தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Wednesday, April 25, 2018
வாழ்க்கை
எப்படியும் வாழலாம், எண்ணம்
இருப்போர்க்கு, இல்லை கவலை.
இப்படித்தான் வாழவேண்டும், எண்ணம்
இருப்போர்க்கு, கொள்கை கவலை.
குவித்த ஒளியில் கொளுத்திடும் சக்தியுண்டு, கொள்கையில்
குவிந்த மனம் கொண்டவர் வாழ்வில் திருப்தியுண்டு...
Tuesday, April 24, 2018
இறை வணக்கம்
நெறிகெட்ட மானிடர் சொல்
நினைவில் நிறுத்தாத நற்பழக்கம்,
அறிவு மயங்கா நிலையும்,
அடைய அருள்வாய் இறைவா..!!!
நினைவில் நிறுத்தாத நற்பழக்கம்,
அறிவு மயங்கா நிலையும்,
அடைய அருள்வாய் இறைவா..!!!
Thursday, April 19, 2018
சொற்கள்
உதவாவிட் டாலும் பரிவுடன்
ஒப்புக்குச் சொல்லிடும் சொற்கள்,
உதறலில் ஆடும் உளம்சற்று
ஓய்ந்திடச் செய்யும் மருந்துகள்.
ஒப்புக்குச் சொல்லிடும் சொற்கள்,
உதறலில் ஆடும் உளம்சற்று
ஓய்ந்திடச் செய்யும் மருந்துகள்.
Wednesday, April 18, 2018
மனிதர்
நிலத்தில் விழுந்த நிழல் போல் உடலிருக்க,
குளத்தில் விழுந்த நிழல் போல் நின்றேன்,
நீச்ச மகன்கை நீட்டி குறை சுமத்த.
கண்டேன் காணும் சிலர்மிரு கயினம் மனி தரல்லர்...Tuesday, April 10, 2018
Subscribe to:
Posts (Atom)