Friday, August 21, 2009

அன்பே அமிர்தம்
மித்தியான வேலை. தன் மகளை அழைத்துச்செல்வதற்க்காக பள்ளிக்கூட வாசலில் நின்றிருந்தாள் சுமித்ரா. மணி அடிப்பதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பே வந்து விடுவது வழக்கம். அவள் வசிக்கும் சன்னதி தெருவில் இருக்கும் சில குழந்தைகளும் இதில் படிக்கிறார்கள். அந்த குழந்தைகளை அழைத்து செல்வதற்காக நிற்கும் அம்மாக்கள், பாட்டிக்களோடு பேசிக்கொண்டிருபாள்.
இவர்களோடு பேசுவதில் பல புதிய பதார்த்தங்கள், குழம்பு வகைகள், புஜை முறைகள் எனப் பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டள். அது மட்டுமல்ல அவர்கள் முலம் தெருவில் உள்ளவர்களைப் பற்றி எல்லா விஷயங்களும் தெரியவரும். " அப்படியா.. அப்படியா.." என்று கேட்பாளே தவிர இவள் யாரைப்பற்றியும் புரளி பேசியது கிடையாது. தெய்வ பக்தி நிறைந்தவள்.
"சுமித்ரா...! நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன்ல.. அப்போ கூடத்துல மாட்டியிருந்த ' கீதா சாரம்' பார்த்தேன்.. அப்பவே சொல்லனும்னு நினைச்சேன், பேச்ச்சு சுவாரியத்துல மறந்துட்டேன்.. எப்போதும் அதை புஜை ரூம்லதான் மாட்டனும். ஏன்னா.. அது போர்கள காட்சி, வீடும் அப்படி ஆயிடும்னு என்னகுத் தெரிஞ்சவங்க சொன்னாங்க.". என்றாள் நான்காவது வீட்டில் இருக்கும் பாட்டி.
"அப்படியா.. இன்னிக்கே மாத்திடுறேன் பாட்டி" என்ற வார்த்தைகள் நேரே மனதிலிருந்து ஒலித்தது. இந்த அன்பு தான் அவளை எல்லோருக்கும் பிடிக்கும்படி செய்திருந்தது.
"ஏய்..! மச்சி ஐட்டம்டா.." என்ற ஆட்டோக்காரர்கள் குழுவிலிருந்து ஒருவன் கத்த...
"ஏய்..! உஸ்ஸ்.. பிச்சு..." என்று பலப்பல ஓசைகள் தொடர்ந்து கிளம்பியது. கை தட்டி ஆரவார்ரம் செய்தனர்.
தொடரும்...

No comments:

Post a Comment