கள், அவர் மீது கற்கள் வீசியும், இன்ன பிற செயல்களாலும் துன்புறுத்தினார்கள். அப்போதும் பகவான் எந்த எதிர் செயலும் செய்யாமல், அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர். அப்படிப்பட்டவரா இந்த ஜென்மத்தில் யாரையாவது தாக்கி இருப்பார்! நிச்சயம் இருக்க முடியாது!
‘நான் யாரை அடித்தேனோ ' என்று அவர் குறிப்பிட்ட இறந்த காலம் என்பது, நாம் சொல்லும் நேற்று, கடந்த ஆண்டு இல்லை அறியாத பருவ காலமோ அல்லது முக்காலமும் உணர்ந்த ஞானிகள் கருதும் முன் ஜென்மமாகவோ இருக்கலாம். எதுவானாலும், எப்போதோ செய்த வினையின் பயனை தான் இப்போது அடைந்தேன் என்பதை மறைமுகமாக அருளினர். அப்படியானால், மற்றவர்களால், நமக்கு நேரும் துன்பங்களை, தன் வினை தான் தன்னைச் சுடும் என்று பொருத்துக்க் கொள்ள முடியுமா?
வினை விதைத்தவர் வினை அறுப்பார் என்பது இயற்கையின் விதி. இந்த வினை சுழற்சியிலிருந்து விடுபடுவது தான் மனிதர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அருளிச் சென்றனர். அச் சுழற்சியிலிருந்து விடுபட்டவர் பகவான் திரு ரமணர்! பகவானைப் போல முக்காலமும் உணரும் ஆற்றல் நமக்கு இல்லாவிட்டாலும், அவர் காட்டும் வழியில் வாழ விரும்பினால் முடியும்.

Saturday, April 3, 2010

பங்குச்சந்தை அடுத்த வார நிலவரம் [05/04/10 – 09/04/10]
விரைவில் வரவிருக்கும் பண முறை சார்ந்த கொள்கை மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், அடுத்த வார பங்குசந்தையின் போக்கை நிர்ணயிக்கும். கடந்த இரண்டு வாரங்களாக நிபிட்டி, மிகக் குறுகிய எல்லைக்குள் தான் வர்த்தகம் நடைப்பெற்றுள்ளது. இதே போல் அடுத்த வாரமும் நிபிட்டி, குறுகிய எல்லைக்குள் வர்த்தகம் நடைபெறலாம் அல்லது அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு ஏற்ப நிபிட்டி, மிகப் பெரிய உயர்ச்சி அல்லது வீழ்ச்சியை சந்திக்கும் என்று கருதுகிறேன். நான் இப்படி கருதுவதற்கு காரணம் கடந்த வியாழக் கிழமை அந்நிய முதலிட்டாளர்கள் மிகக் குறைந்த அளவில் பங்குகுகள் வாங்கி இருந்தனர். அடுத்த வாரத்தில் எதாவது ஒரு நாள் நிபிட்டி 5330 க்கு மேல், நல்ல வர்த்தகத்தோடு, முடிவடையுமானால் நிபிட்டி மிகப் பெரிய உயர்ச்சியை அடைய வாயிப்பு உள்ளது. அதனால் வர்த்தகர்கள் 5330 அளவுக்கு மேல் நிப்டியில் பங்குகள் வாங்குவது நல்லது. அதே போல் பெரிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஏதேனும் எதிர் பார்த்த அளவு இல்லை என்றால் நிபிட்டி மிகப் பெரிய வீழ்ச்சியை அடையைவும் வாயிப்பு உள்ளது. 5220 புள்ளி அளவுக்கு கிழ் நிபிட்டி பலகீனம் அடையும் எனவே அடுத்த வாரம் இந்த அளவை மிகக் கவனமாக கவனிக்க வேண்டும்.
நிப்டியின் வர்த்தக அளவு.
மேல் நோக்கி உயர்மானால் 5220 - 5570
கீழ் நோக்கி வீழுமானால் 5330 - 4460
நன்றி!

Friday, April 2, 2010

பங்குச்சந்தை இந்தவர நிலவரம் [ 29 /03 /10 - 01 /04 /10 ]
நிபிட்டி, இந்த வாரம் மிகவும் குறுகிய எல்லைக்குள் தான் வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் சென்ற வாரத்தில் முடிவடைந்த புள்ளியை விட அதிகமாக முடிவடைந்தது. வர்த்தக அளவும் ஏறத்தாழ சென்ற வார அளவு போலவே இருந்தது. கடந்த 8 வாரங்களாக நிபிட்டி உயர்வைச் சந்தித்து வருகிறது. அந்நிய முதலிட்டாளர்கள் தொடர்ந்து பங்குகள் வான்கியவண்ணம் இருக்கிறார்கள்; இருந்தபோதிலும் இந்த வார இறுதி நாள் அவர்கள் மிகவும் குறைவாகவே பங்குகள் வாங்கினர். மார்ச் மாதம் முழுக்க விற்று வந்த உள்நாட்டு முதலிட்டாளர்கள், இந்த வாரம் இரண்டு நாள்கள் பங்குகள் வாங்கியிருக்கிறார்கள். இது ஒரு சாதகமான விஷயம். இந்த வாரம் முழுவதும் நிபிட்டி 5220 புள்ளியை உடைக்காத வண்ணம் நல்ல ஆதரவு பெற்றிருந்தது. அதே போல் 5300 புள்ளியை கடக்க முடியாமல் தடுமாறியது.
நிப்ட்டியின் விலை வரைபடத்தில் 'டோஜி' என்ற குறியீடு உருவாகி இருக்கிறது. இந்த அமைப்பு உருவாகும் போது, வரும் வர்த்தக தினங்களில் நிபிட்டி எந்த திசையிலும் செல்லலாம். இன்னமும் நிபிட்டி 20 மற்றும் 50 EMA விற்கு மேல் தான் உள்ளது.
இந்த வாரம் நிபிட்டி மிகப் பெரிய உயர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நடக்கவில்லை.
நன்றி!

வித்தியாசமான அனுபவம்.
அன்று ஞாயிற்றுக் கிழமை. மாலை நேரம். உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தேன். வாகனம் தீடிரென்று நின்றுவிட்டது. மெக்கானிக் கடையை தேடிக்க் கொண்டே சென்றேன். இருள் கவியத் தொடங்கியது.
அந்த நடைபாதையில் ஒரு முதியவர் பொருட்களை முட்டைக் கட்டிக்கொண்டிருந்தார். அங்கிருந்த பொருட்களை வைத்து அது ஒரு மெக்கானிக் கடை என்பதை உணர்ந்தேன். வேகமாக அருகில் சென்றேன்.
" வண்டி ரிப்பேர் ஆயிடுச்சி " என்றேன்.
உடனே வந்தார். அழுக்கான பனியன் அணிந்திருந்தார். பரிவான முகம்; பாசமான முகம் என்று கூட சொல்லலாம். நீண்ட நாள்கள் வறுமையின் பிடிக்குள் இருப்பவரை போன்ற தோற்றம்.

அவர் 'உடனே வந்தார்' என்று சொல்வதை விட பறந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். வந்த வேகத்தைப் பார்த்தால் இன்று காலையில்லிருந்து ஏதும் போனியாகவில்லையோ என்று தோன்றியது. அய்யயோ! நம்ம மாட்டிக்கிட்டோமா..! அதையும் எதையும் பண்ணிட்டு இவ்ளோ கொடு அவ்ளோ கொடுன்னு கேப்பாங்க... சரி... இந்த நாளுக்கும், நேரத்துக்கும், 50 ரூபா கேட்டாலும் கொடுத்துதிட்டுத் தான் போகணும்... மனம் எண்ணிக்கொண்டிருந்தது.
சிறிது நேரம் பழுதுபார்த்தார். வாகனம் இயங்கிய பாடில்லை. சட்றேன்று கார்புரட்டர் அடிக்கடி பழுதாவது நினைவுக்கு வந்தது.
" அப்பப்போ கார்புரட்டர் ரிப்பெராகும் " என்றேன்.
" ஓஹோ! ஆனா இது புது மடல் இன்னும் இத நான் ரிப்பேர் பண்ணதில்ல...." என்றவாறே கார்புறேட்டரை தேடினார்.
திக்கென்று இருந்தது. நல்லவேள என்வண்டியை பிரிச்சு கத்துக்காம, வெளிப்படையா சொன்னிக்களே... கேட்டத கொடுத்திட்டு உடனே புறப்படணும் என்று மனம் துரிதப்படுத்தியது.
" சரி விட்டிடுங்க நான் வேர எங்கியாவது பாத்துக்கிறேன்... இப்ப பாத்ததுக்கு மட்டும் எவ்வளவுன்னு சொல்லுங்க.." என்றேன்.
" நான் என்ன பண்ணேன்... வண்டி ஸ்டார்ட் ஆகலையே... என்ன கேக்கறது. வேணாம் போங்க..." என்றார் தொழில் நேர்மையோடு.
சிவுக்கேன்று இருந்தது.
" இல்லை… நீங்க ஏதாவது வாங்கிக்கணும்..." என்றேன்.
அவர் முகத்தில் தயக்கமும் குழைவும் பரவியிருந்தது. கட்டாயப்படுத்தி ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டுப் புறப்பட்டேன்.

Thursday, April 1, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
நிபிட்டி இன்று முன்னேற்றத்துடன் முடிவடைந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் 106 .4 கோடிக்கு பங்குகள் வாங்கினர். இது, அவர்கள் இதற்கு முன் வாங்கிய அளவைவிட குறைவு. உள்நாட்டு முதளிட்டாலர்களும் 452 .33 கோடிக்கு பங்குகுகள் வாங்கினர். இது ஒரு சாதகமான விஷயம். நிப்ட்டியின் வர்த்தக அளவு சுமாராகவே இருந்தது. இன்று நிபிட்டி 5293 புள்ளி அளவை கடக்க முடியவில்லை. ஆனால் 5300 புள்ளி அளவின் அருகில் முடிந்தது நல்ல விஷயம். இருப்பினும் அந்நிய முதலிட்டாளர்கள் மிகக் குறைவாக பங்குகள் வாங்கி இருப்பத்து கவனத்தில் கொள்ளவேண்டும். இனி நிபிட்டி உயரும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நன்றி!