Tuesday, August 28, 2018

உள்நோக்கம்

உள்நோக்கம் தீதாய் ஊர்பார்க்க  நல்லதாய்
சொல்செயல் காட்டிடும்  சூது மனமே
நோக்கம் மறைத்திடும் நுட்பம் அறிந்தாலும்
சாக்கடை என்றும் தருமோ நறுமணமே 

Friday, August 24, 2018

தெய்வம்

மனமோ  குழம்பிடும்  நேரம்  வந்தமையும் நல்சூழ் நிலையே 
தினம் நம்பி வழிபடும்  தெய்வம் தரும் பாதுகாப்பு. 

Monday, August 20, 2018

தமிழ்



தமிழின்  சிறப்பு  தனை  யறிந்திட,
அமிலம் போல் ஆசை நெஞ்சறிக்க,
தொடங்கினேன் கற்க தொல் காப்பியம்;
குடம்தேன் எறும்பு குட்டிக்க முயல்வதுபோல்
எண்ணினேன், ஓர் எண்ணம் கொண்டேன்;
என் உயிர் உள்ள வரை,
உணவு போல் உயிர்மொழி தமிழை
மனம்தினம்  சுவைக்கும் வண்ணம் செய்யவே


Tuesday, August 14, 2018


எதிர் பாராத இன்ப நிகழ்வு. அண்ணா நகர் தமிழ்ப் பேரவை செயலாளர், தலைவர் , மறைமலை இலக்குவனார் அருகில்.