Wednesday, January 24, 2018

இயல்பு

வெள்ளம் பள்ளம் தேடும், வெப்பம் குளுமைத் தேடும். உள்ளம் இயல்பு கண்டு உறவை வளர்க்க வேண்டும்.

Tuesday, January 23, 2018

இறைவன்

எதிர்பார்க்காத தடங்கல் ஏற்பட, நான், என்ன செய்வதென்று கலங்க, அச்சமயம் எதிர்பார்க்கவில்லை தடங்கல் நீக்க நலம்விரும்பி எதிர்வருவதையே. உணர்தேன் இறைவன் இருப்பதையே...

Monday, January 22, 2018

நம்பிக்கை

தண்ணீர் உத்தரவாதம் இல்லாத இடத்தில் சகிக்க யியலாத தாகம் கொண்டவன் மனநிலை கொண்டேன், நம்பியவர் கொடுக்காமல் உதாசீனித்த வேளை...

Thursday, January 18, 2018

பக்தி

உலக யியக்கம் ஓயாமல் இயங்க எத்தனையோ விதிகள் இருக்கும். நலமாக நினைத்தபடி நாம்வாழ பக்தியோடு செயல்படுவோம். விதிப்பற்றி கவலையென்ன...

Wednesday, January 17, 2018

திட்டம்

கருவுக்குள் இருக்கும் காலம் வரையில் குளிர்வெப்பம் பாதிப்பில்லை குழந்தைக்கு; கருத்தில் இருக்கும் காலம் வரையில் இயற்கைவிதி பாதிப்பில்லை திட்டத்திற்கு.

Tuesday, January 16, 2018

நோக்கம்

குடும்ப வறுமை போக்க ஒருகூட்டம்; குடும்பப் பெருமை சேர்க்க ஒருகூட்டம்; எடுத்த முயற்சி நோக்கம் வேறாகும், இரண்டு தரப்பின் தர்மம் வேறாகும்.

Friday, January 12, 2018

செயல் பலன்

செய்யும் செயல் செய்யும் நேரம் பொறுத்து பலன்விளையும் காலம் மாறும். வெய்யில் துவங்கும் வேளைதுவைத்த துணிமாலை வேளைதுவைத்த துணிகாயும் நேரம் சான்றாகும்.