Saturday, March 27, 2010

யோசிக்க வைத்தவை
ஸ்ரீ ராகவேந்தர் கோயிளில்லிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தேன், அப்போது எங்கோ பார்த்த முகம் ஒன்று என் எதிரே வந்துகொண்டிருந்தது. நினைவுபடுத்திக்கொண்டு அருகில் சென்று நலம் விசாரித்துவிட்டு புறப்பட்டேன். அவர் என் தாய் வழி உறவு. அந்த இடத்தில் நான் அவரை எதிர்பார்க்கவேயில்லை. தூங்கி எழுந்ததும் நாம் இன்று இன்னாரை இங்கு சிந்திப்போம் என்று கணிக்கும் ஆற்றல் நமக்கு இல்லை என்பது என் எண்ணம். ஆனால் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் திட்டப்படி தான் நிகழ்கிறது என்பது என் ஆழமான நம்பிக்கை. எவ்வளவோ உறவினர்கள் இருக்கிறார்கள் நான் ஏன் குறிப்பாக இவரை பார்க்கவேண்டும். இப்படித்தான் சுமார் ஒரு வருடம் முன்பு என் பாட்டி உடல் நலம் குன்றியிருந்தார் அவரை பார்க்கச் சென்றிருந்தேன் அன்றும் இதே உறவினரை பார்த்தேன் அப்போதும் இப்படித்தான் யோசித்தேன். எதற்காக கடவுள் இவரை சந்திக்க வைத்தார் என்று எனக்கு புரியவில்லை! ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும், அது அடுத்த எதிர்பாராத சந்திப்பில்லோ அல்லது அதற்குப் பிறகோ நிச்சயம் தெரியவரும். இப்படி எவ்வளவோ எதிபாராத நிகழ்வுகளை அன்றாடம் நம் வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் எதோ ஒரு சிலவற்றை மனம் ஊன்றி கவனிக்கறது, அறிவில் பதிக்கிறது, காரணம் புரியும்போது கடவுளின் கருணையை உணர்கிறது.

No comments:

Post a Comment