Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, December 2, 2010

வித்தியாசமான அனுபவம்.


நிசப்தமான காலை வேலை. குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். அந்தக் குரல் என் கவனத்தை ஈர்த்தது.
"நீ பத்திரிக்கைக்கு போ... நீ கம்பியுடருக்குப் போ... நீ I .A .S . க்கு போ..." என்றது ஒரு ஆண் குரல்.
"நான் பத்திரைக்குப் போறேன்... இல்ல, I .A .S. க்கு போறேன்... ஆனா கம்ப்யுடருக்குப் மட்டும் போமாடேன்.." என்றது ஒரு பெண் குரல்.
"ஏம்மா நீ கம்ப்யுடருக்குப் போறியா..." என்றது அதே ஆண் குரல்.
"பத்திரிக்கைக்கு போறேன்... ஆனா கம்ப்யுடேருக்குப் போமாட்டேன்..." என்றது இன்னொரு பெண் குரல்.
"சரி நீயாவது கம்ப்யுடருக்குப் போயாம்மா..!" என்று கெஞ்சலாக கேட்டது அதே ஆண் குரல்.
"இல்ல... வந்து..." என்று இழுத்தது மற்றொரு பெண் குரல்.
இந்த உரையாடல் என் கடந்த கால பதிவுகளை நினைத்துப் பார்க்கும் படி செய்தது.
கணிணித் துறை வளர ஆரம்பித்துக் கொண்டிருந்த காலம் அது. நானும் என் நண்பரும் வணிகம் பயின்றோம். நான் ஒரு கூரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்குச் சென்றுவிட்டேன். வழியில் ஒரு நாள் அந்த நண்பனைப் பார்க்க நேர்ந்தது.
"ஏய்... எப்படி இருக்க..? என்ன பண்ற..?" என்றேன்.
"நல்லா இருக்கேண்டா... இப்ப கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டிருக்கேன்... கோர்ஸ் முடிஞ்சதும் அவங்களே வேல வாங்கி குடுத்திடுவாங்க... நீ என்னப் பண்ற...?" - இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க புறப்பட்டோம்.
பிறகு ஓராண்டு கழித்து ஒரு நாள் அந்த நண்பர் என்னைப் பார்க்க வந்தார்.
"எனக்கு கலிபோர்னியாவுல இருக்கிற சாப்ட்வேர் கம்பெனில வேல கிடைச்சிடுச்சி... இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான் இங்க வருவேன்... நாளைக்கு நைட் ப்ளைட்..." என்றார்.
ஐந்தாண்டுகள் ஓடிவிட்டது. இன்று அவர், உலகின் மிகப் பெரிய கணிணி நிறுவனத்தில், உயர்ந்த பதவில், என் ஓராண்டு சம்பளத்தை ஒரு மாத சம்பளமாக வங்கிக் கொண்டிருக்கிறார். எனக்கு அப்போது அந்தத் துறையின் அருமை தெரியவில்லை. இன்று நான் பொருட்களை சந்தை படுத்தும் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.
வேறு எந்தத் துறையில் இருக்கும் ஒருவர், பத்து ஆண்டுகளில் அடையக் கூடிய வளர்ச்சியை, கணிணி துறையில் இருக்கும் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்குள் அடைந்து விடுகிறார். காரணம் கணிணித் துறையில் கிடைக்கும் சம்பளம் போல வேறு எந்தத் துறையிலும் கிடைப்பது இல்லை.
இன்று உலகமே கணிணி மயமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாம் தேர்ந்தேடுக்கும் துறை தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்த சிந்தனையோடு அந்தக் குரல் வந்த திசை நோக்கி சென்றேன்.
அங்கே ஒரு முதியவர் நின்றிருந்தார். எதிரில் முன்று பெண்மணிகள் நின்றிருந்தனர்.
"இருக்கறது மூணு பேரு... இப்டி எல்லாருமே பத்திரிக்கைக்கும், I .A .S. க்கும் போயிட்டா, அப்புறம் யார் தான் கம்ப்யுடர பாத்துக்கறது..? நீ கம்ப்யுடேருக்குப் போமாட்டேன் சொல்றதுக்கு, எனக்கு காரணம் சொல்லு..." என்று நடுவில் நின்றிருந்த பெண்மணியைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர்.
"முடியில சார்... கொடத்த தூக்கினு மூணு மாடி ஏற முடியல... இடுப்பு உட்டு போவுது... அந்தே பெரிய ஹால குனிஞ்சு நிமுந்து கூட்ட முடியல சார்... பத்திரிக்கையும், I .A.S . சும் கியவே இருக்குது... மாடி ஏறுற வேல இல்லை... இந்த ரெண்டுத்தல ஏதாவது ஒண்ணுல டுட்டி போட்டு குடு சார்..." என்றார் நடுவில் நின்றிருந்த பெண்மணி பாவமாக.
"சரி..., நீ பத்திரிக்கைக்கே போ..." என்று புலம்பிய பெண்மணியை அனுப்பிவைத்தார்.
இந்தாமா... எனக்காக நீ இன்னிக்கு கம்ப்யூட்டர் போ..." என்று அந்த மூவரில் சற்று வயது குறைவாக இருந்த பெண்மணியை பார்த்து சொன்னார். அவரும் அமைதியாகச் சென்றார். முன்றாமவரை I .A .S . சுக்கு அனுப்பிவைத்தார்.
ஆயாக்களுக்கு வேலையை பிரித்து கொடுத்துவிட்டு நிமதியாக நாற்காலியில் அமர்ந்தார் நூலகர்.

Sunday, August 16, 2009

'அந்த' அனுபவம்.

பதினெட்டு வயதைக் கடந்து பல வருடங்கள் கழிந்த பிறகு, இன்று தான் 'அந்த' அனுபவம் பெற வாய்ப்பு கிட்டியது . எத்தனையோ நாட்கள் எண்ணியிருந்த ஆசை, இன்று நிறைவேறப் போகிறது . சிறுவயதில் எப்படியோ என்னுள் விழுந்த பொறி இன்று பெரிய நெருப்பாய் மாறி என் மனத்துள் கனன்று கொண்டிருந்தது . என் உடல் முழுவதும் உஷ்னம் பரவி, ஜிவ்வ் வேன்றுருந்தது .


ஆனால், அந்த இடத்திற்குப் போவதை யாராவது பார்த்து, வீட்ல தெருயபடுத்திவிட்டால் என்ன ஆகுமோ அன்ற பயம் மனதைக் கவ்வுயது. எத்தனை நாட்கள் தான் பயந்து, பயந்து ஆசையை அடக்கி வைப்பது. நம் உயிர் வாழ வரையறுக்கப்பட்ட நாட்க்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியாது;  அடுதத  விநாடி நிகழப்போவது என்ன என்பதும் தெரியாது.  இப்படி வாழ்க்கை நிலையில்லாமல் இருக்க , சந்தர்ப்பம் கிடைக்கும் போது நம் ஆசைகளை நாம் ஏன் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.


நான் நான்கு முறை செய்திருக்கிறேன்;  நான் முன்று செய்திருக்கிறேன், என்று நண்பர்கள், மார்தட்டிக் பெருமிதப்படும் போது, நான் இந்த இருபத்தியெட்டு வயதுவரை ஒரு முறை கூட செய்யவில்லையே என்று எண்ணும்  போது வெட்கமாகவும், அவமானமாகவும் இருக்கிறது. இத்தனை நாட்கள் உயிர் வாழ்ந்து என்ன சாதித்தேன்..? சாவதற்குள் இதையாவது செய்து விடுவோம் என்ற தீர்மானத்துடன் ‘அந்த’ கட்டிடத்துக்குள் நுழைந்தேன்.


அங்கே குழுமியிருந்தவர்களை பார்த்ததும் ஆ..! என்ன இவ்வளவு பேரா என்று வியப்பாக இருந்தது. மனதுக்கு கொஞ்சம் பலம் வந்தது போலவும் இருந்தது. சைக்கிளை ஓரமாக நிருத்த்திவிடு, தயங்கி தயங்கி, ஓர் ஓரமாக சென்று நின்றேன்.


என்னைவிட வயதில் சிறியவர்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்த போது, இத்தனை வருடங்கள் வீணாக்கியதை எண்ணி வருந்தினேன். இவ்வளவு நேரம் கொண்டிருந்த பயம் அர்த்தமற்றது என்பதையும் உணர்ந்தேன்.  இத்தனை நாட்கள் வளர்ந்த இந்த உடலின் பயனை இன்று அனுபவிக்கப் போவதைக் நினைத்து மனம் ஆனந்தத்தில் மிதந்தது.


"எல்லோரும் அந்த ரூமுக்கு போங்க.."  என்ற அந்தக் குரல் என் சிந்தனையை கலைத்தது.


ஓர் அறையில் சென்று அமர்ந்தோம், அங்கெ சில பெரும் புள்ளிகளும் அமர்ந்திருந்தனர். என்ன இவர்களுமா..! என்று  பிரம்மித்தேன். அவர்களில் ஒருவர் எழுந்து பேசத் தொடங்கினார்..


"...   இதனால் நோய் எதுவும் வாராது, இவங்க ரொம்ப சுகாதார முறையில் நடத்திராங்க.... நான் பல தடவை செஞ்சிருக்கேன்...  என் உடம்புக்கு எந்த கெடுதலும் வரல ... நான் நல்லான் இருக்கேன்; எல்லாம் முடிஞ்சதும்  பழைங்களும்  குளிர் பானமும்  கொடுப்பதற்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க,  களைப்பு நீங்கி மகிழ்ச்சியா வீட்டுக்குப் போகலாம். உங்க அனுபவத்த உங்க வீட்டுக்கு,  அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கும்  தெரிந்தவங்களுக்கும்  சொல்லி,  அடுத்த முறை அவங்களையும்  கட்டாயம்  அழச்சிக்கிட்டு  வரணும்... "


மனம் அங்கிருந்தத அறைகளில் எந்த அறையில் நாம் செல்ல வேண்டுமஎன்கிற எண்ணத்திலேயே இருந்ததால்,  அவர் பேச்சில்,  இவற்றைத் தவிர  வேறு எதுவும் என் காதில் விழவில்லை.


இந்த அனுபவத்த  வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட  சொல்லி அழைச்சிகிட்டு வரச் சொல்ராரே. இத வீடுல சொன்ன களேபரம் உண்டாகுமே இதப்போய்  எப்படிச் சொல்றது என்று எண்ணிக் கொண்டிருக்கையில்...


"எல்லலரும் அந்த ரூம்ல போய்  செக்-அப பண்ணிக்குங்க..." என்றது ஒரு குரல்.


"செக்-அப் எதற்கு...  அய்யயோ..! என்ன செய்வாங்களோ.." என்று  மனம் பதைப்பதைத்தது.


அந்த அறையில் நான்கு டாக்டர்கள், மூலைக்கொருவராய் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவரிடம்  சென்றேன்
"கைய நீட்டுங்க..." என்றார்.


முழ்ங்கைக்கு மேல், பச்சை நிறத் துணியை அழுத்தமாக சுற்றி ப்ரேஷர் பார்த்தார்


"நார்மல்...கடந்த அறு மாததில் மஞ்சல் காமாலை, டைப்பாயிட் வந்திருக்கிறதா..?" என்றார்


"இல்லையே..." என்றேன்.


"சரி, அந்த  ரூமுக்குப் போங்க..." என்றார்.


அந்த அறையில் பன்னிரண்டு கட்டில்கள் போட்டிருந்தது. எதில் படுப்பது என்று விழித்தவாறு சென்றேன்.


"ஹலோ.." என்ற பெண் குரல் அழைப்புக் கட்டுத திரும்பினேன்.
உதட்டுச் சாயம் பூசி ஒய்யாரமாய் நின்றிருந்தாள்.  குண்டர் சட்டத்தில் கைதானவன் போல் ஒருவன், அவளருகில் நின்றிருந்தான்.


"படுத்துக்கப்பா.." என்றான் அந்த தடியன்.


"எப்படியிருக்குமோ... என்ன பண்ணுமோ..."என்ற மந்திரத்தை மனம்  ஜபித்துக் கொண்டே இருந்தது.


என் வலது கையை மெல்ல இழுத்து, பட்டைத் துணியால், முழங்கைக்கு மேல் இறுக்கமாக சுற்றினான்.  அந்தப பெண்,  அருகில் இருந்த  'பவுச்'சை எடுத்து தாழ்த்திப் பிடித்துக் கொண்டு, அதிலிருந்த  குழாயை  நீட்டி, அதன் முனையில் இருந்த ஊசியை என் முழங்கையில் புடைந்திருந்த ரத்தக் குழாயில் வலிக்காமல் செருகினாள்.


பள்ளம் கண்ட நீரைப்போல் ரத்தம் விரைந்து சென்று 'பவுச்'சை நிறைக்கத் தொடங்கியது. மனம் பஞ்சு போல் லேசானது. இத்தனை நாட்கள் எண்ணியிருந்த ஆசை நிறைவேறியது.