வித்தியாசமான அனுபவம்.
'நானா இது'! அந்தப் வெண்மை கலந்த மஞ்சள் நிறப் புது சட்டையில் நான் பளிச் சென்று இருந்தேன். வசதியானவன் போல் இருந்தேன் என்று கூட சொல்லலாம்.
பள்ளியிக்குச் சென்று, குழந்தையை அழைத்துக் கொண்டு, வீட்டுக்குப் புறப்பட்டேன். அது வரை வெயில் அடித்துக் கொண்டிருந்தது; சற்றென்று மேகம் சூழ்ந்தது; சில வினாடிகளில் மழை கொட்ட ஆரம்பித்தது. அது மழைக் காலமும் அல்ல. எங்கிருந்து வந்தது இந்த மழை என்று யோசிப்பதற்குள் நனைந்தே விட்டேன். ஒதுங்குவதற்கு இடம் தேடினேன். அது பங்களாக்கள் நிறைந்த பகுதி, கடைகள் அதிகமாக இருக்காது. நல்ல வேலை மழை வரும் நேரம் நான் ஒருகடையை நெருங்கிக் கொண்டிருந்தேன். அப்பாட என்று அங்கே ஒதுங்கிக் கொண்டேன்.
அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியும் வந்து நின்றார். முதுமை ஒரு பக்கமும், வறுமை மறு பக்கமும் உடலை உருக்கி இருந்தது. மழை வலுக்க வலுக்க சாரல் அதிகமானது. அவ்வளவு வெப்பமும் எங்கே போனது என்று தெரியவில்லை. லேசாக குளிர ஆரம்பித்தது. பாட்டி தன் புடைவையின் தலைப்பை இழுத்து உடலை இறுக்கமாக சுற்றிக் கொண்டார். முதுமை காரணமாக அவர் உடலில் மெல்லிய நடுக்கத்தை நான் கவனித்தேன். பாவம் பாட்டி என்ற சிந்தையோடு மழையை வேட்டிக்கைப் பார்த்தேன்.
மழை அடர்த்தியாக பொழிந்துக் கொண்ட்டிருந்தது. எதிரே உள்ள வீடுகள் மங்கலாக தெரிந்தன. மழை நிற்குமா… நீடிக்குமா… சீக்கிரம் வீட்டுக்குப் போகணுமே… என்ற சிந்தனையில் மழையை வேட்டிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நேர் எதிரே இருந்த வீட்டுக்குள் இருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. தெளிவாக தெரியவில்லை இருந்தாலும் அந்த தோரணையும், மங்கலாக தெரிந்த அரைக் கை சட்டையையும் வைத்து அது ஒரு ஆண் உருவம் என்று முடிவு செய்தேன். சற்று நேரம் மழையை வேட்டிக்கைப் பார்த்தது. மீண்டும் உள்ளே சென்றது.
பாவம் இப்போது பாட்டியால் நிற்க கூட முடியவில்லை; கடையின் கதவருகே அப்படியே சுரண்டு படுத்துக் கொண்டார். புடவையை போர்வையாக்கிக் கொண்டார். இடமும் தாரளமாக இருந்தது.
மழை, ஒரு கனமான கண்ணாடித் திரையைப் போல் எனக்கு தென்பட்டது. பத்து நிமிடத்திற்கு முன் அடித்த வெயில் எங்கே போனது? சில நிமிடங்களில் பருவகாலத்தையே தலைகிழாக மாற்றிக் காட்டுகிறதே! இயற்கை சக்தி வாய்ந்தது… என்று வியந்துக் கொண்டே மழையை வேட்டிக்கைப் பார்த்தேன். மீண்டும் அந்த எதிர் வீட்டிலிருந்து அந்த உருவம் வெளியே வந்து சில வினாடிகள் மழையை வேட்டிக்கைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றது.
பத்து நிமிடத்திற்கு மேலாக அடர்த்தியாக பொழிந்துக் கொண்டிருந்த மழை மெல்ல குறையத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தூறலாக மாறியது. இப்போது அந்த உருவம் மீண்டும் வெளியே வந்தது. இம்முறை ஒரு பெண்மணியும் உடன் வந்தார். அந்த உருவம் தெளிவாக தெரிந்தது; நல்ல கம்பிரமாக இருந்தது. அப்பெண்மணி பணியாள் போல் தோற்றமளித்தார். அப்பெண் படியிறங்கி வந்து 'கேட்' டைத் திறந்து விட்டார். அந்த மனிதர் காருக்குள் சென்று அமர்ந்தார். கார் கதுவு வழியாக அப்பெண்மணியை அழைத்து எதோ பேசினார். அப்பெண்மணி நேராக என்னை நோக்கி நடந்து வந்தார். “உங்க வீடு பக்கதுலன்னா… ஐயா உங்கள உங்க வீட்ல கொண்டு விட்ராராம்… கேட்டு வர சொன்னார்…” என்றார் அப்பெண்மணி.
இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை; எனக்கு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. சுதாரித்துக் கொண்டு ' “இல்லை ..... நான் வண்டி வச்சிருக்கேன்... ஒன்னும் பிரச்சன இல்லை ...” என்றேன்.
தலையை ஆடிக் கொண்டு சென்று விடார்.
இதற்கு முன் நான் அந்த மனிதரை பார்த்தது கூட கிடையாது. பிறகு எப்படி அவர் என்னை தன்னோடு அழைத்துக் கொண்டு என் வீட்டில் கொண்டு விட முடிவு செய்தார்… என்று குழம்பினேன். இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
ஏனோ தெரியவில்லை என் கவனம் அங்கே படுத்திருந்த பாட்டியின் மீது திரும்பியது. என்னைக் கேட்டது போல் ஏன் இந்த பாட்டியை கேட்கவில்லை; மழையின் பாதிப்பு எனக்கு மாடும் தானா? பாட்டிக்கு இல்லையா? என்று யோசித்துக் கொண்டிருக்கையில்,
அவரின் கார் என்னைக் கடந்து சென்றது. காரின் பக்கவாடுக் கண்ணாடியில் என் உருவன் தெரிந்தது. குனிந்து என் சட்டையைப் பார்த்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment