3
'சர் ரென்று ஒரு கார், கட்டவிழ்த்துவிட்ட பலுனிலிருந்து வெளிப்படும் காற்றுப் போல விரைந்து சென்றது.
சாலையோரத்தில் ஒரு சிறு பெண் படித்திருந்தாள்; தலை அருகில் இரத்தம் பரவியிருந்தது; சற்று த்ள்ளி ஒரு சைக்கிள் படுத்திருந்தது ; எப்படி நேர்ந்தது என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.
"படுபாவி..!ஓரமா போற குழந்தையை எப்படி இடிச்சுட்டு நிறுத்தாம கூட போறானே ...படுபாவி..!படுபாவி..!"என்று பதறியபடியே ஓடி வந்து பூமாலையை அள்ளுவது போல குழந்தையை பக்குவமாக அள்ளினாள்; மைடியில் வைத்துக் கொண்டாள் ; இரத்தம் கொப்பளிக்கும் இடத்தில் உள்ளங்கை வைத்து அழுத்தினாள் பத்மா.
"அய்யோ...!", என்று பதற்றத்துடன் ஓடி வந்தால் சுமித்ரா. அருகில் சிதறிக் கிடந்த பையையும் செருப்பையையும் எடுத்து வந்து சைக்கிள் அருகே போட்டால்.
அங்கிருந்தவர்கள் சுழ்ந்து கொண்டனர்.
"அய்யோ....! குழந்தையை இப்படி இடிச்சுட்டுப் போயிட்டானே..!"
"அவன விடக்கூடாது... கார் நெம்பர யாராவது நோட்பண்ணீனிங்களா?"
"இந்த மாதிரி ஆளுங்கள போலீஸ்ல பிடிச்சு கொடுக்கனும்.."
என்று கூட்டத்திலிருந்து பல குரல்கள் சம்பவத்தோடு தங்களை தொடர்பு படுத்திக் கொண்டன.
"டீரீங்..!" என்று பள்ளிகூட மணி அடித்ததும், கல் பட்டதும் சிதறிப் பறக்கும் புறாக்கள் போல, கூட்டம் பறந்தது.
"நீ வாம்மா..எல்லாம் பாத்துப்பாங்க..."
"குழந்தைங்க காத்துகிட்டு இருக்கும் வாம்மா..." என்று சுமித்ராவின் குழுவினர் எவ்வளவோ அழைத்தும் அவள் நகரவில்லை; நகர முடியவில்லை. ஏனோ அவள் கண்கள் பனித்திருந்தது.
அழைக்காமலேயே ஒரு ஆட்டோ பத்மா அருகில் வந்து நின்றது, குழந்தையோடு மெல்ல எழுந்து ஆட்டோவுக்குள் அமர்ந்தாள். "ஆண்டி..!ஆண்டி..!" என்று அழுத குழந்தையை சமாதானப்படுத்தி அருகில் அமர்த்திக்கொண்டாள். அங்கு நின்றிருந்த இளநீர் கடைக்காரனிடம் அந்த கார் நம்பரையும் தன தொலைபேசி எண்ணையும் கொடுத்தால் பத்மா.
"உம்..! ஆஸ்பிடலுக்கு போ..!" என்றாள் ஆட்டோக்காரனிடம்.
ஆட்டோ கிளம்பியது.
தொடரும்..
No comments:
Post a Comment