காலை எழுந்ததும், கட்டிலா மகிழ்ச்சி,
நாளை துவங்க நாட்டம் பொங்கி,
உள்ளே துள்ளியது உடலைத் தள்ளியது,
எல்லாம் தினமும் இயற்றும் பணிதான்,
நீல வானம், நீண்ட பயணம்,
காலத் தில்பிறர் கருணை; உயர்மலை,
வறண்ட தொண்டை வாய்நீர்; அலைகிளி
நிறவயல்; குலையும் நிலைதரும் கால்சூழ்
கடலலை; மழைமண் கலக்கும் வாசம்;
தொடர்பிலா மழலை தூய சிரிப்பு;
நான்தொ லைந்து நான்மீண் டநிலை;
தேன்நபர் வாசலில் திடீர்தோற் றம்இவை;
தரும்மன நிலை,சொல் தாண்டிய வுணர்வு,
திருசெய் கருணை தினமும் தொடரவே..!
நாளை துவங்க நாட்டம் பொங்கி,
உள்ளே துள்ளியது உடலைத் தள்ளியது,
எல்லாம் தினமும் இயற்றும் பணிதான்,
நீல வானம், நீண்ட பயணம்,
காலத் தில்பிறர் கருணை; உயர்மலை,
வறண்ட தொண்டை வாய்நீர்; அலைகிளி
நிறவயல்; குலையும் நிலைதரும் கால்சூழ்
கடலலை; மழைமண் கலக்கும் வாசம்;
தொடர்பிலா மழலை தூய சிரிப்பு;
நான்தொ லைந்து நான்மீண் டநிலை;
தேன்நபர் வாசலில் திடீர்தோற் றம்இவை;
தரும்மன நிலை,சொல் தாண்டிய வுணர்வு,
திருசெய் கருணை தினமும் தொடரவே..!
No comments:
Post a Comment