Wednesday, March 31, 2010

பங்குச்சந்தை இன்று
நிபிட்டி இன்று இறக்கத்தோடு முடிவடைந்தது. சுமார் 60 புள்ளிகளுக்குள் தான் வர்த்தகம் நடைபெற்றது. அந்நிய முதலிட்டார்கள் 433 .52 கோடிகள் பங்குகள் வாங்கினார்கள். ஆனால் உள்நாட்டு முதலிட்டாளர்கள் 356 .58 கோடிகள் விற்றனர். நிபிட்டி 5293 களுக்கு மேல் செல்ல முடியாமல் திணறியது. இரண்டு நாள்களாக நிபிட்டி 5300 அளவில் பெரிய அழுத்தத்தை சந்தித்து வருகிறது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வங்கிக்கொண்டிருப்பதால் நான் நிபிட்டி இன்னமும் உயரும் என்றே நம்புகிறேன். 5220 புள்ளியில் வலுவான சப்போர்ட் உள்ளது. இன்று நிபிட்டி 5245 புள்ளியை உடைத்து அதற்கு மேல் முடிவடைந்தது. நேற்றே நிபிட்டி நல்ல உயர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தேன் என் கணிப்பு தவராயிபோனது.
பங்குச்சந்தை நாளை நிலவரம்

அன்னிய முதலிட்டாளர்கள் இன்னமும் பங்குகள் வாங்குவதால் நான் நிபிட்டி நல்ல உயர்ச்சியை அடையும் என்றே கருதுகிறேன். நாளை பணவீக்க நிலவரம் வெளிவரும் அது வர்த்தகத்தை நிர்ணயிக்கும். நாளை தான் இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் அதனால் வர்த்தகத்தில் ஒரு திருப்பத்தை சந்திக்ககலாம் என நினைக்கிறேன். நாளைய வர்த்தகத்திற்கு 5220 புள்ளி மிக முக்கியம். இதை உடைத்து நிபிட்டி கிழ் இறங்கினால் நிபிட்டி பலகீனம் அடைகிறது என்றுதான் கொள்ளவேண்டும், வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நாளை என்ன நிகழ்கிறது என்பதை பார்ப்போம்.
நன்றி!

No comments:

Post a Comment