தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Monday, May 9, 2016
உழைப்பே உன்னதம்
குறிப்பு: இக் கவிதை "தினமணி" வலைத்தளத்தில் "கவிதை மணி" எனற பகுதியில் வெளியானது.
உழைப்பே வாழ்வின் உன்னதம்
உழைப்புக்கு உண்டு ஊதியம் ;
ஊக்கத்துடன் முயற்சி செய்,
ஊரும் எறும்பாய் வாழ்;
ஊழ் விலகும் பார்..!
ஊசி முனையும் மைதானம்,
ஊசி காதும் ஆகாயம்,
உறுதி யுள்ளம் உடையோர்க்கே..!
உள்ளச் சோர்வு உதறு!
உள்ளம் தளரும் நேரம்
உறுதுணை பகவன் பாதம்
உனக்கும் ஒருநாள் விடியும்.
ஊரே உன்பெயர் சொல்லும்
உலகம் முழுதும் கேட்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment