Monday, April 13, 2020

"2020 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!!"

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday, March 30, 2020

இயற்கை முறை


கதிரவன் தோற்றம் கலைக்க தூக்கம்
மதியதன் தோற்றம் மறுபடி தூங்க
வெயிலில் உழைக்க வேண்டிய வலிமையை
துயிலில் பெற்றிடும் துயரிலா வாழ்க்கை
இயற்கை முறையின் எதிர்திசை சென்று
செயற்கை முறையில் செய்த செயல்கள்
சேர்ந்து வலுத்து சீறிப் பாய
தேர்ந்து  செயல்பட தெரிந்தவர் சிலரே..

எதனில் ஆற்றல் இயல்பாய் இருக்குமோ,
அதனை தொழிலாய் ஆக்கி வருவாய்,
உதவிகள் செய்து உறவுகள் வளர்த்து,
பதற்ற நேரம் பாசம் காட்டி,
உடல்நோய் எதிர்ப்பு உறுதிசே மிப்பு
கடத்தினர் நாளை காத்தனர் இடரையே..!!!


Monday, March 2, 2020

நூலின் அட்டை படம் மாற்றப்பட்டுள்ளது...

https://kdp.amazon.com/en_US/bookshelf?ref_=kdp_BS_D_TN_bs                                                                                                                             

The book cover changed...
நூலின் அட்டை படம் மாற்றப்பட்டுள்ளது...

நன்றி..!!!

Monday, January 27, 2020

அலைகள்


துரத்தும் கடற்கரை, தொடர்ந்து வரும்அலை,
வரட்டும் வருவது, மகிழ்ச்சி அலைகளை,
எழுப்பும் மனநிலை, இருக்கும் வரையினில்,
எழுச்சி மனதுடன்  எடுக்கும்   முயற்சியில்,
அடைய நினைப்பதை அடைய முடியுமே,
மடைதகர் அலைகள் வழங்கிய படிப்பே...

Friday, January 24, 2020

கலப்படம்


கால்சூழ் கடலலை  கலைக்கும் மனநிலை,
போல்ஓர் அலைநிலை   பூமியில் விளைத்தாய்,
கலப்படம் காட்ட கடவுள் செய்த
அளந்திடும் அழகு அளவை நீயே.. 

Tuesday, January 14, 2020

"இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!!"

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday, January 6, 2020

அண்ணா நகர் தமிழ்ப் பேரவையின் 2020 ஆண்டின் முதல் நிகழ்வில்,  பேரவைக்கு பெரும் பணியாற்றிவரும் சுதாகர் அவர்களுக்கு தலைவர்  பாராட்டி சால்வை அணிவித்தபோது..