தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Sunday, January 15, 2023
Saturday, December 31, 2022
Wednesday, December 28, 2022
Friday, June 10, 2022
நெஞ்சமே...
காக்கை வளர்த்தாலும் மாறுமோ நெஞ்சமே
கார்குயில்
தேன்குரல் என்றைக்குமே**
யாக்கையுடன் வந்த பண்புமா சீரன்றோ
யாவரும் ஏதோ
ஒன்றுள்ளவரே**
இல்லை என்னும்
எண்ண மில்லாமல் போகவே
இன்றே நினைப்பில்
மாற்றம் செய் நெஞ்சே**
உள்ளதை எண்ணி
மகிழ்வோடு வாழ்கவே
உன்ஆசை எல்லாம்
மெய்யாகிடுமே**
பள்ளம் செல்லும் கலைதான்
எவர் சொன்னதோ
பள்ளிக்கூடம்
சென்று நீர் கற்றதோ**
வல்லவன் யாவிலும்
பேறுகாலம் உள்ளே
வைத்து வையம் படைத்தாரே நெஞ்சே**
வேர்இலை பூகாய்
பழம்கைகள் தூண்டியா
வித்தில்
ஒளிந்தது தென்பட்டதோ**
நீர் நிலம் தந்த ஊட்டம்
உருமாற்றமே
நீகொண்ட ஊக்கம்
உரம் போன்றதே**
ஆக்கம் நினைத்தே கலங்குவதும்
ஏனோ
ஆசையே ஆக்கும்
சூழல் செய்யுமே**
காக்கும்
திறன் பொறுத்தே வெற்றி யுள்ளதே
கண்முன் தோன்றும்
கனவில் உள்ளதே**
Thursday, May 26, 2022
Monday, March 2, 2020
Thursday, August 14, 2014
‘எல்லாம் மாற்ற மயம்’
எட்டும் வரை சேகரித்துத் தந்தத் தகவல்களை,
புரிந்து கொண்டு சிந்தித்து முடிவெடுக்கும் நேரத்திற்குள்,
பெற்ற அத்தகவல்கள் மாறிப்போகும் என்னும்
நித்திய உண்மை தெரியாமல் செயல்படும் மனம்,
கிணற்றுத் தவளை போல.
‘எல்லாம் மாற்ற மயம்’
என்பதை புரிந்து கொள்ளாது,
இரை பிடிக்க சிலந்தி பின்னும் வலை போல,
தன் சுயநல ஆசையை தீர்த்துக் கொள்ள,
புலன் அறிவை நம்பி,
அகங்காரத்தோடு செயல் புரிந்து,
மாற்றத்தால் முட்டு பட்டு,
முட்டு நீக்க முயன்று, அது சிக்கலாகி,
அச்செயல் சிக்கலில்,
சிலந்தியே தன் வலையில் சிக்கி கொள்வது போல்
மனம் சிக்கி,
விடுதலையை வெளியே தேடும்,
விடுவிப்பவரை எதிர்நோக்கி ஏங்கி நிற்கும்.
கண்ணுக்கும், காதுக்கும், நாசிக்கும்,
வாயிக்கும், தோலுக்கும்
எட்டாத தூரத்தில் தகவல்கள் இருக்கின்றன.
அவையும் நம் செயகளுக்கு முட்டாக அமையும்.
அந்த எட்டாத அறிவைத் தரும் புலன் பக்தி.
சுயநலத்தை சுத்தப்படுத்தும் தீ.
மனத்தில் ஆண்டவன் ஆட்சி அனுமதித்தால்,
எண்ணத்தில் சுயநலம் சேர்ந்திருந்தாலும், செயலாகும் போது
மாற்றத்தோடு ஒத்து சென்று
மங்காத பலனாக அமையும்.
பக்க விளைவில்லா சித்த வைத்தியம் போல.
Wednesday, December 21, 2011
தியானம்.
நிரப்புவது அல்ல தியானம்.
மறப்பது தியானம்;
ஞாபகம் அல்ல தியானம்.
மனப்பதிவுகளை,
வேடிக்கைப் பார்ப்பது தியானம்,
பாதிப்படைவது அல்ல தியானம்.
மனதை, புத்திக்கு வசப்படுத்துவது தியானம்;
மனதை ஒடுக்குவது அல்ல தியானம்.
புத்தியால்,
பதிவுகளை களையெடுப்பது தியானம்;
விதைப்பது அல்ல தியானம்.
புத்தி எல்லையை கடந்து செல்வது தியானம்;
புத்திக்குள் சுருங்குவது அல்ல தியானம்.
செயலில்,
நோக்கத்தை கவனிப்பது தியானம்;
செயலின்,
எதிர்விளைவை சிந்திப்பது அல்ல தியானம்.
அகங்காரத்தை,
செயலின் கருவியாக்குவது தியானம்,
கர்த்தாவாவது அல்ல தியானம்.
இயற்கையின் சுபாவத்தை அறிவது தியானம்;
இயற்கையின் இயக்கத்தில்,
குறை காண்பதல்ல தியானம்.
சிந்தனை கோணத்தை மாற்றுவது தியானம்;
சிந்திப்பதை நிறுத்துவது அல்ல தியானம்.
ஆசைகளை கடந்து செல்வது தியானம்;
ஆசைகளை அடக்குவது அல்ல தியானம்.
உண்பது, உறங்குவது போல்,
காலச்செயல் அல்ல தியானம்.
மனம், மெய், மொழி வழி,
இயங்குவதே தியானம்.
மனதில்,
இறைவனுக்கு இடம் ஒதுக்குவது தியானம்;
இயற்கையோடு இசைந்து வாழ்வது தியானம்.
Monday, June 6, 2011
எல்லோர்க்கும் எல்லாம் கிடைப்பதில்லை..!
Friday, February 18, 2011
சின்னச் சின்னச் சூரியர்களே..!
செடிகளே, கொடிகளே, தருக்களே,
என் மீது விழும் சூர்யக்கதிர்களை
உணவாக்கும் ஆற்றல் இல்லையே..!
அளவு சிறியதானாலும்
அந்த அருகம் புல்லின் கம்பிரம் உயர்ந்தது..!
உணவு தேடும் தேவை இல்லாததால் தான் நீங்கள் நகர்வதில்லையோ..!
சொந்தக் காலில் நிறபது என்பது இதுதானோ..!
சக்திக்காக சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் போல,
மனிதர்களும், மிருகங்க்ளும், மனிதமிருகங்களும்,
சுற்றி வரும் சின்னச் சின்னச் சூரியர்களே...
"கொன்றால் பாவம் திண்றால் போச்சு.." என்னும்
சித்தாந்தம்
"நட்டுவிட்டு வெட்டு.." என்று மாறும் காலம் எப்போது..?
.png)



.png)

