Showing posts with label “Tamil poems”. Show all posts
Showing posts with label “Tamil poems”. Show all posts

Wednesday, March 17, 2021

தெய்வம்

நாளை என்ன நடக்குமென்று 

காலை பொழுதே  காண்பா ரில்லை

நேற்று நடந்த நிகழ்வை  தெளிவாய்

வேற்றுமை  யின்றி விளம்புவா ரில்லை

செய்த  செயலின் தீர்ப்பே பலன்கள்

செயல்பலன் தொடர்பு தெரியா அறிவில்

செய்த  திட்டம்  சிதறும் போது

தெய்வம் நம்பி திடமாய் முயல்க

திருத்தம் செய்து சிறப்பாய் அமைத்து 

கருத்தாய் காக்கும் கவலை விடுக

இன்றே  நாளை எட்டிப் பார்த்து

என்ன நன்மை என்ன தீமை

நேரு மென்று  நெஞ்சம் சொன்னால்

யாரும் தெய்வம்  என்றே எண்ணார்.


 "இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..!!!"🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Wednesday, October 21, 2020

இறை வணக்கம்

மிச்சம் வைத்த வேண்டுதல் முடிக்க

உச்சி வெயிலில் ஒதுங்க நிழலில்

கருங்கல் தரையில் கடவுள் மனையில்

திருவைக் காண திருப்பணி முடிக்க

உள்ளங் காலுடன் உள்ளமும்  தவிக்க

அல்லல் முடியும் அவ்வே ளைபார்த்து

ஏங்கும் மனநிலை இத்துயர் தந்தது

தாங்கும் திடமனம் தருவாய் திருவே..


Tuesday, October 20, 2020

அன்பு

மழைமுடி யதெரிய வரும்வெயில் அருமைபோல்,

பிழையாய் வந்த பிரிவில் தெரிந்தது,

வரவு கருதா மனதி லிருந்த 

 உறவின்  ஒளிந்த உள்ளன் புதானே…


Thursday, August 13, 2020

உணர்வு

 அன்பு ஆக்கும், அறிவு ஆளூம்;

அன்பு ஆசை, அறிவு அளவை;

அன்பு உணர்வு, அறிவு தரவு;

அன்பு வளையம், அறிவு  வரிசை;

அன்பு இணைக்கும் அனைத்தும்; அறிவு,

தன்மை அளந்து, தக்கது அனைக்கும்;

என்றும் பிரியா இணைவு, அறிவும் அன்பும்; ஒன்று அளவில் மிகஅப்,

பண்பினர் என்பர் பாரில். வாழ்வில்

இன்பம் இரண்டில் எதில்?உரக் கச்சொல்

உண்டு, உணர்வில், உணர்வில், உணர்விலே..!!!


Monday, March 30, 2020

இயற்கை முறை


கதிரவன் தோற்றம் கலைக்க தூக்கம்
மதியதன் தோற்றம் மறுபடி தூங்க
வெயிலில் உழைக்க வேண்டிய வலிமையை
துயிலில் பெற்றிடும் துயரிலா வாழ்க்கை
இயற்கை முறையின் எதிர்திசை சென்று
செயற்கை முறையில் செய்த செயல்கள்
சேர்ந்து வலுத்து சீறிப் பாய
தேர்ந்து  செயல்பட தெரிந்தவர் சிலரே..

எதனில் ஆற்றல் இயல்பாய் இருக்குமோ,
அதனை தொழிலாய் ஆக்கி வருவாய்,
உதவிகள் செய்து உறவுகள் வளர்த்து,
பதற்ற நேரம் பாசம் காட்டி,
உடல்நோய் எதிர்ப்பு உறுதிசே மிப்பு
கடத்தினர் நாளை காத்தனர் இடரையே..!!!


Monday, January 27, 2020

அலைகள்


துரத்தும் கடற்கரை, தொடர்ந்து வரும்அலை,
வரட்டும் வருவது, மகிழ்ச்சி அலைகளை,
எழுப்பும் மனநிலை, இருக்கும் வரையினில்,
எழுச்சி மனதுடன்  எடுக்கும்   முயற்சியில்,
அடைய நினைப்பதை அடைய முடியுமே,
மடைதகர் அலைகள் வழங்கிய படிப்பே...

Friday, January 24, 2020

கலப்படம்


கால்சூழ் கடலலை  கலைக்கும் மனநிலை,
போல்ஓர் அலைநிலை   பூமியில் விளைத்தாய்,
கலப்படம் காட்ட கடவுள் செய்த
அளந்திடும் அழகு அளவை நீயே.. 

Saturday, December 28, 2019

உணர்வு

காலை எழுந்ததும், கட்டிலா  மகிழ்ச்சி,
நாளை துவங்க நாட்டம் பொங்கி,
உள்ளே துள்ளியது உடலைத்  தள்ளியது,
எல்லாம் தினமும்  இயற்றும் பணிதான்,
நீல வானம், நீண்ட பயணம்,
காலத் தில்பிறர் கருணை;  உயர்மலை,
வறண்ட தொண்டை வாய்நீர்; அலைகிளி
நிறவயல்; குலையும் நிலைதரும் கால்சூழ்
கடலலை; மழைமண் கலக்கும் வாசம்;
தொடர்பிலா மழலை தூய  சிரிப்பு;
நான்தொ லைந்து நான்மீண் டநிலை;
தேன்நபர் வாசலில் திடீர்தோற் றம்இவை;
தரும்மன நிலை,சொல் தாண்டிய வுணர்வு,
திருசெய் கருணை தினமும் தொடரவே..!

Monday, December 16, 2019

என்ன மனமோ...


அண்டிப் பிழைத்து அளவு பெருத்ததும்,
கொண்ட வுறவைக்  குழியில் புதைத்து,
இன்னும் பெருக்க இடமே தேடுதே,
என்ன குணமோ என்ன   மனமோ..

Tuesday, September 17, 2019

தெய்வம்


நாளை என்ன நடக்கு மென்று
காலை பொழுதே  காண்பா ரில்லை
நேற்று நடந்த நிகழ்வை  தெளிவாய்
வேற்றுமை  யின்றி விளம்புவா ரில்லை
செய்த  செயலின் தீர்ப்பே பலன்கள்
செயல்பலன் தொடர்பு தெரியா அறிவில்
செய்த  திட்டம்  சிதறும் போது
தெய்வம் நம்பி திடமாய் முயல்க
திருத்தம் செய்து சிறப்பாய் அமைத்து
கருத்தாய் காக்கும் கவலை விடுக
இன்றே  நாளை எட்டிப் பார்த்து,
என்ன நன்மை, என்ன தீமை,
நேரு மென்று  நெஞ்சம் சொன்னால்
யாரும் தெய்வம்  என்றே எண்ணார்.

Thursday, September 5, 2019

மழை


கடந்ததில் செல்லும் கவனம் திருப்பி,
நடப்பு நினைத்திட, நம்முயல் தல்போல்;
மழைவிட்டு விட்டு வருகிறதே மண்ணில்
மழைக்கவனம் ஈர்க்க வளர்ப்போம் மரங்களை;
நாள்நிகழ்வு ஆசையால், நம்நெஞ்சை நம்மிடம்
வால்சுருட்ட  வைப்பது போல். 

Thursday, August 15, 2019

முயற்சி

ஒன்று அடைந்திட, ஓயா முயற்சியில்,
என்று அடைவேன் இறையே யறியேன்.
அறிவு அறியா அழையா தடைகள்;
முறிவு நிகழாது முன்னேற, தாய்போல்,
முயற்சி குறித்தப்பி முட்டாமல் நீள,
பெயர்ச்சி செயவே, பிடித்தது சேர்க்கவே,
உற்ற துணையாய், உளாய்யென நம்பியே,
வெற்றி வரைக்கும் விடாது முயல்வேன்,
இடுப்பி லிருந்து இறக்கிட ஓடும்
துடுக்குக் குழந்தையைப் போல்.

Saturday, August 10, 2019

"தெய்வ நம்பிக்கை".


எதிர்பாரா சூழல், எதிர்காலம் தாங்கும்
புதிர்விடை; யார்க்கு புதிர்பின் விடைமுன்.
நிகழ்பவை யாவுமே நேற்று நிகழ்வின்
தகவல் சுமந்திருக்கும், தப்பினால் நாளை
நிகழ்வின் அறிகுறி; நீயே கதியென
தெய்வ நினைவில் செயல்படும் யாவரும்
செய்யும் செயல்கள் திருத்தமாய் செய்ய
உணர்வால் உணர்த்துவார் உள்நின்று காக்கும்
உணர்வு மொழியில் உரையாடும் அப்பன்.
திடமாக நம்பினால், தெய்வ மடியில்
கிடக்கும் மழலை வாழ்வு.

Tuesday, February 12, 2019

எது சரி


இதுதான் சரியென ஏதுமில்லை பாரில்,
எதுஎனக்குச் சரியோ, என்றுமது யார்க்கும் 
இடரிலையோ, அஃதே எனதுசரி. யார்க்கும்
தொடர்ந்து பகல்பொழுது ஏது..!!!