Monday, May 9, 2016

உழைப்பே உன்னதம்

குறிப்பு: இக் கவிதை "தினமணி" வலைத்தளத்தில் "கவிதை மணி" எனற பகுதியில் வெளியானது. உழைப்பே வாழ்வின் உன்னதம் உழைப்புக்கு உண்டு ஊதியம் ; ஊக்கத்துடன் முயற்சி செய், ஊரும் எறும்பாய் வாழ்; ஊழ் விலகும் பார்..! ஊசி முனையும் மைதானம், ஊசி காதும் ஆகாயம், உறுதி யுள்ளம் உடையோர்க்கே..! உள்ளச் சோர்வு உதறு! உள்ளம் தளரும் நேரம் உறுதுணை பகவன் பாதம் உனக்கும் ஒருநாள் விடியும். ஊரே உன்பெயர் சொல்லும் உலகம் முழுதும் கேட்கும்.

Saturday, May 7, 2016

வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!

06/05/2016
இன்றைய ‪#‎சிறந்த‬ _படக்கவிதைப் போட்டியின் வெற்றியாளர். சந்தானம் சுதாகர் அவர்களுக்கும்
பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வர்ணம் பூசிய வாழ்க்கையடா;
யாரை நம்பிப் பழகிடடா..!
சர்க்கரை பூசிய வார்த்தைகளால்,
சாதிக்க எண்ணும் மனிதரடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
பார்வையில் யாரும் பால்போலே,
பாசம் கொள்வது பாசாங்கடா..!
துர்மனம் ஏந்திய துட்டன்கோடி,
கடவுள் உன்துணை கவலைவிடடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வள்ர்ச்சி பொறுக்கா நட்புக்கள்,
வீழ்த்த சமயம் பார்க்கும் சகுனிகள்..!
வாழும் சமுகம் இதிலே… இறைவா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
தெரிந்தே துரோகம் செய்து
துளியும் கருணையின்றி பழகம்,
துட்ட மனங்கள் இடையே, இறைவா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
வேண்டும் வேடமில்லா வாழ்க்கையடா..!
. சந்தானம் சுதாகர்

Friday, May 6, 2016

“மரம் பேசுகிறேன்”

குறிப்பு:” மரம் பேசிகிறேன்” என்ற இக்கவிதை ‘கவிதைப் பட்டறை’ யின் கவிதைப் போட்டியில் பாராட்டப் பட்ட பத்து கவிதைகளில் இடம் பெற்றுள்ளது.

கதிரொளியை உணவாக்கும் திறம் கொண்ட மரம் பேசுகிறேன், கொஞ்சம் கேள்..!
உணவு வலையின் அங்கமே,
குளிர் நிழலுக் கொதுங்கிய மனிதனே..!

உன் தேவை; ஆசை; அடையும்
குறியில் செயல்படும் மனிதா, புவி
இயற்கை சம நிலை இழக்கும்
நிலைவரும், உன் செயலாலே..!

இயற்கையில் எதுவும் இயல்பில் இயங்கும்
இயற்கையின் இயல்பு சமநிலை காப்பது.
ஒன்றை யொன்றுத் உணவாய்த் திண்று
உணவுச் சங்கிலி உடையா வண்ணம்
வனத்தின் உயிர்கள் சமநிலை காக்கும்.
பசியின்றி உண்ணும்; உணர்வால் இயங்கும்;
மனிதப் பெருக்கம் சமநிலை குலைக்கும்.

இயற்கையில் எதுவும் அளவுக் கதிகம்
பெறுக்கம் கொண்டால் உண்வுச் சங்கிலி
யுடைப்டும்; விளைவு, இயற்கைச் சீறறம்
படை யெடுக்கும்; சமநிலை தனனை
நிலை நாட்டும்; விதி இதுவே..!

காடு, பூமித் தாயின் நுரையீரல்..!
புற்றுநோய்க் கிருமிகள் போல்
அரிக்கிறீர்களே பூமித் தாயிக்கு
வைத்தியம் பார்ப்பது யாரே..? யாரே..?.

இயற்கைச் சமநிலை கெடுப்பதும் நீயே..!
உணவுச் சங்கிலி உடைப்பதும் நீயே..!
பணத்தோடு வாழ்ந்து பழகிய மனிதா
மரத்தோடு வாழக் கொஞ்சம் பழகு.
வரும் சங்கதிகள் உன்போல் நிழல்
பெறச், செல்லும் போது சிந்திப்பாயே..!
-ச.சுதாகர்.