Tuesday, March 30, 2010

பங்குச்சந்தை இன்றைய நிலவரம்
இன்றும் நிபிட்டி 5330 அளவுக்கு மேல் முன்னேற முடியாமல் திணறியது. வர்த்தகமும் சுமாராகவே இருந்தது. அந்நிய முதலிட்டாளர்கள் இன்றும் 579 கோடிக்கு பங்குகள் வாங்கினர். நேற்று வரை விற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு முதலிட்டாளர்கள் இன்று 100 கோடிக்கு பங்குகள் வாங்கினர். இன்று நிபிட்டி சற்று சரிவை சந்தித்த போதிலும் இன்னமும் அது 50 மற்றும் 20 EMA விற்கு மேல் தான் முடிவடைந்திருக்கிறது. இன்னமுன் அந்நிய முதலிட்டாளர்கள் கொள்முதல் செய்துக்கொண்டிருப்பதாலும் மேலும் இதுவரை விற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு முதலிட்டாளர்கள் இன்று கொள்முதல் செய்திருப்பதாலும் நான் இன்னமும் நிபிட்டி புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர் பார்க்கிறேன். இத்தனை நாள்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் இன்று ஒரு சிறு பகுதியை விற்று லாபம் எடுத்திருப்பார்கள் அதனால் இறங்கியிருக்கலாம்.
பங்குச்சந்தை நாளைய நிலவரம்

அந்நிய முதலிட்டாளர்கள் கொள்முதல் செய்துகொண்டிருப்பதால் நாளை நிபிட்டி உயரும் என்றே நம்புகிறேன். நாளை நிப்ட்டிக்கு 5245 மற்றும் 5220 முக்கிய தடுப்பும் 5288 மற்றும் 5301 முக்கிய இடர் ஆகும்.
நிபிட்டி 50 மற்றும் 20 EMA க்கு மேல் முடிந்திருப்பதால் நாளை நிபிட்டி உயரும் என்றே எதிர்பார்க்கிறேன்.
நன்றி!

No comments:

Post a Comment