காக்கை வளர்த்தாலும் மாறுமோ நெஞ்சமே
கார்குயில்
தேன்குரல் என்றைக்குமே**
யாக்கையுடன் வந்த பண்புமா சீரன்றோ
யாவரும் ஏதோ
ஒன்றுள்ளவரே**
இல்லை என்னும்
எண்ண மில்லாமல் போகவே
இன்றே நினைப்பில்
மாற்றம் செய் நெஞ்சே**
உள்ளதை எண்ணி
மகிழ்வோடு வாழ்கவே
உன்ஆசை எல்லாம்
மெய்யாகிடுமே**
பள்ளம் செல்லும் கலைதான்
எவர் சொன்னதோ
பள்ளிக்கூடம்
சென்று நீர் கற்றதோ**
வல்லவன் யாவிலும்
பேறுகாலம் உள்ளே
வைத்து வையம் படைத்தாரே நெஞ்சே**
வேர்இலை பூகாய்
பழம்கைகள் தூண்டியா
வித்தில்
ஒளிந்தது தென்பட்டதோ**
நீர் நிலம் தந்த ஊட்டம்
உருமாற்றமே
நீகொண்ட ஊக்கம்
உரம் போன்றதே**
ஆக்கம் நினைத்தே கலங்குவதும்
ஏனோ
ஆசையே ஆக்கும்
சூழல் செய்யுமே**
காக்கும்
திறன் பொறுத்தே வெற்றி யுள்ளதே
கண்முன் தோன்றும்
கனவில் உள்ளதே**
No comments:
Post a Comment