தொடர்ந்து கிளம்பிடும் எண்ணம் மனதில் தொடராமல் கொஞ்சம் உறையாதோ
தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Wednesday, February 28, 2018
வானம்
கடலில் அலைகள் உறைந்தது போல் கார்முகில் வானில் கிடந்தது
தொடர்ந்து கிளம்பிடும் எண்ணம் மனதில் தொடராமல் கொஞ்சம் உறையாதோ
தொடர்ந்து கிளம்பிடும் எண்ணம் மனதில் தொடராமல் கொஞ்சம் உறையாதோ
Saturday, February 24, 2018
மனம்
அந்நேரம் அனுபவங்கள் அத்தோடு மறக்கும் மிருகமனம்
எப்போதோ அனுபவங்கள் எப்போதும் இருக்கும் மனிதமனம்
சோர்வாக்கும் அனுபவங்கள் தொல்லைதீர மிருகமனம், வாழ்வை
சீர்செய்யும் அனுபவங்கள் சிந்திக்க மனிதமனம், வேண்டும்
Monday, February 12, 2018
புரிதல்
எங்கும் எறும்பு எதிலும் எறும்பு இல்ல மெல்லாம்,
எங்கும் எறும்பு மயம் எரிச்சல் உள்ள மெல்லாம்.
சென்றிற்று மழைநீ சேமிக்கஉழை என்றிற்று எறும்பு,
என்றோர் புரிதல் இருந்தால் எறும்பும் துணை,யில்லை தொல்லை.
Thursday, February 8, 2018
புரிதல்
சோற்றுக் வுத்திரவாதம் உடையோர்க்கு பசியளிக்கும் துன்பத்தால் விளையும் வாழ்க்கை புரிதல்வேறு
சோற்றுக்கு உத்திரவாதம் இல்லார்க்கு பசியளிக்கும் துக்கத்தால் விளையும் வாழ்க்கை புரிதல்வேறு
Tuesday, February 6, 2018
Friday, February 2, 2018
கடவுள் நம்பிக்கை
நினைத்தபடி நிகழ்வு நிகழாததால், வெறுத்து நெஞ்சம் கடவுள் நம்பிக்கை யிழக்க...
நினைத்தபடி நல்லவேளை நடக்கவில்லை, பின்புணர நெஞ்சில் நம்பிக்கைக்கு கிரகணமே...
Thursday, February 1, 2018
நிலவின் கிரகணம்
நிலவின் அழகை ரசிக்க நேர மின்றி உழைக்கும்
சிலருக்கு, நிலவு வழங்கும் சிறப்புக் காட்சி கிரகணமே.
பழக்கம்
இல்லை யென்றால் வழங்குவதும்
இல்லை இருந்தால் பார்த்து வாழ்த்துவதும்
இல்லை. அந்நபர்கள் பழக்கம்
இல்லை யென்றால் என்ன?
Subscribe to:
Posts (Atom)