பதினெட்டு வயதைக் கடந்து பல வருடங்கள் கழிந்த பிறகு, இன்று தான் 'அந்த' அனுபவம் பெற வாய்ப்பு கிட்டியது . எத்தனையோ நாட்கள் எண்ணியிருந்த ஆசை, இன்று நிறைவேறப் போகிறது . சிறுவயதில் எப்படியோ என்னுள் விழுந்த பொறி இன்று பெரிய நெருப்பாய் மாறி என் மனத்துள் கனன்று கொண்டிருந்தது . என் உடல் முழுவதும் உஷ்னம் பரவி, ஜிவ்வ் வேன்றுருந்தது .
ஆனால், அந்த இடத்திற்குப் போவதை யாராவது பார்த்து, வீட்ல தெருயபடுத்திவிட்டால் என்ன ஆகுமோ அன்ற பயம் மனதைக் கவ்வுயது. எத்தனை நாட்கள் தான் பயந்து, பயந்து ஆசையை அடக்கி வைப்பது. நம் உயிர் வாழ வரையறுக்கப்பட்ட நாட்க்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியாது; அடுதத விநாடி நிகழப்போவது என்ன என்பதும் தெரியாது. இப்படி வாழ்க்கை நிலையில்லாமல் இருக்க , சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம் ஆசைகளை நாம் ஏன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.
நான் நான்கு முறை செய்திருக்கிறேன்; நான் முன்று செய்திருக்கிறேன், என்று நண்பர்கள், மார்தட்டிக் பெருமிதப்படும் போது, நான் இந்த இருபத்தியெட்டு வயதுவரை ஒரு முறை கூட செய்யவில்லையே என்று எண்ணும் போது வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்து என்ன சாதித்தேன்..? சாவதற்குள் இதையாவது செய்து விடுவோம் என்ற தீர்மானத்துடன் ‘அந்த’ கட்டிடத்துக்குள் நுழைந்தேன்.
அங்கே குழுமியிருந்தவர்களை பார்த்ததும் ஆ..! என்ன இவ்வளவு பேரா என்று வியப்பாக இருந்தது. மனதுக்கு கொஞ்சம் பலம் வந்தது போலவும் இருந்தது. சைக்கிளை ஓரமாக நிருத்த்திவிடு, தயங்கி தயங்கி, ஓர் ஓரமாக சென்று நின்றேன்.
என்னைவிட வயதில் சிறியவர்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்த போது, இத்தனை வருடங்கள் வீணாக்கியதை எண்ணி வருந்தினேன். இவ்வளவு நேரம் கொண்டிருந்த பயம் அர்த்தமற்றது என்பதையும் உணர்ந்தேன். இத்தனை நாட்கள் வளர்ந்த இந்த உடலின் பயனை இன்று அனுபவிக்கப் போவதைக் நினைத்து மனம் ஆனந்தத்தில் மிதந்தது.
"எல்லோரும் அந்த ரூமுக்கு போங்க.." என்ற அந்தக் குரல் என் சிந்தனையை கலைத்தது.
ஓர் அறையில் சென்று அமர்ந்தோம், அங்கெ சில பெரும் புள்ளிகளும் அமர்ந்திருந்தனர். என்ன இவர்களுமா..! என்று பிரம்மித்தேன். அவர்களில் ஒருவர் எழுந்து பேசத் தொடங்கினார்..
"... இதனால் நோய் எதுவும் வாராது, இவங்க ரொம்ப சுகாதார முறையில் நடத்திராங்க.... நான் பல தடவை செஞ்சிருக்கேன்... என் உடம்புக்கு எந்த கெடுதலும் வரல ... நான் நல்லான் இருக்கேன்; எல்லாம் முடிஞ்சதும் பழைங்களும் குளிர் பானமும் கொடுப்பதற்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க, களைப்பு நீங்கி மகிழ்ச்சியா வீட்டுக்குப் போகலாம். உங்க அனுபவத்த உங்க வீட்டுக்கு, அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் தெரிந்தவங்களுக்கும் சொல்லி, அடுத்த முறை அவங்களையும் கட்டாயம் அழச்சிக்கிட்டு வரணும்... "
மனம் அங்கிருந்தத அறைகளில் எந்த அறையில் நாம் செல்ல வேண்டுமஎன்கிற எண்ணத்திலேயே இருந்ததால், அவர் பேச்சில், இவற்றைத் தவிர வேறு எதுவும் என் காதில் விழவில்லை.
இந்த அனுபவத்த வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட சொல்லி அழைச்சிகிட்டு வரச் சொல்ராரே. இத வீடுல சொன்ன களேபரம் உண்டாகுமே இதப்போய் எப்படிச் சொல்றது என்று எண்ணிக் கொண்டிருக்கையில்...
"எல்லலரும் அந்த ரூம்ல போய் செக்-அப பண்ணிக்குங்க..." என்றது ஒரு குரல்.
"செக்-அப் எதற்கு... அய்யயோ..! என்ன செய்வாங்களோ.." என்று மனம் பதைப்பதைத்தது.
அந்த அறையில் நான்கு டாக்டர்கள், மூலைக்கொருவராய் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரிடம் சென்றேன்
"கைய நீட்டுங்க..." என்றார்.
முழ்ங்கைக்கு மேல், பச்சை நிறத் துணியை அழுத்தமாக சுற்றி ப்ரேஷர் பார்த்தார்
"நார்மல்...கடந்த அறு மாததில் மஞ்சல் காமாலை, டைப்பாயிட் வந்திருக்கிறதா..?" என்றார்
"இல்லையே..." என்றேன்.
"சரி, அந்த ரூமுக்குப் போங்க..." என்றார்.
அந்த அறையில் பன்னிரண்டு கட்டில்கள் போட்டிருந்தது. எதில் படுப்பது என்று விழித்தவாறு சென்றேன்.
"ஹலோ.." என்ற பெண் குரல் அழைப்புக் கட்டுத திரும்பினேன்.
உதட்டுச் சாயம் பூசி ஒய்யாரமாய் நின்றிருந்தாள். குண்டர் சட்டத்தில் கைதானவன் போல் ஒருவன், அவளருகில் நின்றிருந்தான்.
"படுத்துக்கப்பா.." என்றான் அந்த தடியன்.
"எப்படியிருக்குமோ... என்ன பண்ணுமோ..."என்ற மந்திரத்தை மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது.
என் வலது கையை மெல்ல இழுத்து, பட்டைத் துணியால், முழங்கைக்கு மேல் இறுக்கமாக சுற்றினான். அந்தப பெண், அருகில் இருந்த 'பவுச்'சை எடுத்து தாழ்த்திப் பிடித்துக் கொண்டு, அதிலிருந்த குழாயை நீட்டி, அதன் முனையில் இருந்த ஊசியை என் முழங்கையில் புடைந்திருந்த ரத்தக் குழாயில் வலிக்காமல் செருகினாள்.
பள்ளம் கண்ட நீரைப்போல் ரத்தம் விரைந்து சென்று 'பவுச்'சை நிறைக்கத் தொடங்கியது. மனம் பஞ்சு போல் லேசானது. இத்தனை நாட்கள் எண்ணியிருந்த ஆசை நிறைவேறியது.
No comments:
Post a Comment