Monday, August 17, 2009

அங்கே குழுமியிருந்தவர்களை பார்த்ததும் என்ன இவ்வளவு பேரா? என்று வியப்பாக இருந்தது. மனதுக்குக் கொஞ்சம் பலம் வந்தது போலவும் இருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து, ஓர் ஓரமாக சென்று நின்றேன்.
என்னைவிட வயதில் சிறியவர்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்தபோது, இத்தனை வருடங்கள் வீணாக்கியதை எண்ணிவருந்தினேன், இவ்வளவு நேரம் கொண்டிருந்த பயம் அர்த்தமற்றது என்பதை உணர்ந்தேன். இத்தனை நாட்கள் வளர்த்த இந்த உடலின் பயனை இன்று அனுபவிக்கப் போவதை நினைத்து மனம் ஆனந்தத்தில் மிதந்தது.
எல்லோரும் அந்த ரூமுக்கு போங்க.. என்று அந்தக் குரல் என் சிந்தனையை கலைத்தது.
ஓர் அறையில் சென்று அமர்ந்தோம். அங்கே சில பெரும் புள்ளிகளும் அமர்ந்திருந்தனர். என்ன இவர்களுமா.. என்று பிரம்மித்தேன், அவர்களில் ஒருவர் எழுந்து பேசத் தொடங்கினார். "... இதனால நோய் எதுவும் வராது, இவங்க ரொம்ப சுகாதார முறையில நடத்தறாங்க நான் பல தடவை செஞ்சியிருக்கேன், என் உடம்புக்கு எந்த கெடுதலும் வரல... நான் நல்லாத்தான் இருக்கேன் . எல்லாம் முடிந்ததும் பழங்களும் குளிர்பானமும் கொடுக்க ஏற்பாடு செஞ்சியிருக்காங்க.. களைப்பு நீங்கி மகிழ்ச்சியா வீட்டுக்கு போகலாம். உங்க அனுபவத்தை உங்க வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சொல்லி, அடுத்த முறை அவங்களையும் கட்டாயம் அழச்ச்கிட்டு வரணும்..
தொடரும்...

No comments:

Post a Comment