Thursday, December 28, 2017

விடாமுயற்சி

பக்தி நிறைந்த மதியோடு, சக்தி படைத்த விதியோடு, போராடு; மனம் வைத்து முயன்றால், ஊசி முனையும் மைதானம்; ஊசி காதும் ஆகாயம்.

Wednesday, December 27, 2017

ஆண்டவன்

வேண்டிய சமயம் விரும்பும் வாய்ப்பு வாய்ப்பதில்லை; ஆண்டவன் முயற்சி யறிந்து வாய்ப்பளிக்க தவறுவதில்லை!

Tuesday, December 26, 2017

வாழையிலை; வெற்றிலை

வைத்த வுணவை மருந்தாக்கும் மாயயிலை வாழையிலை! வித்தை யுணர்வை விருத்தியாக்கும் வித்தையிலை வெற்றிலை!

Thursday, December 21, 2017

மூன்றாவது கண்

முயலா தவர்க்கு முகத்தில் கண்கள் இரண்டு; முயல் வோர்க்கோ முகத்தில் கண்கள் மூன்று; மலர்ந்திருக்கும் பூவில் மணம்போல், முயல்வோர் காணும் யாவிலும், கலந்திருக்கும் வாய்ப்பை காட்டும், முயர்ச்சியெனும் மூன்றாவது கண்!

Saturday, December 16, 2017

நம்பிக்கை துரோகம்

சூரிய கிரகணத்தில் குழம்பும் காக்கையாய், நம்பியவர் மாறிய தருணத்தில் மனம் இருந்தது நம்பியவர்க்கு!

Thursday, September 14, 2017

தோட்டம்


மனவலி போக்கும் மருந்துகள் வாங்க
மருந்தகம் முகவரி கேட்டேன்
தினம் வணங்கும் இறையிடம்; அருளால்
தக்கதோர் விடைஉளம் உணர்ந்தேன்.
மன வோட்ட தடம் மாற்ற
மரக்கறி வளர்த்திட திட்டம்
மனவலி போக்கும் மருந்துகள் கிடைக்கும்
மருந்தகம் புழைக்கடை தோட்டம்