Tuesday, April 5, 2016

உழவன் என் தோழன்


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

நீயே என் உயிர்த் தோழன்..!
நீ நான் பழக வில்லை;
ஓர் நாள் உண வில்லை;
உயர் குணம் எழ வில்லை;
உன் நெல் வியிறு செல்ல,
என் குணம் நேர் செல்ல,
உதவி செய்த வகை யிலே,
நீ என் உயிர்த் தோழனே..!

ஏறு வில்லாலே, பயிறு அம்பாலே
பஞ்ச சூரனை
போரில் அழிக்கவே..,
தினம் வயலில்
பாடு படும்
வீரனே! நீ
மனித குலம் காக்கும் தோழனே..!
நீ உலகிற்க்கே வுயிர்த் தோழனே..!
-சுதாகர்


Monday, April 4, 2016

சோதனைகள் பல கடந்து


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

சோதனைகள் பல கடந்து
உயிர் பிழைக்க இயலுமோ
குல தெய்வம் காக்க..!
குரு தெய்வம் காக்கவே..!

எந் நேரம் மரணம்
எனைத் தழுவ நேரும்
என் அறிவால் ஆவது
இனி யொன்று மில்லை
நான் வணங்கும் தெய்வம்
நன்மையைத தான் செய்யும்..!
நிச்சயம் ஏதோ நிகழும்
என் உயிர் பிழைக்கும்..!
மனம் கலங்கி யிருக்க,

கதி யற்று முழிக்க,
இக் கட்டுப் போக்க ,
விதி மாற்றி வைக்க,
கோள் கட்டி யாளும்,
படி அளக்கும் தெய்வம்,
பதம் சரணா கதி..!
-சுதாகர்


Sunday, April 3, 2016

இனி இது தான் எதிர்காலமோ..!


புகைப்படத்திற்கு எழுதிய கவிதை.

இனி இது தான் எதிர்காலமோ..!
பறவையும் விலங்கும்
படத்தில் வாழ
பாலை வனத்தில்
நாம் வாழ
காடழித்து பெற்ற பலன் இதுவே..!

பூமித் தாயின் நுரையிரல் காடு..!
புற்று நோய்க்
கிருமிகள் போல்
நாம் அரித்துக்
கொண்டிருக் கிறோம்.
அன்னைக்கு வைத்தியம் பார்ப்பது யாரே..?.


Tuesday, March 22, 2016

யோகம்

தலையில் கனம்கபம் தரும் மடம்;
மடியில் கனம்மலம் தரும் சினம்;
இடையில் மனம்வலம் தரும் துன்பம்
விலக, நலம்தரும் யோகம் பழக,
நிலவும் வாழ்வில் சுகமே தினமே.


Monday, March 21, 2016

பக்தி

நினைத்த காரியம் முடித்திட பக்தியில்
எடுத்த முயற்சி தடை பட
வைத்த மனிதனோ, சகுனமோ,சூழலோ
தடுத்த கடவுளே! வரப்போகும் இழப்பையே.


Monday, January 18, 2016

புதுமைப் பொங்கல்

தைநாளில் வடக்கு திரும்பும் தினகரா,
விதைத்த நெல்லை வளர்த்து தந்த பகலவா;
அறுத்த நெலலில் பொங்கல் வைத்தோம் விகத்தகா,
தைப்பொங்கல் ருசிக்க கொஞ்சம் இறங்கிவா;
ஆசிதந தருள வேணும் மித்திரா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!

கதிராலே அறிவு தூண்டும் கதிரவா,
மண்டைப் பானை யண்ண நெல்ல அழலவா;
அன்பு வடுப்பில் பொங்க வச்சோம் ஆதவா,
நல்லெண்ணம் பொங்குதுப் பார் உண்ணவா;
நல்ல காலம் பொறக்க வருள் செய்யவா.

விவசாயி நெல்லு பொங்கல் கண்டவா..!
தொழிலாளி புதுமைப் பொங்கல் காணவா..!


Monday, January 11, 2016

இனி ஒரு விதி செய்வோம்

அறியாமை மேகம் மறைக்க,
அறிவுச் சூரியன் மங்க,
ஆசை ஆட்டுவித்த ஆன்மாக்கள்,

ஆற்றிய சுயநலச் செயல்கள்,
நல்லோர் நலனை சிதைக்க!
தீயோர் குலத்தை ஒடுக்க,
இனியொரு விதி செவோம்.

கல்வி யாயுதம் செய்வோம்,
காசில் லார்க்கும் தருவோம்;
ஞான தானம் செய்வோம்.

அறியாமை மேகங்கள் அகலும்,
அறிவுச் சூரியன் மின்னும்.
அமைதி எங்கும் நிலவ,
இனி ஒரு விதி செய்வோம்

குறிப்பு:

இக்கவிதை தின மணி இணையதள "கவிதைமணி" என்ற பகுதியில் இந்த வார தலைப்புயில் வெளியானது.