தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Tuesday, September 7, 2021
Wednesday, March 17, 2021
தெய்வம்
நாளை என்ன நடக்குமென்று
காலை பொழுதே காண்பா ரில்லை
நேற்று நடந்த நிகழ்வை தெளிவாய்
வேற்றுமை யின்றி விளம்புவா ரில்லை
செய்த செயலின் தீர்ப்பே பலன்கள்
செயல்பலன் தொடர்பு தெரியா அறிவில்
செய்த திட்டம் சிதறும் போது
தெய்வம் நம்பி திடமாய் முயல்க
திருத்தம் செய்து சிறப்பாய் அமைத்து
கருத்தாய் காக்கும் கவலை விடுக
இன்றே நாளை எட்டிப் பார்த்து
என்ன நன்மை என்ன தீமை
நேரு மென்று நெஞ்சம் சொன்னால்
யாரும் தெய்வம் என்றே எண்ணார்.
Labels:
“corona,
“Tamil culture”,
“Tamil kathai”,
“Tamil Kavithai”,
“Tamil language”,
“Tamil poem”,
“Tamil poems”,
“Tamil”,
“Tamilnadu”,
coronavirus,
Covid,
covid19,
motivation,
vaccine
Tuesday, January 26, 2021
Monday, January 25, 2021
Saturday, January 23, 2021
Thursday, December 31, 2020
"AMAZON"னில் மின்னூல் வெளியீடு
வணக்கம்,
தாங்கள் என் வலைப்பூவிற்கு
வருகை தந்தமைக்கு நன்றி..!!!. மகிழ்ச்சி..!!!
தங்களின் விமர்சனங்கள்
எனக்கு மகிழ்சியும், ஊக்கமும் அளித்தன; அதற்கு அன்புகலந்த நன்றி..!!!
சில கவிதைகளை தொகுத்து,
"subastories கவிதை தொகுப்பு" என்ற தலைப்பில், மின்னூலாக (ebook)
, AMAZON இணைய தளத்தில் வெளியிட்டுள்ளேன்
என்பதை மகிழ்ச்சியோடு
தெரிவித்துக் கொள்கிறேன்.
AMAZON இணையதளத்திற்கு சென்று
subhastories அல்லது
sudhakar santhanam என்று type செய்தால் காணலாம்.
என்றும் தங்கள் நல்வரவை எதிர்நோக்கும்,
சுதாகர்.
https://www.amazon.in/SubhaStories-Tamil-Sudhakar-Santhanam-ebook/dp/B07KXXFKVV/ref=sr_1_1?ie=UTF8&qid=1545624976&sr=8-1&keywords=subhastories
https://www.amazon.in/SubhaStories-Tamil-Sudhakar-Santhanam-ebook/dp/B07KXXFKVV/ref=sr_1_1?ie=UTF8&qid=1545624976&sr=8-1&keywords=subhastories
Subscribe to:
Posts (Atom)



