Wednesday, December 21, 2011

தியானம்.

சித்தத்தை, காலி செய்வது தியானம்;
நிரப்புவது அல்ல தியானம்.
மறப்பது தியானம்;
ஞாபகம் அல்ல தியானம்.

மனப்பதிவுகளை,
வேடிக்கைப் பார்ப்பது தியானம்,
பாதிப்படைவது அல்ல தியானம்.
மனதை, புத்திக்கு வசப்படுத்துவது தியானம்;
மனதை ஒடுக்குவது அல்ல தியானம்.

புத்தியால்,
பதிவுகளை களையெடுப்பது தியானம்;
விதைப்பது அல்ல தியானம்.
புத்தி எல்லையை கடந்து செல்வது தியானம்;
புத்திக்குள் சுருங்குவது அல்ல தியானம்.

செயலில்,
நோக்கத்தை கவனிப்பது தியானம்;
செயலின்,
எதிர்விளைவை சிந்திப்பது அல்ல தியானம்.
அகங்காரத்தை,
செயலின் கருவியாக்குவது தியானம்,
கர்த்தாவாவது அல்ல தியானம்.

இயற்கையின் சுபாவத்தை அறிவது தியானம்;
இயற்கையின் இயக்கத்தில்,
குறை காண்பதல்ல தியானம்.
சிந்தனை கோணத்தை மாற்றுவது தியானம்;
சிந்திப்பதை நிறுத்துவது அல்ல தியானம்.

ஆசைகளை கடந்து செல்வது தியானம்;
ஆசைகளை அடக்குவது அல்ல தியானம்.
உண்பது, உறங்குவது போல்,
காலச்செயல் அல்ல தியானம்.
மனம், மெய், மொழி வழி,
இயங்குவதே தியானம்.

மனதில்,
இறைவனுக்கு இடம் ஒதுக்குவது தியானம்;
இயற்கையோடு இசைந்து வாழ்வது தியானம்.

4 comments:

  1. @Sai prasad, தங்கள் வருகைக்கும், என்னை பாராட்ட எடுத்துக்கொண்ட சிரமத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. "செயலை செம்மைப்பைடுத்துவதற்கு தியானமல்ல, செயலில் கறைந்து போவதற்க்குத்தான் தியானம்". என்ற ஜென்னின் வரிகளை, தங்களது கவிதை நினைவுறச்செய்கிறது. தியானத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. @வே.சுப்ரமணியம்... தங்களின் மனம் திறந்த பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிற்து. தங்கள் வருகைக்கு நன்றி...!

    ReplyDelete