Tamil short stories, Tamil short poems and some Tamil articles are filled in this site. All deals with real life problems. Hope reading Tamil collections will give you a pleasant experience. Enjoy reading.
Sunday, June 26, 2016
குறிப்பு: இக் கதை "தமிழ் பட்டறை" என்ற முகநூல் குழுமத்தில் நடத்தப்பட்ட"புதினம் பகுதி/ எழுத்தாளர் ஆகலாம் வாங்க” எனற போட்டிக்காக எழுதப்பட்டது. கொட்டை எழுத்தில் உள்ளவை அவர்கள் கொடுத்தது, கதையை நாம் எழுத வேண்டும்.
Saturday, June 18, 2016
“குறிச்சி டைம்ஸ்” எனற பத்திரிக்கையில் எனது “இன்பக் குளியல்” என்ற கவிதை வெளியாகியுள்ளது.
இனிக்கும் இன்ப குளியல்
இனிது இயற்கை குளியல்
குளம், ஏரிக் குளியல்,
உளம் விரும்பும் குளியல்;
உள்ளங் கால் தொட்டதும்,
உள்ளம் உடம்புள் துள்ளும்;
உடல் முழுதும் சிலிர்க்கும்;
உடல் நீரில் மூழ்க,
பற்கள் வாத்திய மாக
ராக மொன்று பிறக்கும்;
இழுத்து பிடித்த உணர்வை,
ஓடை இழுத்துக் கொண்டு
ஓடும்; குழந்தை மனம்
ஓங்கும், அக்கம் பக்கம்
மறக்கும், பரவசம் பிறக்கும்;
நீரில் உள்ள வரை
நிலைக்கும், நிலை குலைய
வைக்கும்; உடல் மிதக்கும்
வரை உள்ள சுகம்
நீர்த் தரும்பிர சாதம்;
குல தெய்வ கோயில்
குரு தெய்வ கோயில்
குளத்தில் குளிக்கும் போது
மட்டும் கிட்டும் சுகம்ஆன் மசுகமே..!
ஏரி குளம் குட்டை யெலாம்
வீட்டைக் கட்டி வைக்க
வரும் அடுத்த வம்சம்
இயற்கை குளியல் சுகிக் காதே..!
அழுக் கை நீக்க குளியல்
மட்டு மல்ல குளித்தல்
நீர்ப்பி ராணன் எடுப்பதும்
சூர்ய சக்தி பிடிப்பதும்
குளித் தலின் நோக்கமே
கதிர் உதிக்கும் முன்னமே
குளிர் நீரில் குளிக்கவே
நீர் ஞாயிறு சக்தி கிட்டுமே..!
எவ் வூர் தண்ணி யிலும்
எப் பருவ மானா லும்
முதல் மூன்று முறை உள்ளங
கையில் நீரள்ளி நிதான மாய்
உதடால் உரிஞ்சி யுரிஞ்சி குடிக்க
உடமபு நீரை சோதிக் கத்தக்க
நோய் எதிர்ப்பு உண்டாக் கப்பின்
முங்கி முங்கி நாள் முழுதும்
குளித்தா லும்ஊ றொன்று நேரா
வுடபிற் கேயிது முன்னோர் வாக்கே..!
-சுதாகர்
Thursday, June 16, 2016
என் மனச்சிறையில்
தினம் மகிழ்ச்சி பொங்கும் பள்ளிப்பருவம்;
எத்தனை பேருக்கு வாய்த் திருக்குமோ..!
அத்தனை பேரும் பாக்கிய வான்களே..! .
பாடம் ஒன்று பிள்ளைகள் பத்தைந்து;
பேதம் உண்டு பிள்ளைகள் குணத்து;
புரிதல் சக்தி சுரப்பிகள் பொறுத்து;
பழவினை பொறுத்து சுரப்பிகள் அமைபே..!
கற்பூர புத்தி எல்லார்க்கும் இல்லை;
கற்ப்பிக்கும் யுக்தி தனித்தனி இல்லை;
பொதுவாக போதித்து புரியாமல் படித்து,
போனது தனித் திறன் வெளிப்படாமலே..!
ஆசனம் பழகி, அறியாமை நீக்கி,
ஆசான் அககறை அனைவருக்கும் காட்டி,
அவரவர் தனித்திறன் கண்டு வளர்த்து,
அவனியில் அவரவர் தனியிடம் பெறவே...
கல்வி அமைப்பு அன்றில்லை;
கண்ணி வாய்ப்பு அன்றில்லை;
நம்குழந்தைக்கு அந்தக் குறையில்லை;
நற்காலம் கண்டு மனம்மகிழுதே..!
மனஅழுத்தமிலா மாணவப்பருவம் அமையவே
மனம் காணும் கனவிதுவே..!
-ச.சுதாகர்
2 என் மனச்சிறையில்
மனஅழுத்தம் இல்லா மாணவப் பருவம்;
தினம் மகிழ்ச்சி பொங்கும் பள்ளிப்பருவம்;
எத்தனை பேருக்கு வாய்த் திருக்குமோ..!
அத்தனை பேரும் பாக்கிய வான்களே..! .
அன்று பணமீட்ட படித்தோம் படிப்பு;
இன்று பெற்றவர் விருப்பம் திணிப்பு;
என்றுபெறும் மாணவன் விருப்பம் மதிப்பு;
அன்று மலரும் மகிழ்ச்சி சமுகமே..!
பாடச் சுமையும், இயந்திர வாழ்வும்,
பாசப் பரிவு, பற்றாக் குறையும்,
பிள்ளைக்கு தந்தது மன அழுத்தமே..!
வடிகால் தேடும் மனமாய்ப் போனதே..!
மடியில் அமர்த்தி புத்தி சொல்ல,
மனதிற் கிதமாய் அன்பு பொழிய,
கூட்டுக் குடும்பம் இன்றில்லையே..!
கூட்டுக் குடும்பம் மன அழுத்தம் அழித்தது;
கூட்டுக் குடும்பம் பண மயக்கத்தில் சிதைந்தது;
தீயோர் கூட்டம் சமயம் பார்த்து, திட்டம்
தீட்டித் தன் வயபடுத்தி, தீயச்சமுகம் உருவாக்குமோ..?
விளையாட்டு மைதானம் கணிணியா..?
விளையாட்டு சுரப்பிகுறை நீக்குமே,
விளையாட்டு கூடிவாழப் பழக்குமே,
விளையாட்டில் பள்ளிகவனம் செலுத்தட்டுமே..!
மனஅழுத்தமிலா மாணவப்பருவம் அமையவே
மனம் காணும் கனவிதுவே..!
-ச.சுதாகர்