என்னடா இது கொடுமை..!
கொடிதடா இவ் வறுமை..!
தடை படா உணவை
கொடப் பாஅ கடவுளே..!
குருத்தும் வறுமையில், பழுத்ததும் வறுமையில்;
கருணைக்கு பஞ்சமா? உணவுக்கு பஞ்சமா?
அவரவர் பார்வையில் பசிநோய் பட்டால்
அவரவர் இயன்றளவு அக்கறை கொண்டால்
அவளச் சமுதாய அளவு குறையுமே..!
பள்ளி செல்லும் பருவம்;
பிள்ளை கவனம் பசி;
பசிக்கு உணவு கொடுக்கும்,
திருடனும் கடவு ளாவானே..!
சுற்றி கொடுமைகள்; எல்லாம் எதனாலே?
வற்றிய வயிறு, நரம்பாத தனாலே;
‘நமக்கென்ன..’ வென்று விலகு வதாலே,
நிகழும் கொடுமைகள் நம்மை விடாதே..!
முன்வினைப் பயனாலே பசிநோய் தாக்க,
உணவு மருந்திட்டு பசிநோய் விரட்ட,
நம்மால் இயன்றதை ‘சட்’டெனச் செய்ய,
நல்லவர் படைக்குள் அடைக்கலம் கொடுப்போம்;
திருடர் படைக்குள் இழுக்கும் முன்னரே..!
-சுதாகர்
No comments:
Post a Comment