மா இலை டீ
தேவையானப் பொருட்க்ள் (ஒருவருக்கு):
ஒரு கப் தண்ணீர்.
2-3 இளம் மா இலைகளை சிறு துகள்களாகி 1 தேக்கரண்டீ.
தேயிலை 1/2 தேக்கரண்டீ.
பனங்கற்கண்டு தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைக்ககும். மா இலைத் துகள்களைச் சேர்க்கவும். 5 நிமிடம் வேகவிடவும். இப்போது தேயியலை சேர்க்கவும். 1-2 நிமிடங்களில் அடுப்பை அனைத்துவிடவும். ஆறிய பின் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.
பலன்கள்
காலையில் பருகினாள் அன்று முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். மன அழுத்தம் மறறும் சோம்பலைப் போக்கக் கூடியது. இதில் பாபின் என்னும், செரிமானத் திரவம் உள்ளதால் ஜீரணத்திற்கு உதவும். நீண்ட நாள்கள் நோய் வாய் பட்டு குணமானவர்கள், இதை தினநதோறும் பருகிவந்தாள் விரைவில் இழந்த சக்தியைப் பெருவார்கள். இரும்புச் சத்து அதிகம் கொண்டது. அதனால் பெண்கலுக்கு அதிகம் நன்மை பயக்கக் கூடியது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் மாதவிடாய் காலங்களில் பெரிதும் நன்மை செய்யக் கூடியது. அனிமீயா என்னும் இரத்த சோகை உள்ளவர்கள் பருகுவது நன்னைத் தரும். மாங்காயின் அனைத்துக் குண்ங்களும் மாயிலையில் உள்ளது. மா இலை டீயை பருகி மகிழுங்கள்.
No comments:
Post a Comment