3
திருமணத்திற்கு முன் எப்படியெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தார்களோ? இன்று இங்கு இவன் இப்படி கேவலப்படித்துவதைப் பெற்றவர்கள் பார்க்க நேர்ந்தால் கண்ணில் திராவகம் பட்டது போல் இருக்காதா?
சுவாதி நட்சத்திரத்தில் பெய்த மழையின் ஓர் தாரை முத்துச்சிப்பியில் விழுந்து, உத்தமமான முத்தாவதும், மற்றோர் தாரை பாம்பின் வாயில் விழுந்து கொடுமையான விஷமாவதும், மழையின் இஷ்டப்படியா நிகழ்கிறது? மகேசன் விதித்த படி நடக்கிறது.
இப்படி கஷ்டப்படுவதை விட பிறந்த வேட்டுக்கே போய்விடலாமே, ஒரு வேலை காதல் திருமணமோ? வாழ்ந்தாலும் கெட்டாலும் உன்னோடுதான் என்று வந்தவளோ? இந்த வக்கிர புத்திக்காரனோடு வாழ்வது தன தலைவிதியென்று, குளிர்ச்சி வெப்பம் என்றறியாத கற்பாறையை போல் வாழ்கிறாளோ?
பெண்கள் பொறுத்துப் பொறுத்துப் புழுங்கிப்போவது, தன்னைப் பெற்றவர்கள் மனம் வாருந்தக் கூடாது என்பதால் தானோ?
பொது இடத்திலே இப்படி என்றால், நான்கு சுவர்களுக்குள் எத்தனை இம்சை செய்வானோ?
தன்னை விட்டால் வேறு கதி இல்லை என்ற ஆணவமா? திருப்பி அடிக்கமாட்டாள் என்ற தைரியமா? இந்தே கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் என்ற அசட்டையா? பிறரிடம் காட்ட இயலாத கோபத்தை யெல்லாம் இவளிடம் காட்டுக்றானோ இவன் அடித்துப் பழகுவதற்கு இவள் என்ன பஞ்சிங் பேக்கா?
நல்ல குடியில் பிறக்காதவன் என்பதை பண்பு துலக்கியது.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே சார்.. சும்மா பேசிக்கிட்டிருந்தோம்.." என்று இவன் செய்த மைமாலன் பலிக்காமல் போனது.
தொடரும்....
No comments:
Post a Comment