Monday, March 29, 2010

வித்தியாசமான அனுபவம்.
சாலையில் ரத்தம் தோய்ந்திருந்தது! . அருகில் ஒரு இரு சக்கர வாகனம் படுத்திருந்தது; சற்றுத் தள்ளி வண்டியின் சைலேன்செர் முறுக்கிய நிலையில் இருந்தது; பத்தடி தூரத்தில் இன்னொரு இருசக்கர வாகனம் எரிந்து கொண்டிருந்தது! சாலையின் வலப்புறம் ஒரு தொலைபேசி பூத் நொறுங்கி இருந்தது; நிறைய செருப்புக்கள் சிதறிக் கிடந்தன; பதறிப்போனேன்! என் வண்டியின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றேன். எதோ கலவரம் நடந்திருக்க வேண்டும். அந்த இடம் வெறிச்சோடியிருந்தது. சாலையின் இடப்புறம் சிறு கும்பல் எதையோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. வாகனத்தில் சென்றுகொண்டே கவனித்தேன்,"அய்யோ!" ஒருவர் ரத்தவெள்ளத்தில் படுத்துக்கிடந்தார். கலவரத்தில் வேட்டுப்பட்டவரோ? அடப் பாவமே! இத்தனபேறு சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கிறார்களே, ஒருத்தர் கூட உதவலையே! என்று என் மனம் பதைபதைத்தது. அப்போது
"கட்! பேக்-அப்!" என்று ஒருவர் குரல் கொடுத்தார். சட்றேன்று அந்த சிறு கும்பல் சாலையில் இருந்த வாகனம், செறுப்பு ஆகியவற்றை அகட்ற துவங்கியது. ரத்தவெள்ளத்தில் இருந்தவர் எழுந்து நடந்தார்.
"அடச் ச்சே!" என்று வாகனத்தை வேகமாக செலுத்தினேன்.

No comments:

Post a Comment