Showing posts with label quarantine. Show all posts
Showing posts with label quarantine. Show all posts

Monday, March 30, 2020

இயற்கை முறை


கதிரவன் தோற்றம் கலைக்க தூக்கம்
மதியதன் தோற்றம் மறுபடி தூங்க
வெயிலில் உழைக்க வேண்டிய வலிமையை
துயிலில் பெற்றிடும் துயரிலா வாழ்க்கை
இயற்கை முறையின் எதிர்திசை சென்று
செயற்கை முறையில் செய்த செயல்கள்
சேர்ந்து வலுத்து சீறிப் பாய
தேர்ந்து  செயல்பட தெரிந்தவர் சிலரே..

எதனில் ஆற்றல் இயல்பாய் இருக்குமோ,
அதனை தொழிலாய் ஆக்கி வருவாய்,
உதவிகள் செய்து உறவுகள் வளர்த்து,
பதற்ற நேரம் பாசம் காட்டி,
உடல்நோய் எதிர்ப்பு உறுதிசே மிப்பு
கடத்தினர் நாளை காத்தனர் இடரையே..!!!