Wednesday, February 9, 2011

எனக்குள் நீ... உனக்குள் நான்...
பயம், ஏக்கம், விரக்தி, ஏமாற்றம்
போன்ற உணர்வுகள் மேலோங்கும் போது,
நடைபழகும் குழந்தை இடறி விழுந்து,
தன்னைத் தூக்கித் தேற்ற, ஆதரவு தேடி அழுவது போல்,
மனம் நிம்மதிக்காக அடைக்களம் தேடுகிறது.
அள்ளி அணைத்து தேற்ற வரும் தன்னலமற்றத் தாய் போல்,
நம்மைத் தேற்றக் கடவுள் வருவதில்லை.
நாம் குழந்தையாக இல்லாததால்..!
முயற்சியில் தடை,
நம்மை முடக்குவதற்காக அல்ல,
மேலும் முன்னேற்ற, முடுக்கி விட,
கடவுள் தரும் கொடை..!
இந்தப் புரிதல் சக்தி இல்லாததால்,
இடறி விழும் போது குழந்தை அழுகிறது...!
தூக்கித் தேற்ற ஆதரவு தேடுகிறது..!
அப்போது, அன்னையாக கடவுள் நம்மோடு இருந்தார்;
நாம் அவருக்குள் இருந்தோம்.
இப்போதும், புரிதல் சக்தியாக கடவுள் நம்மோடு இருக்கிறார்;
இப்போது, அவர் நமக்குள் இருக்கிறார்..!

2 comments:

  1. வாழ்த்துக்கள்...
    படித்துக் கொண்டே இருக்கின்றோம்..
    எங்கள் வலைப்பூக்களையும் காணுங்கள்..
    www.chithiram.blogspot.com
    www.subramanyapuram.blogspot.com

    ReplyDelete
  2. @ m.kanthasamy... nandri..! nichchayam kaankiren..!

    ReplyDelete