Wednesday, August 31, 2022

 " இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..!!!"🙏🙏🙏

Friday, June 10, 2022

நெஞ்சமே...



காக்கை வளர்த்தாலும்  மாறுமோ நெஞ்சமே

கார்குயில் தேன்குரல் என்றைக்குமே**

யாக்கையுடன்  வந்த பண்புமா சீரன்றோ

யாவரும் ஏதோ ஒன்றுள்ளவரே**

இல்லை என்னும் எண்ண மில்லாமல் போகவே

இன்றே நினைப்பில் மாற்றம் செய் நெஞ்சே**

உள்ளதை எண்ணி மகிழ்வோடு  வாழ்கவே

உன்ஆசை எல்லாம் மெய்யாகிடுமே**

பள்ளம் செல்லும்  கலைதான்  எவர்  சொன்னதோ

பள்ளிக்கூடம் சென்று நீர் கற்றதோ**

வல்லவன் யாவிலும் பேறுகாலம் உள்ளே

வைத்து  வையம் படைத்தாரே நெஞ்சே**

வேர்இலை பூகாய் பழம்கைகள்  தூண்டியா

வித்தில் ஒளிந்தது   தென்பட்டதோ**  

நீர் நிலம்  தந்த ஊட்டம்   உருமாற்றமே

நீகொண்ட ஊக்கம் உரம் போன்றதே** 

ஆக்கம் நினைத்தே  கலங்குவதும்  ஏனோ 

ஆசையே ஆக்கும் சூழல் செய்யுமே**

காக்கும் திறன் பொறுத்தே வெற்றி யுள்ளதே

கண்முன் தோன்றும் கனவில்  உள்ளதே**     

Thursday, May 26, 2022

அன்பு

 ஆண்டாண்டாய் வாழ்ந்தும் நீரில் ஒட்டுமோ பாசி...

அன்பின் கனத்தைக்  காலம் காட்டுமோ..!!!

Saturday, September 11, 2021

உள்ளுணர்வு.

ஒப்பிலான் மொழியே உள்ளுணர் வுஅதை 

தப்பிலா தறிந்து  தரணியில் வாழ்பவர்

வாழ்வு,  நெடிது மழலை வேண்டி 

வாழ்பவர் பெற்ற மழலை போலே.