Monday, August 17, 2009

மனம் அங்கிருந்த அறைகளில் ,எந்த அறையில் நாம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்ததால், அவர் பேசியதில் இதைத் தவிர வேறு எதுவும் என் காதில் விழவில்லை"..... இந்த அனுபவத்தை வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கு சொல்லி அழைச்சிக்கிட்டு வரசொல்றாரே.. இத வீட்டுல சொன்னா களேபரம் உண்டாகுமே... இதப்போய் எப்படிச் சொல்றது .. " என்று எண்ணிக் கொண்டிருக்கையில்..
" எல்லோரும் அந்த ரூம்ல போய் செக்-அப் பண்ணிக்குங்க..." என்றது ஒரு குரல்.
செக்-அப்-பா எதற்கு ? அய்யோ .. ! என்ன செய்வார்களோ ? என்று மனம் பதைத்து.
அந்த அறையில் நான்கு டாக்டர்கள் மூலைகொருவராய் அமர்ந்திருந்தனர் . அவர்களில் ஒருவரிடம் சென்றேன் .
" கைய நீட்டுங்க ..." என்றார்.
நீட்டினேன். முழங்கைக்கு மேல் பச்சைத் துணியை அழுத்தமாகச் சுற்றி பிரஷேர் பார்த்தார்.
"நார்மல் , கடந்த ஆறு மாதத்தில் மஞ்சக்காமாலை, டைபாய்டுவந்திருந்ததா.."
என்றார் .
"இல்லையே .." என்றேன்.
சரி .. அந்த ரூமுக்குப் போங்க ..." என்றார் .
' அந்த" அறையில் பன்னிரண்டு கட்டில்கள் போட்டிருந்தது. எதில் படுப்பது என்று விழித்தவாறு சென்றேன்.
"ஹலோ !" என்ற பெண் குரல் அழைப்புகேட்டுத் திரும்பினேன் . உதட்டுச் சாயம் பூசி , ஓயயராமாய் நின்றிருந்தாள் . குண்டர் சட்டத்தில் கைதாணவம் போல் ஒருவன் அவளருகில் நின்றிருந்தான் .
" படுத்துக்கப்பா.. " என்றான் அந்த தடியேன்.
எப்படியிருக்குமோ.. என்ன பண்ணுமோ .. என்ற மந்திரத்தை மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது .
என் வலது கையை மெல்ல இழுத்து, பட்டைத் துணியால் , முழங்கைக்கு மேல் இருக்கமாச் சுற்றினான். அந்தப் பெண் அருகில் இருந்த பவுச்சை எடுத்து, தாழ்த்திப் பிடித்துக் கொண்டு அதில் இணைத்திருந்த குழாயை நீட்டி , அதன் முனையில் இருந்த ஊசியை , என் முழங்கையில் புடைந்திருந்த இரத்தக்குழாயில் வலிக்காமல் செருகினாள்.
பள்ளம் கண்ட நீரைப்போல் இரத்தம் விரைந்து சென்று பவுச்சை நிறைக்கத் தொடங்கியது. மனம் பஞ்சு போல லேசானது. இத்தனை நாள் எண்ணியிருந்த ஆசை நிறைவேறியது.
முற்றும் .

No comments:

Post a Comment