தமிழ் மரபுக் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீகம், தத்துவம், யோகா கட்டுரைகள் — வாழ்க்கையின் உண்மைகளை உணர்வோடு பகிரும் subhastories தமிழ் வலைப்பதிவு.
Friday, April 8, 2016
தடைகள் தாண்டி தடம் பதித்திடு..!
புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.
தடைகள் தாண்டி தடம் பதித்திடு;
இடர்கள் தாவி இடம் பிடித்திடு;
கெடுப்பவ ரெண்ணம் கெட வுயர்ந்திடு;
இறை துணை யுண்டுத் துணிந்திடு..!
இனி இலக்கு நோக்கிப் புறப்படு,,!
கொடுப்பார், காப்பார், படைத்த்வர் உனனையே..!
எடுத்த காரியம் வெற்றி அடைய
கடக்க வேண்டும் மூன்று படியை
ஏளனம் எதிர்ப்பு ஏற்றுக் கொள்ளல்
உரைத்தது சுவாமி விவேகா னந்தர்
தீரர் அருள்மொழி மனதில் நிறுத்தி
தளரா மனதுடன் முயற்சி முடுக்கு
தடைக்கல் யாவும் தவிடா கிடுமே..!
நினைத்த காரியம் முடித்திட பக்தியில்
எடுத்த முயற்சி தடை பட
வைத்த மனிதனோ, சகுனமோ, சூழலோ
தடுத்த கடவுளே! வரப்போகும் இழப்பையே.
விளை வில்லாத செய லில்லை
பலன னில்லாத் பாடி லில்லை
இறைபோ லிங்கொரு துணை யில்லை
பக்தியோடு முயன்ற காரியம் வெற்றியே..!
-சுதாகர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment