நம் வீடு சுத்தமாக இருந்தால் மட்டும் போத்தாது நாம் வசிக்கும் சுற்றுச் சூழலும் சுத்தமாக இருக்கு வேண்டும் என்ற எண்ணத்தை தன் மகள் திருமணத்திற்கு வரும் சொந்த பந்தங்கள் மனங்களில் விதைக்க சிறு முயற்சி மேற்கொண்டார்.
தாம்பூலம் கொடுக்கும் இடத்தில் ஒன்ற்றை அடி பச்சை மற்றும் சிவப்பு பிளாஸ்டிக் தொட்டிகளை அடுக்கி வைத்தார். பச்சைத் தொட்டியில் “மக்கும் குப்பை” என்றும் சிவப்புத் தொட்டியில் “மக்காத குப்பை” என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் “மக்கும் குப்பை”யை உரமாக்குவது எப்படி; “மக்காத குப்பை”யை பணமாக்குவது எப்படி என்ற தகவல்கள் அடங்கிய “குப்பை மேலாண்மை” குறித்த சிறு புத்தகத்தையும் வைத்திருந்தார்.
திருமணம் முடிந்ததும், தாம்பூலம் பெற வந்தவர்களுக்கு தாம்புலத்துடன் ஒரு பச்சை மற்றும் சிவப்பு தொட்டிகளுடன் “குப்பை மேலாண்மை” புத்தகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.
குப்பைகளால் சுற்றுச் சூழல் மாசுபடாதிருக்க தன்னால் இயன்ற அளவு சிறு முயற்சி செய்த மன மகிழ்ச்சியோடு மகளின் திருமணத்தை நடத்தி முடித்தார்.
-ச.சுதாகர்