Monday, August 24, 2009

4
தன் குழந்தைக்கு எதோ நேர்ந்து விட்டது போன்ற உணர்வில் சுமித்ராவின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. 'வீட்டிலிருந்து எவ்வளவு நம்பிக்கையோடு அனுப்பியிருப்பாங்க....! இந்த செய்தி கேட்டா எப்படி துடிப்பாங்க..! அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சோ..சாமி...!' என்று சிந்தித்தவாறு பள்ளிக்குள் நுழைந்தாள் சுமித்ரா.
"பாத்தியா... பணத்த எங்கிருந்து எடுத்துக் கொடுத்தா அந்த இளநீர் கடகாரனுக்கு...!" என்றார் ஒருவர்.
இதைக் கேடடதும் சுமித்ராவின் கவனம் பத்மா மீது குவிந்தது. 'எப்படி ஓடி வந்து அந்தக் குழந்தையை அள்ளிக்கிட்டா... நல்ல மனசு..! மனசுல அன்பு உள்ள்ளவங்களுக்குத்தான் மத்தவங்களுக்கு உதவனும்ங்கற எண்ணம் வரும். ஏதோ விதி... அவ 'அந்த' மாதிரி வாழ்க்கை வாழனும்னு எழுதியிருக்கு.' -இப்போது சுமித்ராவின் மனதில் பத்மா உயர்ந்து நின்றாள். குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றாள்.
குழந்தயை நினைத்து சுமித்ராவின் மனம் கலங்கிக்கொண்டிருந்தது. மாலை கோவிலுக்கு சென்றாள். கடவுளிடம் குழந்தைக்கு ஏதும் நேர்ந்துவிட்க்கூடாது என்று வேண்டிக்கொண்டாள். சிறிது நேரம் அமர்ந்துவிட்டு புறப்பட்டாள்.

சன்னதித் தெரு திரும்பியதும், 'அந்த வீட்டில்' கூட்டமும் ஒரு போலீஸ் வேனும் நிற்ப்பது தெரிந்தது. தக்ன்னைக் கடந்து சென்றவர்கள் பேச்சு காதில் விழுந்தது.
"அப்பா....! இனிமேலாவது இந்த தெருவுல இருக்கோம்னு தயங்காம சொல்லமுடியும்னு தோனுது.."
"இவங்கள எல்லாம் ஜெயிலுல வெச்சிடனும். அப்பத்தான் சமுதாயம் சுத்தமாகும்..."
சுமித்ராவின் மனம் பதைபதைத்த்து; கண்கள் பத்மாவைத் தேடியது நெருங்கிச் செல்ல மனம் எத்தனித்தது; நாலு பேர் என்ன சொல்லுவார்களோ என்ற அச்சம் தடுத்தது.
'பகவானே...! எல்லாத்தையும் பாத்துகிட்டு தானே இருந்த... மத்தியானம் உதவியைப் புண்ணியம் அவள காப்பாத்துமா.? என்று மனதுக்குள் கடவுளை வேண்டிக்கொண்டாள்.
அச்சமயம் ஒரு கார் பத்மா வீட்டருகில் வந்து நின்றது. காரின் முன் பகுதியில் ஒரு கட்சியின் கோடி பறந்துக்கொண்டிருந்தது.காரிலிருந்து இளநீர் கடைக்காரன் இறங்கினான், தொடர்ந்து ஒரு கரை வெட்டி கட்டிய மனிதர் இறங்கினார்.
இளநீர் கடைக்காரன் பத்மாவைச் சுட்டிக்காட்டி அந்த மனிதரிடம் எதோ பேசினான்.
அந்த மனிதர் தன் இரு கைகளையும் கூப்பி வணங்கியவாறு பத்மாவை நோக்கி விரைந்துச் சென்றார்.
"காப்பாற்றும்...! தன்னோட கலப்பவரை சாவிலிருந்து காப்பாற்றும் அமிழ்தம் போல் செய்த புண்ணியம் தனக்கு உரியவர்களை துன்பத்திலிருந்து நிச்சயம் காப்பாற்றும்...!" என்று உள்மனம் உரக்க சொன்னது சுமித்ராவி காதுகளுக்கு மட்டும் கேட்டது.
முற்றும்..

No comments:

Post a Comment